சனி, 14 டிசம்பர், 2013

பெரியார் ‘பெரியார்’ ஆனது எப்படி?

பெரியார், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக விழா ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடவுள் வாழ்த்துக்கு மாற்றாகத் 'தமிழ் வாழ்த்து' பாடும் சூழலை 1967இல்தான் அறிஞர் அண்ணா  உருவாக்கினார்.

எனவே, தமிழ் வாழ்த்து அறிமுகம் ஆகாத காலம் அது.

விழாவின் முதல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட இருந்தது.

‘கடவுள் வாழ்த்து பாடுவார்களே. கடவுள் மறுப்பாளராகிய பெரியார், அமர்ந்திருப்பாரா? எழுந்து நிற்பாரா? ஆத்திரம் அடைவாரா? அமைதி காப்பாரா?’

ஆசிரியர்கள், மாணவர்கள் என இருதரப்பிலும் பலவிதமான ஊகங்கள்.

விழா நிகழ்வுகள் தொடங்கின.

முதலில் 'கடவுள் வாழ்த்து' பாடுவதும் ஆரம்பமாயிற்று.

அனைவரும் எழுந்து நிற்க ஆரம்பித்த அதே வினாடிகளில் பெரியாரும் கைத்தடியை ஊன்றிப் பிடித்தபடி தள்ளாடியவாறு எழுந்து நின்றுவிட்டார்!

உடலைத் தாங்கும் வலிமையை அவரின் கால்கள் எப்போதோ இழந்திருந்தன. கூட்டத்துக்கு அவரைத் தூக்கிக்கொண்டுதான் வருவார்கள்.

'கடவுள் வாழ்த்து' பாடி முடிக்கும்வரை உடல் வேதனையைத் தாங்கியவாறு நின்றுகொண்டே இருந்தார் பெரியார்!

உடனிருப்போரின் மன உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்.

அவர் வாழ்வில் இப்படி எத்தனையோ நிகழ்வுகள்.

கடவுளைச் சாடினாலும் சக மனிதர்களை மதித்து நடப்பதில் அவருக்கு இணை எவரும் இல்லை.

இந்த உயரிய பண்புதான், இந்த மண் அவரைப் ‘பெரியார்’ எனப் பாராட்டுவதற்குக் காரணமாக அமைந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆதார நூல்: ஏ.எஸ்.கே. எழுதிய ‘கடவுள் கற்பனையே’, சூலூர் வெளியீடு, கோவை. இரண்டாம் பதிப்பு: 2006.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@








செவ்வாய், 10 டிசம்பர், 2013

ஜெயதேவ் தாஸின் ‘உயர் பண்பாடு’ காணீர்!

2012இல், ‘கடவுளின் கடவுள்’ என்னும் தலைப்பிலான வலைப்பதிவில், கடவுள் தொடர்பான பதிவுகள் மட்டுமே நான் நிறைய எழுதியிருக்கிறேன் [அப்போதெல்லாம் மிகக் குறைந்த ‘ஹிட்ஸ்’களே கிடைத்தன என்பதால், உங்களில் பலரும் அவற்றைப் படித்திருக்க வாய்ப்பில்லை]. அப்போது நண்பர் ஜெயதேவ் தாஸ், பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் மட்டுமே வழங்கிக்கொண்டிருந்தார்.

எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தராமல், சுற்றிவளைத்து மழுப்புவதிலும், அடாவடித்தனமாகத் தனிப்பட்ட தாக்குதலில் இறங்கி,  எதிராளியை ‘டென்சனுக்கு’ உள்ளாக்கி, வாதத்தைத் திசை திருப்பித் தான் ஜெயித்துவிட்டது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதிலும் மகா கில்லாடி!

‘கடவுளின் பயோடேட்டா’ என்னும் தலைப்பில் நான் எழுதிய பதிவையும் அதற்குத் தாஸ் அவர்கள் வழங்கிய பின்னூட்டத்தையும் [’மட்டுறுத்தல்’ செய்த நிலையிலும்] கீழே தந்திருக்கிறேன்.

