தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jun 9, 2011

கடவுளுக்கும் மூளை உண்டா?

09-06-2011

 ‘விதி’ பற்றிய இடுகையைத் தொடர்வதற்கு முன்னால் ஒரு கேள்வி....................

                                    
                                     கடவுளுக்கும் மூளை உண்டா?

உயிர்களுக்குப் ‘புலன்கள்’ உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், அவற்றால் உருவாக்கப்படும் ஒலிகளை உள் வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும்[மெய்] உதவு கின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ ஓர் உயிரினத்தைப் பொறுத் தவரை மூளைதான் எல்லாமே.

உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிரினங்களின் அனைத்துச் செயல் களுக்கும்  மூளையே ஆதாரம்.

மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு புதியனவற்றைப் படைப் பதற்குப் பயன்படுவதும் இந்த மூளையே.

ஆக, அறிவதற்கும் உணர்வதற்கும் படைப்பதற்கும் மூளை ஓர் இன்றியமையா தேவை ஆகிறது.

அனைத்தையும் அறிந்து வைத்து, படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைச் செய்கின்ற தீராத விளையாட்டுப் பிள்ளையான கடவுளுக்கும் இந்த மூளை இருக்கும்தானே?

இம்மாதிரி, அடிப்படைக் கேள்விகளுக்கு விடை தெரியாமல் பொத்தாம் பொதுவாகக் கடவுளை நம்புவது அறிவீனம்.

கடவுளின் மூளை எத்தன்மையது?

உயிர்களின் மூளையைவிட, ஆறாவது அறிவு படைத்த மனிதனின் அபார மூளையைக் காட்டிலும் அவருடைய மூளை மிக மிக மிக.......................................
நுட்பமான, அதி அற்புதமான, அளவிட முடியாத சக்தி படைத்ததாகத்தானே இருக்கும்!

மூளை என்று ஒன்று இல்லாமல்,அதைவிட சக்தி வாய்ந்த நுட்பம் மிகுந்த ஒன்றைப் பயன்படுத்துகிறாரா அவர்?

அந்த ஒன்று எப்படி இருக்கும்?

“அற்ப ஜீவராசிகளைப் போல கடவுளுக்கும் மூளையா? என்ன சிறு பிள்ளைத் தனமான...கிறுக்குத்தனமான.....குதர்க்கமான கேள்வி இது.” என்று கடவுளின் அவதாரங்களும் ஆன்மிகவாதிகளும் பக்தகோடிகளும் சினந்து சீறாமல் சொல்
லுங்கள்.......................................................................

“நீங்கள் போற்றுகிற கடவுளுக்கு மூளை உண்டா இல்லையா?”


**********************************************************************************
                                            இன்னும் கேட்போம்.
**********************************************************************************

அடுத்த இடுகை நாள்........

                                                                          13-06-2011

                                                                             
                                                                                 


No comments :