சனி, 2 மார்ச், 2013

தாம்பத்திய சுகமும் ஆண்கள் போடும் தப்புக் கணக்கும்! [ஓர் உரையாடல் கதை]

ஆண்கள், ‘அது’ விசயத்தில் பெறும் ‘திருப்தி’ தற்காலிகமானதே!!

திய உணவு இடைவேளையில், பாலுவும் கேசவனும் அலுவலக வளாகத்திலிருந்த வேப்ப மர நிழலில் சென்று அமர்ந்தார்கள்.

வழக்கமாக அவர்கள் மதிய உணவு உண்பது அங்கேதான்.

“விஷயம் தெரியுமா?” என்றான் பாலு.

“சொல்லு” என்றான் கேசவன்.

“நம்ம ஸ்டெனோ சுகுமாரனோட வொய்ஃப், அவங்க வீட்டு மாடியில் குடியிருந்த பேச்சிலரைக் கூட்டிட்டு ஓடிட்டாளாம்”

“நிஜமாவா?”

“உன்கிட்டே நான் ஏன் பொய் சொல்லணும்."

“அவன் செக்ஸ் விசயத்தில் கில்லாடி ஆச்சே! ‘அது’ விசயத்தில், பொண்ணுகளைத் திருப்திபடுத்தறது எப்படின்னு வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் கிளாஸ் எடுப்பான். உடலுறவின் போது கையாள வேண்டிய டெக்னிக்ஸ், லேகியம், நைட்பில்ஸ் பத்தியெல்லாம் நிறையப் பேசுவான். ’அது’ விஷயத்தில் எல்லாம் தெரிஞ்ச அவன் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?”

வியப்பின் விளிம்பைத் தொட்டிருந்தான் கேசவன்.

உடல் ரீதியா ஒரு பெண்ணைத் திருப்தி படுத்த முடியுமா என்பது இந்நாள்வரை கண்டறியப்படாத ரகசியம். பெண்ணுக்குப் போதும் என்ற மனம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகலாம். இது சுகுமாரனுக்குத் தெரிஞ்சிருந்தா எச்சரிக்கையா இருந்திருப்பான்.”

“உடலுறவில் திருப்தி அடையறது ஆண்களுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இல்லையா?”

“அப்படித்தான் எல்லா ஆண்களும் நினைச்சிட்டிருக்காங்க. அதுவும் தப்பு. ஆணின் உடம்பிலேயிருந்து உயிர்ச்சத்து வெளியேறியதும் கிடைக்கிற திருப்தி தற்காலிகமானது. வயசைப் பொருத்து, சந்திக்கிற பெண்ணைப் பொருத்து, சூழ்நிலையைப் பொருத்து, மிகச் சில மணி நேரங்களிலேயே மீண்டும் காமம் அரும்ப ஆரம்பிச்சிடும். அதைத் தணிக்க அவனுக்குப் பெண் தேவைப்படுகிறாள். பெண்ணாகட்டும் ஆணாகட்டும் செக்ஸில் திருப்தி என்பது சாத்தியமில்லாத ஒன்னு என்பதே என் அபிப்ராயம்.”

“சரிதான். இந்தத் திருப்தியற்ற நிலைதான், மனுஷங்களைக் காலமெல்லாம் செக்ஸ் வெறி பிடிச்சி அலைய வைக்குது” என்றான் கேசவன்.

ஒரு முறை அழகான ஒரு பெண்ணை அனுபவிச்சவன், இன்னும் அழகான பெண் கிடைச்சா அனுபவிக்கலாமேன்னு நினைக்கிறது இயற்கை. ஒரு தடவை பத்து நிமிஷம் கூடல் செஞ்சவன், அடுத்த தடவை இன்னும் அதிக நேரம் செய்யணும்னு நினைக்கிறதும் இயல்புதான். இம்மாதிரி எண்ணங்களுக்கு அணை போட்டுத் தடுத்து நிறுத்துவது சமுதாயக் கட்டுப்பாடும், நாம் வகுத்துக் கொண்ட ஒழுக்க நெறிகளும்தான். அவற்றைப் பின்பற்ற நினைக்கிற மனசும் ஒரு முக்கிய காரணம்” என்றான் பாலு.