நாத்தீகர்களுக்கு ஆப்பு வைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு பேரறிஞனை...மகானைப் புரிந்து கொள்ள இது உதவியாக இருக்கக்கூடும்.


என் பதிவு...........

கடவுளின் ‘பயோ டேட்டா [தன் விவரக் குறிப்பு] 
[மே 25,2012 இல் வெளியானது]

1] பெயர்: ...........................................கடவுள்.

2] சிறப்புப் பெயர்கள்:.................சொல்லி மாளாது!
[பக்தர்கள் சூட்டியவை]               [’ஆதி மூலன்’, ’ஆபத்பாந்தவன்’
,                                                           ‘கருணைக் கடல்’ என்னும் இது     
                                                             போன்ற பெயர்களையும், மதம்
                                                             சார்ந்த பெயர்களையும் நினைவு
                                                             கூர்க]

3] பிறந்த தேதி:................................தான் அவதரித்த அந்தப் புனித
                                                          மான நாளைக் கண்டறிய, யுக      
                                                          யுக யுகங்ளாக ...கோடி கோடி 
                                                          கோடி ஒளி ஆண்டுகளாகச் 
                                                          சிந்தித்துக் கொண்டிருக்கிறார்
                                                           கடவுள்.

4] கல்வித் தகுதி:..............................அனைத்தும் அறிந்தவர்.

5] தொழில்:................................... அளந்தறிய இயலாத, விரிந்து
                                                            பரந்த ‘வெளி’யில் கணக்கில் 
                                                            அடங்காத கோள்களையும் 
                                                            நட்சத்திரங்களையும் பிற
                                                             வற்றையும் படைத்து உலவச்
                                                          செய்து, அவ்வப்போது அவற்றை 
                                                          மோத விட்டு, அவை வெடித்துச் 
                                                            சிதறும் கண்கொள்ளாக் காட்சி
                                                             யைக் கண்டுகண்டு ரசிப்பது.      
                                                     
                                                      மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
                                                     ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
                                                  யும், வறுமை, நோய் போன்றவற்றால்                    
                                                      சித்திரவதைக்கு உள்ளாவதையும் 
                                                       வேடிக்கை பார்ப்பது.

6] நண்பர்கள்:........................காணிக்கை செலுத்தியும், நேர்த்திக் 
                                                  கடன்களை நிறைவேற்றியும், “இதைக் 
                                          கொடு...அதைத் தா” என்று தொல்லைக்கு
                                             உள்ளாக்காதவர்கள்.

7] நல்ல நண்பர்கள்:................அடுக்கடுக்கான வேதனைகளுக்கு
                                                  உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
                                                 “எல்லாம் என் தலைவிதி” என்று 
                                                  தன்னைத்தானே நொந்து கொண்டு    
                                                   நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
                                                      வர்கள்.

8] எதிரிகள்:.............................கடவுள் இல்லை என்று சொல்லி, 
                                                   மூடநம்பிக்கைகளைச் சாடும்
                                                       நாத்திகர்கள் அல்ல.

                                                     கடவுளைக் காப்பதாகச் சொல்லிக்
                                                      கொண்டு, மாற்று மதத்தவர்களைக்
                                                        கொன்று குவித்து, அவர்களின் 
                                                      சொத்துகளை நாசப்படுத்தி, மிருகங்
                                                       களாய்த் திரியும்  மதவெறியர்கள்.

9] நிரந்தர எதிரிகள்:..................“நானே கடவுள்” என்று சொல்லித்
                                                     திணவெடுத்து அலையும் புதுப்
                                                      புது ‘அவதாரங்கள்’.

10] இப்போதைய கவலை:......தம் படைப்பில் நேர்ந்த தவறுகளை
                                                     நீக்குவதற்காக, மனிதனுக்குத் தந்த
                                                    ஆறாவது அறிவை, அவன் தன் 
                                                     சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது.

11] நிரந்தரக் கவலை:..................படைத்தல், காத்தல், அழித்தல் 
                                                       ஆகிய தமக்குரிய முத்தொழிலை
                                                      இன்னும் எவ்வளவு காலத்துக்குச்
                                                      செய்வது?

