திங்கள், 18 பிப்ரவரி, 2013

கடவுளும் கடத்தப்பட்ட ஒரு சிறுமியும்! [ஒரு பக்கக் ’குட்டி’க் கதை]

இது, கடவுளின் கருணைக்கு ஏங்கும் ஒரு [அப்]பாவியின் கதை!!

சாலையில் நடந்துகொண்டிருந்த செல்வராசு, சொகுசுக் கார் ஒன்று, ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதைக் கண்டான்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை, ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்த்தான்; அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அவனின் பெற்றோரை வரவழைத்தான்.

மருத்துவரைச் சந்தித்துத் திரும்பிய சிறுவனின் தந்தை, செல்வராசுவிடம், “பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க புள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று செல்வராசுவின் கரங்களைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“என் பத்து வயசுப் பொண்ணு காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. சின்னஞ்சிறு குட்டிகளைக் கடத்துறதும், கற்பழிச்சிச் சிதைச்சிக் கொலை பண்ணுறதும் அடிக்கடி நடக்குதே. என் செல்லம் என்ன ஆனாளோ”ன்னு தினம் தினம் வேதனைப்பட்டுப் பட்டினி கிடந்து செத்துப் போனா என் பெண்டாட்டி. நானும் நடைப் பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். நீங்க புண்ணியம் செஞ்சவங்க. கேட்காமலே கடவுள் உங்களுக்கு உதவியிருக்கார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், கடவுள்கிட்டச் சொல்லி என் மகளைக் கண்டுபிடிச்சித் தரச் சொல்லுங்கய்யா.” கண்களில் கண்ணீர் பெருக, நா தழுதழுக்கச் சொன்னான் செல்வராசு.

செய்வதறியாது விழித்தார் சிறுவனின் தந்தை.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மனிதர்கள் மனம் இளகிச் செய்யும் நல்ல செயல்களைக்கூட, கடவுளின் கருணையோடு தொடர்புபடுத்துவது நம்மில் பெரும்பாலோரின் வழக்கமாக உள்ளது. இதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கதை. 

கடவுளின் ‘இருப்பு’ பற்றிய விவாதத்தைத் தூண்டுவது நம் நோக்கமல்ல; விருப்பமும் அல்ல.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000






6 கருத்துகள்:

  1. செல்வராஜியின் நிலை யாருக்கும் வரக்கூடாது...

    பதிலளிநீக்கு
  2. தனபாலன் அவர்களுக்கு,
    என் இதயம் கனிந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மனிதாபிமானத்தை வலியுறுத்தும் கதை.

    பதிலளிநீக்கு
  4. செல்வராசு போல உதவிசெய்யும் நல்மனம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
    கொடூரம் செய்யும் வக்கிரமம் வேண்டாமே.

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  5. மாதேவி, வருகை புரிந்ததோடு, பாராட்டும் வழங்கியதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு