வெள்ளி, 4 மே, 2012

பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.

                      பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.


மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் பதிவர்களிடையே கருத்து மாறுபாடுகள் எழுவதால் கடும் விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

விவாதம் தேவைதான்.

மதம் சார்ந்த கொள்கைகளில், எது சரியானது அல்லது சிறந்தது என்று கண்டறிய அது உதவுகிறது.

விவாதம் புரிவோர்க்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் அவற்றை ஏற்க மறுத்து, எதிரியை வீழ்த்தும் ஒரே நோக்கோடு...வெறி உணர்ச்சியோடு களத்தில் இறங்கும்போது, எதிர்பார்க்கும் நற்பலன்களுக்குப் பதிலாகப் பாதகங்கள் விளைகின்றன.

மதம் சார்ந்த பதிவர்கள், மற்றும் மதச்சார்பு இல்லாமலே விவாதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பிற பதிவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்..

பதிவர்கள் விரும்பினால், என் பெயர் சேர்த்து இப்பதிவை எடுத்தாளலாம்; ’காப்பி பேஸ்ட்’  செய்தும் பிற திரட்டிகளில் வெளியிடலாம்.

                                                    
                            பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.


1] விவாதத்திற்குரிய கருத்துகள் இடம்பெற்ற பதிவை அல்லது அது சம்பந்தப்பட்ட அத்தனை பதிவுகளையும் முழுமையாகப் படியுங்கள்.


2] சிறிது நேரமாவது, மனதில் பதிய வைத்த அக்கருத்துகள் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்.


3] அவற்றில் போற்றுதலுக்கு உரியவை எவை, மறுக்கப்பட வேண்டியவை எவை என்று முடிவெடுங்கள்.


4]எழுப்ப விரும்பும் கேள்விகளைப் பட்டியலிடுங்கள். பொறுமை இழக்காமல், மாற்றுக் கருத்துகளை அல்லது எழும் ஐயங்களை முன் வையுங்கள்.


5] விவாதத்தில் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். [யார் முதலில் இதைக் கடைபிடிப்பது என்ற போட்டி கூடாது]. மனதைப் புண்படுத்தும் வகையிலான தனிப்பட்ட தாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.


6] வெற்றி பெற வேண்டும் என்று மூர்க்கத்தனமாகச் செயல்படாமல், உண்மை அறியும் நல்லெண்ணத்துடன் விவாதம் புரிவது மிகுந்த நன்மை பயக்கும்.


7] விவாதம் முடியும்வரை, நடுநிலை பிறழாமலும் உணர்ச்சி வசப்படாமலும் இருக்க முயலுதல் நன்று.


8]ஒருவர் முன்வைத்த கருத்து சரியெனப் பட்டால், மற்றவர் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவது உயர் பண்பு என்பதை மறத்தல் கூடாது.


9] ஒரு கொள்கை அல்லது கருத்துக்கான விவாதம் முற்றுப் பெறுவதற்குள் அடுத்த கருத்துக்குத் தாவுதல் விவாதத்தின் சுமுகமான போக்கைச் சீர்குலைக்கும் என்பதை நினைவில் பதித்தல் இன்றியமையாத் தேவை.


10] விவாதத்தின் போக்கைத் திசை மாற்றி, தோல்வியைத் தவிர்க்க நினைப்பது கண்டிக்கத் தக்கது.


இம்மாதிரியான கட்டுப்பாடுகளை விரும்பாத பதிவர், விவாதத்தில் பங்கு கொள்வதைத் தவிர்த்துவிட்டு, தமக்குரிய வலைத்தளத்தில் மாற்றுக் கருத்துகளை வெளியிட்டுக் கொள்ளலாம்.


இதுவே மனித நாகரிகம் ஆகும்.


***************************************************************************************************************


















15 கருத்துகள்:

  1. விவாதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நல்ல கருத்துகள்!!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. என் பரிந்துரையைப் பாராட்டிச் சிறப்பித்த தங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. செய்தியோடை பிரச்சனை தொடர்பாக...
    தமிழ்மணப் பக்கத்தில் குறிப்பிட்டது போல நீங்கள் Post Feed Redirect URL முகவரியை திருத்தவில்லை என நினைக்கிறேன்.
    இந்தப் படத்தில் கட்டமிடப்பட்டுள்ள இடம்.
    1. உங்கள் செய்தியோடை http://feeds.feedburner.com/blogspot/pFxcY என்றால் இதனை Post Feed Redirect URL பெட்டியில் கொடுத்து சேமிக்கவும்,
    சிறிது நேரம் கழித்து தமிழ்மணத்தில் இணைத்துப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தாங்களாக முன்வந்து உதவும் தங்களின் பெருந்தன்மை பெரிதும் போற்றுதலுக்குரியது.
    தங்களின் வழிகாட்டுதலின்படி முயற்சி செய்வேன். பலன் கிட்டியதும் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
    மிக்க நன்றி நீச்சல்காரன்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவு தமிழ் மணத்தில் தெரிகிறது.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. உலகத்தில் உள்ள அனைத்து நன்னெறிகளையும் புறம் தள்ளித்தான் மதவாதிகள் முகம் காட்டுகிறார்கள், பிறகு எப்படி ? :(

    பதிலளிநீக்கு
  7. நலமா ஐயா

    இன்று தான் உங்க வலைதளம் முதன்முதலில் வருகிறேன் :-)

    அருமையான கருத்தை முன்வைத்திருக்கிறீங்க. எல்லாமே அருமை. பாராட்டுக்கள் ஐயா

    விவாதத்தில் நடுநிலையா இருக்குறவங்க, பெரியவங்க கண்காணிச்சு திசை மாறும் போது சுட்டிகாட்டுங்க :-) அதுவே பல பிரச்சனைகளை தடுக்கும் ஹி..ஹி..ஹி..

    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய நீச்சல்காரன்,
    தாங்களாக முன்வந்து செய்த உதவியை என்றும் மறவேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அறிந்திருந்தும் அனைத்து நன்னெறிகளையும் புறந்தள்ளுபவர்களை திருத்துவது மிக மிகக் கடினமான செயல்.
    சளைக்காமல் நம் பணியைச் செய்வோம்.
    திருந்தினால் மகிழ்வோம்.
    இல்லையெனில்...............
    நடப்பது நடக்கட்டும்.
    மிக்க நன்றி கண்ணன்.

    பதிலளிநீக்கு
  10. ஆமினா,
    தங்கள் வருகை எனக்கு எல்லையற்ற மகிழ்வைத் தருகிறது.
    தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கும், என் மீது கொண்டிருக்கும் நன்மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் நான் என்றும் கடமைப் பட்டவன்.
    மிக்க நன்றி ஆமினா.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான சிந்தனைகளை முன் வைத்திருக்கிறீர்கள்.நன்று.

    நான் இந்த மாதிரி விவாதங்கள் பக்கமே போவதில்லை!

    பதிலளிநீக்கு
  12. முதன்முறையாக என் வலைப்பதிவிற்கு வருகை புரிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    நன்றி சென்னைப் பித்தன்.
    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. ஐயா
    நீங்கள் கொடுத்துள்ள 10 கட்டளைகளையும் கடைபிடித்தோமேயானால், நிச்சயம் நாம் புரியும் விவாதம் ஒரு புரிதலை ஏற்படுத்தும் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அப்படியில்லையெனில் அது விவாதமே அல்ல, வீண் விதண்டாவாதமே!

    பதிலளிநீக்கு
  14. நன்றி அஜீஸ்.
    கட்டளை அல்ல அஜீஸ்; பரிந்துரைதான்.
    சிலரின் விதண்டவாதங்களால் மனம் புண்பட்டவன் நான்.
    என் சொந்த அனுபவமே இந்தப் பரிந்துரைகளை வழங்கத் தூண்டியது.
    மீண்டும் நன்றி அஜீஸ்.

    பதிலளிநீக்கு
  15. ’மனித நேயம்’ என்னும் என் சிறுகதையை மனம் நெகிழ்ந்து பாராட்டிய என் இனிய நண்பர் ‘சேக்காளி’க்கு என் இதயபூர்வமான நன்றி.

    பதிலளிநீக்கு