“உண்மைதான். இன்னும் வேணும் இன்னும் வேணும்னு அலையறதுக்கும் போதும்னு அடங்கி வாழறதுக்கும் மனசுதான் காரணம்.”

“மனசைப் பக்குவப்படுத்திப் பயிற்சியும் கொடுத்தா, பத்து நிமிஷம் அனுபவிச்ச சுகத்தைப் பத்து மணி நேரம் அனுபவிச்சதாப் பாவிச்சி சந்தோஷம் காணமுடியும். ஒரே ஒரு தடவை அனுபவிச்ச இன்பத்தை மனசில் தேக்கி வெச்சி, ஒட்டு மொத்த வாழ்நாளையும் அது பற்றிய நினைப்பிலேயே கழிச்சிட முடியும். ஆனா மனுஷங்க, இப்படியான எண்ணங்களை வளர்த்து இதுக்கான முயற்சிகளில் ஈடுபடுறதில்லை. வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள அனுபவிச்சித் தீர்த்துடணும்னுதான் அலையறாங்க. விதி விலக்கானவங்க ஒரு சிலர்தான். இதுல ஆண் பெண்ணுங்கிற பேதங்களுக்கும் இடமில்லை. இன்னிக்கி முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நாளை பேசுவோம்” என்று எழுந்தான் பாலு.

"என் வீட்டில் எனக்குப் பெண் பார்த்துட்டிருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கிறதை நினைச்சா பயமாயிருக்கு” என்றான் கேசவன்.

“பயப்பட ஒன்னும் இல்ல. இம்மாதிரியான நல்ல சிந்தனைகளை உன் வருங்கால மனைவிக்குச் சொல்லிப் புரிய வெச்சுடு. வாழ்க்கை சந்தோசமா கழியும்.”

கேசவனின் முதுகில் தட்டிக் கொடுத்தான் பாலு.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo











4 கருத்துகள்:

  1. Just like other issues, "what is good and satisfactory sex for your partner" can be preached easily. But it is always hard when he/she tries to execute it in practice or not?:)

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது வருண்.

    ‘இதில்’ திருப்தி பெறுவது எப்படி? [tips for satisfactory sex] என்று ஆலோசனைகள் வழங்குவது எளிது. அதை, நடைமுறை சாத்தியமாக்குவது மிக மிகக் கடினம் என்பதை உணர்த்தத்தான் இந்தப் பதிவை எழுதினேன்.

    மீண்டும் மீண்டும் நன்றி வருண்.



    பதிலளிநீக்கு
  3. //ஒரே ஒரு தடவை அனுபவிச்ச இன்பத்தை மனசில் தேக்கி வெச்சி, ஒட்டு மொத்த வாழ்நாளையும் அது பற்றிய நினைப்பிலேயே கழிச்சிட முடியும்.//

    இது நிஜத்தில் சாத்தியமா ஐயா?
    ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீதி வாழ்நாளையும் அது பற்றிய நினைப்பிலேயே கழிக்க முடியும் என்பது போலல்லவா உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. அறிவார்ந்த கேள்வி.

    சாப்பிடாமல் வாழ முடியாது என்பது எதார்த்தம்.

    காம உணர்ச்சி இருந்தும், இன்பம் அனுபவிக்காமல் வாழ முடியும்தானே? சந்தேகம் இல்லையே?

    நம் மனம் கவர்ந்த ஒரு பெண்ணுடன் நிமிட நேரம் பேசும் வாய்ப்புக் கிடைத்தாலும் மகிழ்கிறோம்.

    மீண்டும் மீண்டும் அந்த நிகழ்ச்சியை மனத் திரையில் ஓடவிட்டு நம்மை மறந்து நேரம் போவது தெரியாமல் இன்பத்தில் ஆழ்ந்துவிடுகிறோம் இல்லையா?

    துணையிழந்த ஆணோ பெண்ணோ, இடையிடையே சபலத்திற்கு ஆளானாலும், தன் துணையுடன் அனுபவித்த கடந்த கால நிகழ்வுகளை மனத்திரையில் ஓடவிட்டு வாழ்நாளைக் கழிக்க முடியும்தானே?

    இப்படி வாழ்ந்தவர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

    பதிவிலேயே இது பற்றிக் குறிப்பிட நினைத்தேன். மறந்து போனேன்.

    மிக்க நன்றி Alien A.





    பதிலளிநீக்கு