தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Mar 6, 2013

தினமலர் வாழ்க!!

Alexa வின் முன்னணி 500 வலைத்தளங்களுக்கான பட்டியலில் [இந்தியா] இடம் பெற்ற ஒரே தமிழ்த்தளம்!!!

Alexa வலைத்தளத் தகவல் நிறுவனம், உலக அளவிலான 500 முன்னணி வலைத் தளங்களுக்கான [வலையகம்?} பட்டியலையும், இந்திய அளவிலான 500 தளங்களுக்கான பட்டியலையும் வழங்கியிருப்பது பதிவாளர்கள் அறிந்ததே.

தற்செயலாக அவற்றைப் பார்வையிட்டேன்.

உலக அளவிலான பட்டியலில், தமிழ்த்தளம் ஒன்றுகூட இடம்பெறவில்லை.

இந்நிலை நான் எதிர்பார்த்ததுதான்.

இந்திய அளவிலான பட்டியலை முதல் தடவையாக மேய்ந்தபோது, சில இந்தித் தளங்களும் ’மலையாள மனோரமா’வும் இடம் பெற்றிருக்க, தமிழ்த்தளம் ஒன்றுகூடத் தட்டுப்படாதது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

மீண்டும் ஒரு முறை கவனமாகத் தேடிய போது, கணிசமான தமிழர்களால் ‘தின மலம்’ எனத் தூற்றப்படும் ’தினமலர்’ தளம் [dinamalar.com] கண்ணில் பட்டது, தினமலர் பற்றிய குற்றச்சாட்டுகள் மறந்து போக, சாதனை நிகழ்த்திய ஒரு தமிழ்த்தளம் அது என்ற வகையில் என்னுள் மகிழ்ச்சி பரவியது. அதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளத்தான் இப்பதிவு.







dinamalar.com

World No.1 Tamil Daily News Website | Tamil News Paper | Tamil Newspaper | Breaking News Headlines | Current Events | India News | World News | Tamilnadu News | Tamil E-paper - Dinamalar 
Click to open menuThis site is claimed.
This site's metrics are not certified.
Dinamalar.com is a leading Publication portal from India. It offers various news like political, general, cinema, sports, spiritual, Temple news in Tamil language. It offers textual content, imagery content and video content through round the clock (24x7) update. Dinamalar.com, No.1*, Indian Publication Portal as per Alexa.com ranking. 40% traffic comes from India and 60% are NRI traffic. To cover International Tamilian news we have more than 40 overseas special correspondents.

Statistics Summary for dinamalar.com

There are 2,147 sites with a better three-month global Alexa traffic rank than Dinamalar.com. Visitors to the site view an average of 7.6 unique pages per day. The fraction of visits to the site referred by search engines is about 7%. Dinamalar.com is located in India. Visitors to the site spend roughly 57 seconds on each pageview and a total of eleven minutes on the site during each visit. Show Less
Alexa Traffic RankReputation
Global 2,148
Global Rank 
India Flag 229
Rank in IN 
Sites Linking In 
10 Reviews






6 comments :

  1. நெஞ்சார்ந்த நன்றி தனபாலன்.

    ReplyDelete
  2. தினமலருக்கு எதிர்வினை ஆற்ற வேண்டியாவது அதை எல்லோரும் படிக்க வேண்டியிருக்கிறது. அதுவே கூடக் காரணமாக இருக்கலாம். தினமலரின் பின்னூட்டங்கள் சுவாரஸியமாக இருக்கும் படிப்பதற்கு, இது போல டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும் நிறைய வரும் கமெண்டுகள்.

    ReplyDelete
  3. //தினமலருக்கு எதிர்வினை ஆற்றவேண்டி.....//

    உண்மை தமிழானவன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பெரும்பாலானவர்கள் வெறுக்கும் தினமலர் முன்னணியில் உள்ளது ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
  5. பேராச்சரியம் முரளி!

    நன்றி.

    ReplyDelete