திங்கள், 5 மார்ச், 2012

கடவுளைக் காக்கும் தாய்க்குலம்! [சிறுகதை]



                          கடவுளைக் காக்கும் தாய்க்குலம்! [சிறுகதை]


ராசுவின் தந்தை ஒரு தனியார் வங்கி அலுவலர்.


அவர் கொச்சிக்கு மாறுதல் ஆன போது, தன் குடும்பத்தையும் அங்கே அழைத்துப் போனார்.


ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தன் சொந்த ஊரான
மதுரைக்கு மாறுதல் பெற்றார்.


பிறந்த மண்ணுக்குத் திரும்பியதில் ராசுவுக்கு அளப்பரிய ஆனந்தம். நண்பர்களைத் தேடிப் போய் அளவளாவினான்.


பள்ளித் தோழன் அறிவழகனை ஒரு விளையாட்டு மைதானத்தில் சந்தித்த போது, அவன் விழிகளில் மகிழ்ச்சி கலந்த வியப்பு.


“நல்லா இருக்கியா?” என்று கேட்ட அறிவழகனிடம், “நான் நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன். அப்போ நீ நோய்வாய்ப்பட்டிருந்தே. உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையறதால, ஒரு சில வருசங்களில் நீ இறந்துடுவேன்னு டாக்டர்கள் சொல்லியிருந்தாங்க. அது நடந்து அஞ்சு வருசம் ஆச்சு. நீ இப்போ திடகாத்திரமாவும் உற்சாகமாவும் இருக்கே. நீ சாவை எப்படி ஜெயிச்சே?”-ராசுவின் குரலில் ஏராள ஆர்வம்.


“சாவை விரட்டியடிக்கணும்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’னு அப்பப்போ மனசுக்குள்ள சபதம் எடுத்தேன். படிப்படியா என் உடம்பில் எதிர்ப்புச் சக்தி கூடிச்சி. நோய் இருந்த இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிடுச்சி. டாக்டர்கள் ஆச்சரியப் பட்டாங்க” என்றான் அறிவழகன்.


அறிவழகனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராசு.


அறிவழகன் வீடு திரும்பிய போது, அவன் அம்மா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.


“உன் மகனுக்கு நோய் எப்படிக் குணமாச்சு?” 


“அஞ்சு வருசமா நான் போகாத கோயில் இல்ல. வேண்டாத சாமி இல்ல. ‘கடவுளே, என் மகனைக் காப்பாத்து’ன்னு கண்ணீர் விட்டு அழுதேன். கடவுள் கண் திறந்துட்டாரு”- அறிவழகனின் அம்மா குரலின் ஏகப்பட்ட உருக்கம்!


“அம்மா, என் நோயைக் குணப்படுத்தக் கடவுளுக்கு அஞ்சு வருச அவகாசம் எதுக்கு? நீ முதல் தடவை வேண்டிகிட்ட போதே அவர் ஏன் கண் திறக்கல?” என்று கேட்டான் அறிவழகன்.


“இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா”. அவசரமாக அவன் வாய் பொத்தினார் அம்மா.


*********************************************************************************



18 கருத்துகள்:

  1. பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

    Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

    பதிலளிநீக்கு
  2. தனியான மனதின் சக்திக்கும் கூட்டு மனதின் சக்திக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.. என்னதான் தனிமனம் போராடினாலும் கூட்டு மனதின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம் என உணர்த்தியது.

    நான் புரிந்துகொண்ட வரையில், அந்த தாய் கடவுளைக் காப்பாற்ற அவன் வாயைப் பொத்த வில்லை. அவன் அறியாமையை மறைக்கவே பொத்தினாள்.

    சில தவறான புரிதல்கள் சில பக்தி திரைப்படங்கள் / பக்தி சீரியல்களின் உடனடி ரிசல்ட் தருபவர்தான் கடவுள் என்ற தாக்கங்களால் வந்த விளைவுகளே.. சினிமா சீரியல்களில் கடவுள் உடனடியாக தோன்றி பலன் தருவதும், சினிமாவில் ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரனாவதும் ஒரே வித கிளிஷேக்கள்தான்.

    சிறந்த சிறு கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு
  3. நன்றி சங்கர்.
    தாங்கள் தந்த விளக்கம் சிந்திக்க வைக்கிறது.
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. தகவல் தந்ததற்கு நன்றி தமிழ்மகன்.
    தாங்கள் சங்ககிரிக்காரர் என்பதறிந்து மகிழ்ந்தேன்.
    நான் நாமக்கல்.

    பதிலளிநீக்கு
  5. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முடியாததை முயற்சி செய்திருக்கிறீர்கள். துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.
    புரிந்து கொண்டவர்களுக்கு இது மிகவும் சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  6. nanpar appaathurai avarkalukku en manam niraintha nanri.
    veliyuuril iruppathaal thamilil type seyya mudiyavillai.

    பதிலளிநீக்கு
  7. nanpar appaathurai avarkalukku en manam niraintha nanri.
    veliyuuril iruppathaal thamilil type seyya mudiyavillai.

    பதிலளிநீக்கு
  8. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. நன்றி.
    புதிய தென்றலுக்கு என் மனம் நிறைந்த நன்றி

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு ...எனக்கு ஒரு சந்தேகம் ...மிகப்பெரும் பிரபஞ்சம் கலக்ஸ்சி என எல்லாம் தானாக தோன்றியது என்ப்ஹதை நம்பமறுக்கும் மனிதன் அதைவிட பில்லியன் மடங்குக்கு மேலான கடவுள் மட்டும் தான்தோன்றி என்றதும் உடனே நம்பிவிடுகிறான் ....என்ன கொடுமை

    பதிலளிநீக்கு
  11. கொடுமையிலும் கொடுமை!
    கருத்துரை வழங்கிய தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நல்ல கேள்வி y.kiruththikan.

    நம்பிக்கை/பயம் இரண்டும் பக்குவப்படுத்தப்பட்ட கோட்பாடுகள் - பரம்பரை பரம்பரையாக மனித மரபணுக்களில் கலந்தவை. அதனால் தான் மறுப்பதை விட ஏற்பது எளிதாகிறது.

    இன்னொரு உதாரணம் - சிவப்பாக இருப்பவர்களை 'அழகாக' இருப்பதாக ஏன் சொல்கிறோம்? சூடு என்பதே தெரியாத, தீயையே தொட்டிராத குழந்தை 'தீ சுடும்' என்று பெரியவர்கள் சொன்னதை நம்புவானேன்?

    கண்மூடி நம்பிக்கை ஒருவகையில் மனவியாதி. பரம்பரை பரம்பரையாக நம்முள் கலந்து வந்த வியாதி.

    பதிலளிநீக்கு
  13. நம்புவதைவிட ஏற்பது எளிதாவதற்கான காரணங்களை, எளிதாகவும் தெளிவாகவும் விளக்கிய நண்பர் அப்பாதுரை அவர்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. மனதோடு சிந்திக்கும் பதிவுகள் நிறைய இருக்கே !

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு