தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Nov 28, 2011

மனித நேயம்

                                                   
.....

                                        மனித நேயம் [சிறுகதை]

அன்றைய அலுவல் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, கடைவீதியில் நண்பன் வினோதனைச் சந்தித்தேன்.

“காபி குடிச்சிட்டே பேசலாம் வா.” என்று அழைத்தேன்.

”விரதம் இருக்கேன். நீ மட்டும் சாப்பிடு” என்றான்.

எனக்குள் ’குபீர்’ ஆச்சரியம்.

விரதம் பற்றிப் பேச நேர்ந்தால், காக்கா குருவி, ஆடு மாடு விரதம் இருக்கான்னு குதர்க்கம் பேசுவான் வினோதன். இவன் ‘பக்கா’ நாத்திகன் என்பதால் சாமியை வேண்டிட்டு விரதம் இருப்பது சாத்தியம் இல்லை.

மிதமிஞ்சிய ஆர்வத்துடன், “விரதமா! நீ இருக்கியா?” என்றேன்.

“ஆமா. ஒரு நாளைக்கு ஒரு வேளைச் சாப்பாடு மட்டும்” என்றான்.

“எத்தனை நாளா இருக்கே?”

“நாலு நாளா.”

“இன்னும் எத்தனை நாளைக்கு?”

“என் எதிர் வீட்டுக்காரன் சாகிறவரைக்கும்”

எனக்குள் ‘பகீர்’!

“என்னடா உளர்றே?”

“உயிர் கொல்லி நோயால் இம்சைப்பட்ட அவன், இன்னிக்கோ நாளைக்கோன்னு சாவோடு போராடிட்டு இருக்கான். அவனின் கடந்த கால ‘நடத்தை’ பிடிக்காத அவனோட சொந்த பந்தங்கள், எப்போ மண்டையைப் போடுவான்னு எட்ட நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. நான் மட்டும், “நீ குணமடையற வரைக்கும் நான் விரதம் இருக்கப் போறேன்னு சொன்னேன்.
வறண்டு சிறுத்துப் போயிருந்த அவன் முகத்தில் சின்னதாய் ஒரு மலர்ச்சி!
’எனக்காக அனுதாபப் படவும் ஒருத்தர் இருக்கார்’கிற அற்ப சந்தோஷத்தோட அவன் வாழ்க்கை முடியட்டுமே”

வினோதன் சொல்லி முடித்த போது, என்னுள் ஒருவித சிலிர்ப்பு பரவுவதை உணர முடிந்தது.

வினோதன் என் கண்களுக்கு விநோதமானவனாகத் தெரிந்தான்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments :

 1. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

  இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

  இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

  "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

  சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

  ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


  .

  ReplyDelete
 2. என்னை மதித்து, என் வலைப்பதிவில்
  தங்களின் வேதனையைப் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. படிப்போம். நன்றி.

  ReplyDelete
 4. //வினோதன் என் கண்களுக்கு விநோதமானவனாகத் தெரிந்தான்!//

  அடக்கடவுளே......கடவுளாகத் தெரியவில்லையா ?

  :)

  ReplyDelete
 5. தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  ReplyDelete
 6. "அடக்கடவுளே.....கடவுளாகத் தெரியவில்லையா?”

  நன்றி கண்ணன்.

  வினோதன், நம் கண்களுக்கு மட்டுமல்ல; கதையைப் படிக்கிற எவர் கண்ணுக்கும் கடவுளாகக் காட்சி தரக் கூடாது.

  அது நிகழ்ந்தால், கதையை வடிவமைத்ததில் தவறு நேர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

  உங்கள் கேள்வி, கதைக்கு முற்றுப் புள்ளி வைத்த என்னை முடிவில்லாமல் சிந்திக்கத் தூண்டுகிறது.

  நல்ல சிந்தனையாளரை நண்பராகப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி கண்ணன்.

  ReplyDelete
 7. 'புதிய தென்றலுக்கு’ நன்றி.

  தாங்கள் தென்றலல்ல, இன உணர்ச்சிப் புயல்!

  தங்களின் ஆதங்கம்...ஆவேசம்..தூங்குகிற தமிழனை நிச்சயம் தட்டி எழுப்பும்.

  இணைந்து செயல்படுவோம்

  ReplyDelete
 8. வினோதம் தான்..

  ReplyDelete
 9. ஜீவா,
  பலனை எதிர்பாராமல் பாராட்டும் நீங்களும் விநோதமானவர்தான்!
  நன்றி.

  ReplyDelete
 10. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் இந்த பதிவு சிறிது நேரம் யோசிக்க வைக்கிறது. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
  நம்ம தளத்தில்:
  "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

  ReplyDelete
 11. நண்பர் தனபாலன் அவர்களுக்கு,
  தங்கள் வலைப் பூங்காவில் சிறிது நேரம்
  உலவிவிட்டுத் திரும்பினேன்.
  நான் அடைந்த இன்பம் பெரிது.
  இதை மனசாட்சியுடன் சொல்கிறேன்.
  நன்றி நண்பரே.

  ReplyDelete