தேடல்!

கடவுளின் பெயராலும் புனித நூல்களின் பெயராலும் மூடநம்பிக்கைகளைத் திணிப்பவர்கள் புத்திசாலிககள். நம்புகிறவர்கள் படுமுட்டாள்கள்!!!

Jul 18, 2015

அன்னை மேரியும் அருள்மிகு அம்மனும் கண்ணீர்விட்டு அழுவது ஏன்?!‘மாதா சிலையில் கண்ணீர் வழிந்ததாகப் பரபரப்பு’ என்னும் தலைப்பில் இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்தியே இந்தவொரு பதிவு எழுதக் காரணமாக அமைந்தது.

‘அன்னை மேரியின் சிலை கண்ணீர் வடித்தது’; ‘அம்மன் சிலையிலிருந்து கண்ணீர் பெருகியது’. ‘பிள்ளையார் சிலையில் கண்ணீர்’ என்றிவ்வாறான பரபரப்பூட்டும் செய்திகள் அவ்வப்போது நாளிதழ்களில் வெளியாவது யாவரும் அறிந்ததே.


அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு.!!
இம்மாதிரிச் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி ஆராய்வது, அல்லது அவை  பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது நம் நோக்கமல்ல. காரணம்.....

விமர்சித்த சிலர், ‘மத உணர்வுகளைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் வழக்குத் தொடுக்கப்பட்டு, கம்பி எண்ணி, ஜெயிலில் ‘களி’ தின்ற சம்பவங்கள்!

கீழ்வரும் செய்தியைப் படியுங்கள்:

#‘பிள்ளையார் சிலை குடித்த பாலும் ஏசு சிலை வடித்த கண்ணீரும்’

சனால் எடமருகு’ - ஒரு பகுத்தறிவாளர். இவர் மீது மும்பை நகரின் மூன்று காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படுமானால் இவருக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.


இவர் செய்த குற்றம்? “மக்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தினார், மதப் பகையுணர்வைக் கிளறிவிட்டார், அமைதியைச் சீர்குலைக்க முயன்றார்...” என்பன.

என்ன நடந்தது? மும்பையின் இர்லா சாலையில் ஒரு வேளாங்கன்னி ஆலயம் இருக்கிறது, அதன் வளாகத்தில், ஏசு சிலுவையில் தொங்குகிற சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம், திடீரென ஏசு சிலையின் பாதத்திலிருந்து தானாகவே சொட்டுச் சொட்டாக நீர் சொட்டத் தொடங்கியிருக்கிறது. அது ஏசுவின் கண்ணீர் என்றும், அதற்கு நோய்களைப் போக்கி இல்லங்களைப் புனிதப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதை நம்பிய ஒரு பகுதி மக்கள் வரிசையில் நின்று சொட்டுவடி நீரை பாத்திரங்களிலும் பாட்டில்களிலும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.


தகவலறிந்து இரண்டு வாரங்களில் அங்கே வந்து ஆராய்ந்த எடமருகு, அரை மணி நேரத்தில் உண்மையைக் கண்டுபிடித்தார். சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே ஏறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது.

இந்த உண்மையைக் கண்டுபிடித்ததோடு நிற்காமல் இதை ஊரறிய அறிவிக்கவும் செய்தார் எடமருகு. செய்யலாமோ? புகார் பதிவு செய்திருக்கிறார்கள்.

முன்பு இப்படித்தான் பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிட்டார்கள். அது “பரப்பு இழுவிசை” எனும் இயற்பியல் செயல்பாடே என்று அறிவியல் இயக்கத்தினரும் பகுத்தறிவாளர்களும் வெளிப்படுத்தினார்கள். அந்த இயற்பியல் செயல்பாட்டின்படி மார்க்ஸ், பெரியார் சிலைகள் கூட “பால் குடிக்கும்” என நிரூபித்துக் காட்டினார்கள்.

அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பொறுத்தவரையில் மத வேறுபாடே இல்லை! இந்த உண்மையைச் சொல்வது எப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும்? மறைநூல்களில் எங்காவது இப்படி ஏசு சிலை கண்ணீர் வடிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறதா? இது எப்படி மதப் பகைமையைத் தூண்டும்? “ஏசு சாமி போலி, என் மதத்தின் சாமிதான் ஒரிஜினல்” என்று எடமருகு ஏதாவது பிரச்சாரம் செய்தாரா? இது எப்படி பொது அமைதியைக் குலைக்கும்? பொதுமக்கள் ஏசுவின் கண்ணீர்ச் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், எடமருகுவின் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், தங்களுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதை ஒரு மதப்பிரச்சனையாக மாற்றச் சிலர் முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

உண்மையிலேயே ஏசு சிலை கண்ணீர் வடிக்கிறது என்றால், எட மருகு சொல்வது பொய் என்று நிரூபித்து மகிமையை நிலைநாட்ட வேண்டியதுதானே? எதற்காகக் காவல் நிலையம் செல்ல வேண்டும்? கர்த்தர் உள்ளிட்ட மகிமை மிகு கடவுளர்களால் எடமருகு போன்றோரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தானே சட்டத்தின் துணையுடன் அவர்களது வாயை அடைக்க முயல்கிறார்கள்? அறியாமல் செய்கிறார்கள், கர்த்தரே இவர்களை மன்னியும் என்று சொல்ல முடியவில்லை.

இந்தியாவின் அரசமைப்பு சாசனம், மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கூறுகிறது. அரசு அதைச் செய்யத்தவறுகிறது. சில தனி மனிதர்களும் முற்போக்கான இயக்கங்களைச் சேர்ந்தோரும் செய்கிறார்கள். அவர்களைக் கைது செய்வது நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அவமானப்படுத்துகிற செயல்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறவர்களாக, எதையும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்பவர்களாக இருக்கக்கூடாது என்பது நாட்டின் வளங்களை எல்லாம் வளைத்துக் கொழுக்கிற நவீன உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்ளையர்களின் விருப்பம். எல்லா மதங்களையும் சேர்ந்த திடீர் மகிமைக் கதைகள் அந்த விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயல்கின்றன. அந்தக் கதைகளின் மூளைச்சலவை இரைச்சல்களை மீறி உண்மைகளும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன - அடக்குமுறைகளைப் பொருட்படுத்தாமல்.[(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு நாளேட்டின் 7.5.2012 இதழில் பிரவீன் ஸ்வாமி எழுதியுள்ள கட்டுரை)
நீங்கள் கதையின் பக்கமா, உண்மையின் பக்கமா?#

நாம் எந்தப் பக்கமும் இல்லை. ‘சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே ஏறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது’ என்ற ‘எடமருகு’வின் அறிவியல் பூர்வமான விளக்கத்தை வழிமொழியவும் இல்லை.

நமக்கு ஏன் இம்மாதிரி வம்பு வழக்கெல்லாம்?!

லகெங்கும்,  கடவுளர்களின் சிலைகளில் கண்ணீர் வடிந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுவதோடு, அவற்றிற்கான ஒரு சிறு பட்டியலையும் ‘விக்கிப்பீடியா’ வெளியிட்டுள்ளது.
List of weeping statues[edit]
A very small number of weeping statues have been recognized by the Catholic Church, e.g. in Syracuse Sicily the 1949 shedding of tears from a statue was recognized by the Catholic bishops of Sicily on August 29, 1953.[13] Our Lady of Akita was declared as worthy of belief by the Holy Office in 1988, and remains the only weeping statue recognized by the Holy Office.
The following is a list of the more publicized claims. The veracity of these claims is difficult to establish and many have been declared hoaxes[புரளி] by Church officials.

Date
Location
Claims
Reference
1949
Syracuse, New York
human tears — unverified
June 1985
tears of human blood, rejected by local bishop
Catholic News [2]
March 1989
tears of pig's blood, rejected by the Archdiocese of Manila
February 1995
statue of Our Lady, bought in Medjugorje, tears of blood
April 1997 till present
statue of Our Lady of the Sacred Heart sheds a red liquid - unverified
March 2002
statue of Pio of Pietrelcina shed a red liquid, but was rejected by the Vatican
September 2002
wept scented tears, apparitions, accepted.
February 2003
unverified
September 2004
appearance of scented oil, blinked and claimed a cure — not verified
November 2005
tears of blood, called a hoax on the Paula Zahn TV show
March 2006 onwards
tears of blood, appearance of oil, honey, milk — not verified
January 2006 till present
tears of blood, appearance of oil, salt - unverified, self-published claims