தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Mar 1, 2013

கடவுள் சிந்திப்பது எப்படி?!

அவ்வப்போது, இயல்பாக நான் கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. இதற்கு உள்நோக்கம் ஏதுமில்லை.

யிர்களுக்குப் புலன்கள் உள்ளன.

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதனோ விலங்கோ பறவையோ வேறு எதுவோ, ஓர் உயிரினத்தைப் பொறுத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு வரம்பேதுமில்லை] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?

அது உருவம் உள்ளதா, அருவமானதா?

மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?

அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்?!

இதற்கு விடையில்லை; பயனேதும் இல்லை என்பது தெரிந்திருந்தும், கடவுளை நினைக்கும்போதெல்லாம், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்!!!

நீங்கள் எப்படி?

உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் மன்னித்துவிடுங்கள்.

வருகைக்கு நன்றி.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 

4 comments :

 1. கண்ணதாசனின் வரிகள் ஞாபகம் வருவதுண்டு...

  பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
  பிறந்து பாரென இறைவன் பணித்தான்...!

  படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
  படித்துப் பாரென இறைவன் பணித்தான்...!

  அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
  அறிந்து பாரென இறைவன் பணித்தான்...!

  அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
  அளித்துப் பாரென இறைவன் பணித்தான்...!

  பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
  பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்...!

  மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
  மணந்து பாரென இறைவன் பணித்தான்...!

  பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
  பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்...!

  முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
  முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்...!

  வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
  வாடிப் பாரென இறைவன் பணித்தான்...!

  இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
  இறந்து பாரென இறைவன் பணித்தான்...!

  "அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
  ஆண்டவனே நீ ஏன்..?" எனக் கேட்டேன்...!

  ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி
  'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்...!


  நன்றி...

  ReplyDelete
 2. மிக்க நன்றி தனபாலன்.

  ReplyDelete
 3. //மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு வரம்பேதுமில்லை] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?//

  ஐயா இன்னொரு கேள்வி,

  (....., -3, -2, -1, 0, 1, 2, 3, .....) இந்த தொடரின் முதல் எண்ணையும் கடைசி எண்ணையும் கடவுளால் (First & last number) கூற முடியுமா?

  ReplyDelete
 4. நன்றி Alien A.

  கடவுள்தான் பதில் சொல்ல வேண்டும்.....அப்படி ஒருவர் இருந்தால்!

  தாமதமாகத்தான் இப்பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

  மீண்டும் நன்றி Alien A.

  ReplyDelete