தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Oct 28, 2012

நரிகளிடம் கற்போம் ! புறாக்களைப் போற்றுவோம் !!

அதிசயம்! இது பேராச்சரியம்!! 

சிறுகதைகள் தொடர்பாக மட்டுமே பதிவு எழுதிவரும் நான், இன்றைய ‘வார மலரில்’ [28’10’12] டாக்டர் கோவிந்தராஜ் [சென்னிமலை] அவர்களின் தொடர் கட்டுரையைப் படிக்க நேர்ந்ததன் விளைவாக, மிதமிஞ்சிய ஆர்வத்துடன், ஒரு மாறுபட்ட இடுகையை உங்களுடன் பகிர்கிறேன்..........

’நரி, நாய் இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், ஒரு வாலிப ஆண் நரி, ஒரு இளைய பெண் நரியை, ஏதோ ஒரு வகையில் ஈர்த்துப் புணர்ந்துவிட்டால், ஆயுசுக்கும் அவள்தான் அதற்கு ஆதர்ச மனைவி.

இப்படி ஜோடி சேர்ந்த பின்பு ’மிஸ் யூனிவர்ஸ்’ நரியே வந்தால்கூட, நம் ஆண் நரியார், தடம் பிறழாமல் மனைவியே கதியென்று ஏகபத்தினி விரதனாக வாழ்வார்!’

இப்படி, மனிதன் உட்படப் பிற உயிரினங்கள் பின்பற்ற வேண்டிய நரி இனத்தின் ‘கற்பொழுக்கத்தை’க் கண்டறிந்து சொன்ன டாக்டர், மேலும் ஓர் அதிசயத்தை முன் வைத்து, வியப்பின் எல்லைக்கே நம்மை இட்டுச் செல்கிறார்.

‘இணை சேர்ந்துவிட்ட பெண் நரியைப் பிற ஆண் நரிகள் ஒரு போதும் அணுகா. அப்பப்பா.....கிரேட் ஆச்சரியம்!’ [நாயைப் போலவே, புணர்ச்சியின் போதான ’இழுபறி’ அவஸ்தை நரிக்கும் உண்டு என்பது கொசுறு தகவல்!]

நீண்ட நேர வியப்பிலிருந்து விடுபட்ட பிறகு எனக்குள் எழுந்த  கேள்விகள்.......

இணை சேர்ந்த ஜோடியில் ஒன்று, ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால், தனிமையில் தவிக்கும் மற்றொன்று,  ’இணையை இழந்த புறாவைப் போல’ ஒரு புதிய இணையைத் தேடிக் கொள்ளும்தானே?

நரி இனம் போல, இவ்வாறு நல்லொழுக்கத்துடன் வாழும் மற்ற விலங்கினம் எது, அல்லது எவை? [விரும்பினால் / இயன்றால் ஒரு பட்டியல் போடுங்களேன்]

ஒட்டு மொத்த மனிதர்களும் நரிகள் போலவும் புறாக்கள் போலவும் வாழும் நாள் வருமா? எப்போது?

************************************************************************************************


7 comments :

 1. நரி தந்திரத்தின் உருவகமாகக் கருதப்படுவது. ஆண் நரி ஏகபத்தினி விரதன் என்பது அதிசய செய்திதான்.
  நரியிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்வது இருக்கட்டும். மனிதர்களிடமிருந்து நரி கற்றுக் கொள்ளாமல் இருந்தால் சரி,

  ReplyDelete
 2. //மனிதர்களிடமிருந்து நரி கற்றுக் கொள்ளாமல் இருந்தால் சரி//

  முரளிதரன், எப்படி உங்களால் இப்படிச் சிந்திக்க முடிந்தது!?

  பாராட்டுகள். நன்றி.  ReplyDelete
 3. இன்னும் விலங்களிடமிருந்து பலவற்றை கற்றுக் கொள்ள வேண்டிய காலம் இது...

  நன்றி...
  tm2

  ReplyDelete
 4. மிக்க நன்றி தனபாலன்.

  நன்றி சொல்வதில் தாமதம் ஏற்பட்டது.

  வருந்துகிறேன்.

  ReplyDelete
 5. மிகவும் அருமை நன்றி

  ReplyDelete
 6. மிகவும் அருமை நன்றி சகோ

  ReplyDelete
 7. உங்களது கருத்துரையை என் தளத்தில் படித்துவிட்டு, உங்களை தேடி தேடி...ஒருவழியாக உங்களை இன்று கண்டேன்!

  ரொம்பவும் ஆச்சர்யமான தகவல்கள்!

  இனி அடிக்கடி வருவேன்!

  ReplyDelete