தேடல்!

மனிதர்களின் ஆறறிவுக்கும் மேலான பேரறிவு உடையோனே கடவுள் என்கிறார்கள். பேரறிவுக்கும் மேலான பெரும் பேரறிவு இருக்கும்தானே?!

Apr 19, 2015

பாவம் இந்தப் பாலியல் பெண் தொழிலாளர்கள்!!! [old is gold!?]

"இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் ஆயிரக் கணக்கான பெண்களில் பலரும் சிறு வயதிலேயே தந்தை, தாய்மாமன், மச்சான், சொச்சான் போன்ற மிக நெருங்கிய ரத்த உறவு கொண்டவர்களாலேயே வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டவர்கள்; குடும்ப உறுப்பினர்களாலும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள்" என்கிறார் இந்தத் தொழிலில் ‘முத்துக் குளித்த’ ஒரு ’முன்னாள்’ பிரபலம்! [பெயர் தவிர்க்கப்படுகிறது. interviewed in 'Not For Sale’, 2004]
"இதில் ஈடுபட்டவர்கள் பலரும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இத்தொழிலைத் தலை முழுகியவர்கள்.” ['Avaria', Shelly Lubben's Blog, 06.12.2007].

இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் சராசரி வயது 18 ஆகும்.[ABC News quoted on erasethedark.com]

நிறையச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இளம் பெண்கள் வருகிறார்கள். ஆனால், உண்மையில் சம்பாதிப்பவர்கள், பேரழகும் கட்டான உடலமைப்பும் அதிர்ஷ்டமும் உள்ள கொஞ்சம் பெண்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தரகர்களும்தான்.

இதில் ஈடுபடும் தொழில்காரிகள், A, B, C என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

'A’ தரத்தில் உள்ளவர்களைத் தயாரிப்பாளர்கள் தேடிப் போவார்கள்; கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பார்கள்; மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

Bயும் Cயும் நம் சினிமாக்களின் துணை நடிகைகள் போல! மேற்சொன்ன கவுரவங்கள் மிஸ்ஸிங்! [Jonathan Morgan, ex .... director, The Guardian, march 17, 2001].

“இது மிகப் பயங்கர அனுபவம். இதில் ஈடுபடும்போது, பெண்கள் வலியால் துடிப்பார்கள்; அலறுவார்கள். இவர்களில் பலரும் பாலியல் தொற்று நோய்களுக்கும், H.I.V தொற்றுக்கும் ஆளாகிவிட்டவர்கள்”என்றிப்படித் தன் அனுபவங்களை அடுக்குகிறார் ஒரு male....performer [at the Los Angeles Hearings of The Attorney General Commission, 2005] 

தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகிறார்கள் இவர்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, மனநோயாளிகளாய் மாறுகிறார்கள்.

இத்தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகப் பலரின் , குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. 75%---80% பேர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நிறையத் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளனவாம்.

இளம் பெண்களைக் காவு வாங்கும் ‘இந்த’த் தொழில் எது என்பது பலரும் அறிந்ததே. ஆங்கிலத்தில் ‘........phy’ என்று சொல்லப்படும் ஆபாசப் படத் தயாரிப்பு!

இவ்வகைப் படங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த மையமாக Hungary- Budapest திகழ்கிறதாம்!

55% நிறுவனங்கள் [Internet Child .... Industry] அமெரிக்காவிலும், 33% நிறுவனங்கள் ரஷ்யாவிலும் உள்ளனவாம். 

இந்தத் தொழிலில் நம் பாரதேசம் பின்தங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது!

ஒரு பக்கத்தில் ஆண் பெண் சமத்துவத்துக்கான ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, வக்கிர புத்தியுடன் பெண்களை உடலுறவில் ஈடுபடுத்திப் படம் எடுத்து உலகம் முழுக்கப் பரவவிட்டுப் பணம் சம்பாதிக்கிறது ஆண் வர்க்கம்.

இணைய வலைத்தளங்களில் உலா வரும் கோடிக்கணக்கான ஆபாசப் படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சில குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அவையும் பின்னர் அடங்கிவிடுகின்றன.

ஆபாசப் படங்களுக்கு எதிரான குரல் [anti .... websites] இணையத்தில் ஒலிப்பதே இல்லையா என்னும் ஆதங்கத்தில் தேடுபொறிகள் வாயிலாகத் தேடிய போது பல தகவல்கள் கிடைத்தன. மேற்கண்டவை அவற்றில் சில.
உடலுறவு கொள்ளும் ‘முறைகள்’ குறித்துப் படங்கள் [ஓவியங்களைப் பயன்படுத்தி] தயாரிப்பதும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு முன்னரே பாலுறவுக் கல்வி கற்றுத் தருவதும் வரவேற்கப்பட வேண்டியவை.

நடைமுறை சாத்தியம் இல்லாத,  உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கிற படங்களை எடுத்து அவற்றைப் பலரும் பார்க்க வழிவகை செய்வது கண்டிக்கத் தக்க மாபெரும் குற்றம் ஆகும். அக்குற்றங்களை வேரோடு களைவது இன்றைய இளைஞர்களால் சாத்தியப்படும்.

அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மிக மிகச் சிறிய முயற்சியே இப்பதிவு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@