அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 4 மே, 2015

இவர்கள் நம் மூதாதையர்களா? அல்ல, அல்ல, அல்ல .....முழுமூடர்கள்!!!

பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடும்போது, நம் முன்னோர்களைத் துணைக்கழைப்பது நம் வழக்கம். அந்த முன்னோர்கள் கொண்டிருந்த படுமுட்டாள்தனமான நம்பிக்கைகளில் சில..........


காசிகர்வதா:
காசியில், ‘விஸ்வேஸ்வரநாத்’ ஆலயத்தில்  ஒரு தீர்த்தக் கிணறு இருந்தது. கல்லைக் கட்டிக்கொண்டு இந்தக் கிணற்றில் விழுந்து மூழ்கி இறந்தால் உடனடி மோட்சம் கிடைக்குமாம். [அப்படி மோட்சம் அடைந்தவர்கள் அத்தனை பேருமே இன்றளவும் அங்கே சோமபானம் பருகியபடி ஆனந்தப் பரவசத்தில் மூழ்கித் திளைக்கிறார்களாம்!]

ரத யாத்ரா:
‘ஜெகனாத்புரி’யில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழாவில் ‘ரத உற்சவம்’ இடம்பெறும். ஓடிக்கொண்டிருக்கும் ரதத்தின் சக்கரத்திற்கு அடியில் பாய்ந்தால், அடுத்த வினாடியே மோட்சத்திற்கு அதிரடிப் பயணம் மேற்கொள்ளலாம். [இத்தகு  புண்ணிய ஆத்மாக்களின் வருகைக்காக மோட்சத்தின் வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்குமாம்!]
நரவதா:
தம் குழந்தையின் நல்வாழ்வுக்காக, ஓர் ஆதரவற்ற ஏழைக் குழந்தையைப் பிடித்துவந்து, கடவுளுக்குப் பலியிடுவது![ஏழைக் குழந்தைகளின் நிணமும் சதையும் குருதியும் தேவனுக்கு மிகவும் பிடித்தமானவையோ!?]

கன்யவதா:
ராஜபுதனத்தில், ராஜபுத்திரர்கள் தங்களின் புத்திரிகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது, தங்களின் உறவினர் முன்பு தலைகுனிந்து பணிந்து வணங்கவேண்டும். இதை விரும்பாத அவர்கள் பெண் குழந்தை பிறந்தவுடனே அதைக் கொன்றுவிடுவது வழக்கமாக இருந்தது.

தேவதாசிப் பிரதா:
இளம்பெண்களைக் கடவுளுக்குத் திருமணம் செய்துகொடுப்பது. [பின்னர் அவர்கள் விபச்சாரிகள் ஆக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே]

சதிப் பிரதா:
உடன்கட்டை ஏறுதல்/ஏற்றுதல்.

கங்கா பிரவாஹ்:
கங்கை, குழந்தை வரம் நல்கும் தேவதை ஆவாள். கங்கையில் நீராடினால் குழந்தை பிறக்கும். இப்படிக் குழந்தை பெற்றோர் பல்லாயிரக் கணக்கிலாம்!

இவை தவிர, சமூகச் சீரழிவுகளுக்குக் காரணமான எத்தனையோ மூடநம்பிக்கைகளுக்கு நம் மூதாதையர்களில் பலர்[எல்லோரும் அல்ல] அடிமைகளாய் இருந்துள்ளனர் என்பது அறியற்பாலது; ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

=============================================================================================
உதவி: எம்.வி.சுந்தரம் எழுதிய ‘சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும்’[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்; ஐந்தாம் பதிப்பு;செப்டம்பர், 2008]. 

நூலாசிரியருக்கு நன்றி.

=============================================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக