செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஒரு பதிவிரதை ‘பத்ரகாளி’ ஆன கதை!!!

போதையிலிருந்தான் பொன்னுச்சாமி. மனதில் ‘அந்த’ ஆசையும் இருந்தது. ஆனால், கையில் காசு இல்லை. எங்கெல்லாமோ அலைந்துவிட்டுக் குடிசைக்குத் திரும்பியபோது நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டிருந்தது.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்த அவன் ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். ‘ரேட்’ கொஞ்சம் அதிகம். ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான்.

பிள்ளையார் கோயில் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டதால் கையில் சிங்கிள் பைசா இல்லாததை நினைத்து வருந்தினான் பொன்னுச்சாமி.

அவனால் இச்சையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “இன்னிக்கி ஒரு நாள் சரசுவிடம் கடன் சொல்லலாம்” என்று முணுமுணுத்துக்கொண்டே காந்திநகர் போனான்; கதவு தட்டி, வெளியே வந்த சரசுவிடம் பல்லிளித்தான்.

“பணம் வெச்சிருக்கியா?”என்றாள் அவள்.

‘ஹி...ஹி...வந்து...அது வந்து...அப்புறமா...” என்று அசட்டுச் சிரிப்புடன் குழைந்தான் பொன்னுச்சாமி.

“போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ” என்று அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அந்த’ நினைப்பிலிருந்து விடுபட முடியாத பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் அவன்.

அவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவளின் ஜாக்கெட்டுக்குள் படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“என்னடி மிரட்டுறே? உன் புருசன் சொல்றேன், கம்முனு படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவும் ஆசையில் இருவருக்குமான இடைவெளியைக் குறைத்தான்.

“விலகிப் போயிடு” -அவனை எட்டி உதைத்த சிவகாமி, எழுந்து போய் எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்தாள்.

“கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

ஓசைப்படாமல் குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் பொன்னுச்சாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



10 கருத்துகள்:

  1. அருமை நண்பரே சிந்திக்க வேண்டிய ஒரு விடயத்தை கொடுத்து இருக்கின்றீர்கள்... மனைவியை படுடீ என்றவன் விபச்சாரியை சொல்லமுடியவில்லையே ஏன் ? தாலி கட்டி இருக்கின்றோம் என்ற கர்வமா ? இந்தவகையான 'வீச்சருவாள் ' வீராயிகள் வேண்டும் அருமை.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. தூக்கிய அரிவாளைக் கீழே போடாமல் தலையைத் துண்டித்த வீராயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ‘விரதம்’னா அருவருப்புன்னும் ஒரு பொருள் இருக்கு.
      விரதி - அருவருப்பவள், அதாவது கணவனை வெறுப்பவள்.

      நான் சரியாகப் புரிந்துகொண்டேனா?

      நன்றி அருணா.

      நீக்கு
    2. விரதி என்றால் துறவி என்ற பொருளும் உண்டு பரமசிவம் ஐயா.

      நீக்கு
  4. #குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.#
    #குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் பொன்னுச்சாமி.#
    இந்த இரண்டு வரிகளும் ..உங்களின் இரண்டு கதையின் இறுதி வரிகள் ,இப்படி கண்ணுச் சாமிகளையும் பொன்னுச்சாமிகளையும் காயப் போடுவது நியாயமா :)
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக்கே கதின்னு கிடக்கிறவங்களை இப்படிக் காயப்போட்டாலும் திருந்துற மாதிரி தெரியலையே!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  5. மனுசனா இவன்...? அதை வெட்டி விட்டால் சரியாப் போச்சி...!

    பதிலளிநீக்கு
  6. அதுவும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்!

    நன்றி DD.

    பதிலளிநீக்கு