**************************************************************************************

ஜெயதேவ் அவர்களின் பின்னூட்டம்.....[மின்னஞ்சலிலிருந்து நகல் எடுத்துப் பதிவு செய்த போது பத்திகள் இடம் மாறிவிட்டன]
[http://kadavulinkadavul.blogspot.com கடவுளின் கடவுள்] New comment on 48] கடவுளின் ‘பயோ டேட்டா’.

இன்பாக்ஸ்

Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
7] நல்ல நண்பர்கள்:................ எவ்வளவு முட்டாள் தனமாக எழுதினாலும் பாராட்டி பின்னூட்டம் போடும் அல்லக் கைகள்.

\\உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
“எல்லாம் என் தலைவிதி” என்று
தன்னைத்தானே நொந்து கொண்டு
நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
வர்கள்.\\ நீ கடவுள் இல்லை என்று சொல்பவன் தானே? உனக்கு மேற்ச்சொன்ன எந்த பிரச்சினைகளும் வாழ்வில் வரக் கூடாதுதானே? ஆனால் உண்மையில் உன்னால் சர்க்கரை வியாதிக்கும், ரத்த அழுத்தத்துக்கும் மாத்திரைகளை உள்ளே தாளாமல் காலம் கடத்த முடியுமா? உன் வெட்டில் பாலாரும் தேனாறும் ஓடுகிறதா? கொவிக்குச் செல்லாமல் என்னைப் கடவுள் இல்லை என்று சொல்லுங்கள், இங்கேயே சொர்க்கம் பாருங்கள் என்று சொல்லுமளவுக்கு எடுத்துக் காட்டாக உன் வாழ்க்கை இருக்கிறதா? நாறிப் போன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் உனக்கு எதற்கு இந்த வீம்பு?

Posted by Jayadev Das to http://kadavulinkadavul.blogspot.com கடவுளின் கடவுள் at 31 May 2012 12:52
Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
6] நண்பர்கள்:....................... பதிவு கேப்பமறித் தனமாக இருந்தாலும்

\\அருமையாக இருக்கிறது. எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தது. \\
\\ஹா ஹா ஹா...அருமை...! \\
என்று பின்னூட்டம் போட்டு இவரைக் குஷி படுத்துபவர்கள். இப்படி நாலு பேரு சொல்லி விட்டால், இவரது பிளாக்கில் உணவு இல்லாமல் எழும்பும் தோலுமாக உள்ள குழந்தைக்கு உணவு சென்று விடும், கோள்களும் நட்சத்திரங்களும் இனி மோதிச் சிதறாது, உலகில் இனி உயிர்கள் ஒன்றோடு ஒன்று மோதித் துன்புற்று அழியாது, வறுமை, நோய் போன்றவற்றால் சித்திரவதைக்கு உள்ளாகாது.
Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
8] எதிரிகள்:............................. எதிர்த்து கேள்வி கேட்டு பின்னூட்டம் போடுபவர்கள். [இப்போதைக்கு நான் ஒருத்தன் தான்!!
Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
5] தொழில்:...................................
மெயின் தொழில் ஆணி பிடுங்குவது. இப்போ பிளாக் போடுறாரு. அதற்க்கு பின்னூட்டம் ஆஹா..... ஓஹோ........பேஷ்.......பேஷ்....... என்று வந்தால் அனுமதிப்பாறு, எதிர்த்து கேள்வி கேட்டால் கடையின் ஷட்டரை இழுத்து விட்டு விட்டு உள்ளே பதுங்கிடுவாறு. மானங் கெட்ட பொழப்பு தான் என்ன பண்றது? கடவுள் இல்லைன்னு சொல்லிட்டா நட்சத்திரங்களும், கோள்களும் இனிமே மோதி வெடித்துச் சிதறவே சிதராதா? அங்கே வாழும் உயிர்கள் இருப்பதாக இவர் நம்பும் விஞ்ஞானிகள் சொல்லாத வரை அவை மோதிச் சிதறினால் தான் என்ன நஷ்டம்?

