தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Feb 4, 2015

ஆசைப்பட்ட குழந்தையைப் பெறுவதற்கான எளிய வழி! இயற்கை நெறி!!

9493 பேர் விரும்பி வாசித்த பதிவு இது! இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடக்க வேண்டும் என்னும் ‘பேராசை’யில் மீண்டும் வெளியிடுகிறேன்!!!

னித் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ என்னும் நூலில் எப்போதோ படித்தது இது. ஆசைப்பட்ட பிள்ளையை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிவகை அதில் விவரிக்கப்பட்டிருந்தது. அதை உள்ளது உள்ளபடி என் நடையில் தருகிறேன்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை ‘சூரிய கலை’ என்றும், இடது துவாரத்தில் அது நிகழ்ந்தால், அதைச் ‘சந்திர கலை’ என்றும் சொல்வார்கள். இது உங்களுக்கு[ஆண்களுக்கு]த் தெரிந்ததுதான்.

இந்தப் பதிவின் மைய இழையே இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைவு கொள்வது மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவளிடமும் சொல்லி வைப்பது மிகவும் அவசியம்.

கீழ்க்காணும் விடயத்தையும் அவர் காதில் போட்டு, மனதில் ‘சக்’கென்று பதிய வைப்பது உங்களின் தலையாய கடமை.

விந்தணுக்கள், வீரியத்துடன் வெளிப்பட்டு, பெண்ணின் யோனிக் குழாயில் பரவி, அவளைச் சிலிர்க்கச் செய்யும் அந்தத் தருணத்தில், உங்கள் நாசியில் ‘சூரிய கலை’ சுவாசம் [நாசியின் வலது துவாரத்தில் மூச்சுக் காற்று உட்புகுந்து வெளியேறுவது] இடம் பெறுமேயானால், கருவில் உருப்பெறும் சிசு ஆணாக இருக்கும்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன?

அது மிக மிக எளிய ஒன்று.

சேர்க்கை கொள்வதற்கு முன்பு, நீங்கள் உங்கள் மனைவியை எதிர்கொள்ளும் நிலையில் இடப்புறமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும். படுத்த சிறிது நேரத்திலேயே, வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை உங்களால் அறிய முடியும். இதுவே சூரிய கலை!

எதிரெதிராக, ஒருவர் முகம் ஒருவர் பார்த்தவாறு, ஒருக்களித்துப் படுத்த நிலையில் புணர்ச்சி செய்வது சிரமம் ஆயிற்றே என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால், நீங்கள் மன்மதக் கலையை இன்னும் சரிவரக் கற்கவில்லை என்று அர்த்தம்.

தொடர்ந்து முயலுங்கள்; சாதிப்பீர்கள்.
இதே போல, பெண் பிள்ளை பெற விரும்பினால், நாசியின் இடது துவாரத்தில் சுவாசம் நிகழும் வகையில், வலப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்துக் கலவி புரிய வேண்டும்.

ஆரம்ப நிலையில் இம்மாதிரி முயற்சிகள் தோல்வியில் முடியலாம். இன்பம் பெறுதலே நோக்கம் என்றில்லாமல், விரும்பிய சிசுவைப் பெறுவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

சூரிய கலை, சந்திர கலைன்னு கணக்குப் போட்டிட்டிருந்தா கலவியில் ஈடுபாடு குறைஞ்சிடுமேன்னு நீங்க கவலைப் படுவதும் புரிகிறது. விரக தாபத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசுவதன் மூலம் உணர்ச்சி வேகம் தணியாமல் பாதுகாக்கலாம்.

மேற் சொன்ன முறையைக் கையாண்டும் ஆசைப்பட்ட ஆண் குழந்தையைப் பெற இயலவில்லை என்றால், ஆணின் குரோமோசோமில் y இல்லை என்பது அறியற்பாலது.

ஆணின் x ம் பெண்ணின் x ம் சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணின் x ம் ஆணின் y ம் சேர்ந்தால் ஆண் குழந்தை. ஆணிடம் y குரோமோசோம் இல்லையாயின் ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்பது போன்ற உடற்கூற்று உண்மைகளெல்லாம் நீங்கள் அறிந்தவைதாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயன் தரும் என்று நீங்கள் நம்பினால், நன்றி சொல்ல நினைப்பீர்கள். அது இப்போது வேண்டாம். பெண்ணோ ஆணோ விரும்பிய குழந்தையைப் பெற்ற பிறகு சொல்லலாம். அதுவும் எனக்கல்ல; சுவர்க்கத்தில் உலா வரும் மறைமலை அடிகளாருக்கு!

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

10 comments :

 1. கலவி கல்விக்கு வாழ்க மறைமலை அடிகளார்...!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. வெகு நுட்பமான இயற்கையை வெறும் சூரிய கலை, சந்திர கலை என்று குறுக்கிவிடமுடியாது. 1000ல் ஒன்றாக பிறக்கும் டவுன் சின்ட்ரோம் கொண்ட குழந்தைகளோ, பருவ வயதில் அறியப்படும் பாலினக் குறைபாடுகளோ, ஆட்டிசம் குறையோ எதுவும் நம் கையில் கிடையாது. தம்பதிகள் தங்கள் ஆசைக்கு அஸ்த்திக்கு என்று சுயநலம் பாராமல், குழந்தையின் நலனைக் கருதவேண்டும். ஆணோ பெண்ணோ வரப்போகும் குழந்தை நல்லமுறையில் வாழத் திட்டமிடுவதே அறிவுடைமையாகும்.

  ReplyDelete
  Replies
  1. மறைமலை அடிகளை மேற்கோள் காட்டினேனேதவிர, அவர் சொன்னது சரியே என்று வாதிடும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த முறையைப் பின்பற்றிப் பலன் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதும் நமக்குத் தெரியாது; கணக்கெடுப்பும் நடத்தப்பட்டதில்லை.

   ‘ஆணோ பெண்ணோ வரப்போகும் குழந்தை நல்லமுறையில் வாழத் திட்டமிடுவதே அறிவுடைமையாகும்’ என்ற தங்களின் கருத்து எனக்கும் உடன்பாடானதுதான்.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி குலவுசனப்பிரியன்.

   Delete
 3. படித்தேன் தெரிந்து கொன்(றே)ன் நண்பரே...
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கொன்றது என் மீது உண்டான கோபத்தத்தானே?

   நன்றி கில்லர்ஜி.

   Delete
  2. அதுவும்தான் மற்றபடி என்னை நானே... புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.
   தாங்கள் உலகளந்த நம்பியாக எனது ‘’மௌனமொழி’’ படித்தீர்கள்தானே....

   Delete
  3. உங்கள் உள்ளம் கள்ளம் கபடமற்றது என்பதைப் புரிந்து வைத்திருப்பவன் நான்.

   உங்கள் மௌனமொழி நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்ட ஒன்று.

   நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 4. இது மட்டும் உண்மையானதாக இருந்தால் ,இன்றைய தலைமுறையில் பெண்களே பிறந்து இருக்க மாட்டார்கள் ...சென்ற தலைமுறையினர் மறைமலை அடிகள் சொன்னதை முயற்சிக்காமலா இருந்து இருப்பார்கள் ?
  த ம 5

  ReplyDelete
 5. நீங்கள் சொல்வதும் உண்மைதான். ஆனாலும், ஆசைக்காகவேனும் சிலர் பெண் குழந்தைகளை விரும்பியிருக்க மாட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

  நன்றி பகவான்ஜி.

  ReplyDelete