\\மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
யும், வறுமை, நோய் போன்றவற்றால்
சித்திரவதைக்கு உள்ளாவதையும்
வேடிக்கை பார்ப்பது.\\ இவரோட கருத்துப் படிதான் கடவுளே இல்லையே, இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு காரணத்தைக் கண்டுபிடித்து தீர்க்க வேண்டியதுதானே?
Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
3] பிறந்த தேதி:................................ அறுவது வருஷத்துக்கும் மேல ஆகுது, நாமக்கல்லுக்கு தரித்திரம் பிடிச்சு, இன்னமும் விட்ட பாடில்லை.



Posted by Jayadev Das to http://kadavulinkadavul.blogspot.com கடவுளின் கடவுள் at 31 May 2012 12:50
Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
4] கல்வித் தகுதி:..............................அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கூமுட்டை.



Posted by Jayadev Das to http://kadavulinkadavul.blogspot.com கடவுளின் கடவுள் at 31 May 2012 12:51
Jayadev Das 
19-8-12
பெறுநர்: எனக்கு
பன்னாடை பரமசிவத்தின் ‘பயோ டேட்டா’



1] பெயர்: ...........................................பரமசிவன் [கழுத்தில பாம்பு இருக்குமான்னு கேட்கப் படாது..... இவரே ஒரு பாம்புதான், இன்னொரு பாம்பு எதற்கு?]


2] சிறப்புப் பெயர்கள்:.................சொல்லி மாளாது!
[இவராகவே சூட்டிகொண்டவை]
டாக்குடரு [வெறும் விஷ ஊசிதான் போடுவாரு],
முனிவரு சாரி..... முனைவரு [கூடை முனையறவர் இல்லீங்க, இது வேற],
பழைய பரமசிவம்,
பன்னாடை பரமசிவம்,
இத்தனையும் இருந்தாலும் முட்டாள் கூமுட்டை பரமசிவம் என்ற பெயர் தான் இவருக்கு ரொம்ப பொருந்தும்!!



Posted by Jayadev Das to http://kadavulinkadavul.blogspot.com கடவுளின் கடவுள் at 31 May 2012 12:50

“ஏன் ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டுவிட்டாய்? திறந்து வை  பார்க்கலாம்”   என்று என்னவெல்லாமோ சொல்லிச் சாடினார். நானும், ‘மசுரு கிசுரு’ என்று பதிலுக்குக் கொஞ்சம் சாடினேன். வார்த்தைகளால்  மண்டை காய வைக்கும் கலையெல்லாம் எனக்குத் தெரியாது.

இதன்பிறகு, மட்டுறுத்தலையும் தவிர்த்து, பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைத்தேன்.

என் இன்னொரு பதிவை மட்டும் தந்திருக்கிறேன். அவருடைய பின்னூட்டத்தை வெளியிட விரும்பவில்லை. இந்த ஒன்று போதும்.
கீழ்த்தரமான முறையில் அவருக்கு நான் பதிலடி தராததே அவர் என்னைத் தொடர்ந்து பெயர் குறிப்பிட்டுத் தாக்குவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் நினைக்கிறேன். 

BP, சர்க்கரை இல்லாமல் முழு உடல் நலத்துடன் இருக்கும் எனக்குத் தாங்கும் சக்தி நிறையவே இருக்கிறது.
நான் ஒன்றும் புதிதாக எதையும் கண்டுபிடித்துச் சொல்லிச் சாதனைகள் நிகழ்த்திவிடவில்லை.
இனி எழுதாமல் போனாலும் ஒன்றும் குடி முழுகிப் போகாது.
நேரமிருந்தால் கீழ்வரும் ஒரு பதிவை மட்டும் படித்து முடித்துவிடுங்கள்.
என்றும் நன்றியுடன்,           காமக்கிழத்தன் [எ] ‘பசி’பரமசிவம், நாமக்கல்.
**********************************************************************************************************
05-05-2012.   
முனைவர் பரமசிவம் வழங்கும் 
46] பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்

மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் பதிவர்களிடையே கருத்து மாறுபாடுகள் எழுவதால் கடும் விவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

விவாதம் தேவைதான்.

மதம் சார்ந்த கொள்கைகளில், எது சரியானது அல்லது சிறந்தது என்று கண்டறிய அது உதவுகிறது.

விவாதம் புரிவோர்க்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் அவற்றை ஏற்க மறுத்து, எதிரியை வீழ்த்தும் ஒரே நோக்கோடு...வெறி உணர்ச்சியோடு களத்தில் இறங்கும்போது, எதிர்பார்க்கும் நற்பலன்களுக்குப் பதிலாகப் பாதகங்கள் விளைகின்றன.

மதம் சார்ந்த பதிவர்கள், மற்றும் மதச்சார்பு இல்லாமலே விவாதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் பிற பதிவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்..

பதிவர்கள் விரும்பினால், என் பெயர் சேர்த்து இப்பதிவை எடுத்தாளலாம்; ’காப்பி பேஸ்ட்’  செய்தும் பிற திரட்டிகளில் வெளியிடலாம்


 பதிவ

பதிவர்களுக்குப் பத்து பரிந்துரைகள்.

1] விவாதத்திற்குரிய கருத்துகள் இடம்பெற்ற பதிவை அல்லது அது சம்பந்தப்பட்ட அத்தனை பதிவுகளையும் முழுமையாகப் படியுங்கள்.

2] சிறிது நேரமாவது, மனதில் பதிய வைத்த அக்கருத்துகள் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்.

3] அவற்றில் போற்றுதலுக்கு உரியவை எவை, மறுக்கப்பட வேண்டியவை எவை என்று முடிவெடுங்கள்.

4]எழுப்ப விரும்பும் கேள்விகளைப் பட்டியலிடுங்கள். பொறுமை இழக்காமல், மாற்றுக் கருத்துகளை அல்லது எழும் ஐயங்களை முன் வையுங்கள்.

5] விவாதத்தில் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். [யார் முதலில் இதைக் கடைபிடிப்பது என்ற போட்டி கூடாது]. மனதைப் புண்படுத்தும் வகையிலான தனிப்பட்ட தாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.

6] வெற்றி பெற வேண்டும் என்று மூர்க்கத்தனமாகச் செயல்படாமல், உண்மை அறியும் நல்லெண்ணத்துடன் விவாதம் புரிவது மிகுந்த நன்மை பயக்கும்.

7] விவாதம் முடியும்வரை, நடுநிலை பிறழாமலும் உணர்ச்சி வசப்படாமலும் இருக்க முயலுதல் நன்று.

8]ஒருவர் முன்வைத்த கருத்து சரியெனப் பட்டால், மற்றவர் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுவது உயர் பண்பு என்பதை மறத்தல் கூடாது.

9] ஒரு கொள்கை அல்லது கருத்துக்கான விவாதம் முற்றுப் பெறுவதற்குள் அடுத்த கருத்துக்குத் தாவுதல் விவாதத்தின் சுமுகமான போக்கைச் சீர்குலைக்கும் என்பதை நினைவில் பதித்தல் இன்றியமையாத் தேவை.

10] விவாதத்தின் போக்கைத் திசை மாற்றி, தோல்வியைத் தவிர்க்க நினைப்பது கண்டிக்கத் தக்கது.

இம்மாதிரியான கட்டுப்பாடுகளை விரும்பாத பதிவர், விவாதத்தில் பங்கு கொள்வதைத் தவிர்த்துவிட்டு, தமக்குரிய வலைத்தளத்தில் மாற்றுக் கருத்துகளை வெளியிட்டுக் கொள்ளலாம்.

இதுவே மனித நாகரிகம் ஆகும்.

***********************************************************************************************************
குறிப்பு:

எனக்கும் ‘இவருக்கும்’ எந்தவித ஒட்டுறவும் இல்லை; நேரில் சந்தித்ததும் இல்லை என்பது அறியத்தக்கது.

***********************************************************************************************************