அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 11 நவம்பர், 2015

அம்மம்மம்மா!....‘அவர்’ படைத்த நூல்களின் விற்பனை 5 கோடியே 77 லட்சத்து..........

கி.பி.2000க்கு முந்தைய புள்ளிவிவரப்படி, சோவியத் ரஷ்யாவில் மட்டும் அவரின் நூல்கள் 1822 பதிப்புகள் வெளிவந்துள்ளன. 5 கோடியே 77 லட்சத்து 9 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனையாகியுள்ளன.

ரஷ்ய மொழி அல்லாத பிறமொழிப் பதிப்புகள் 856 வெளியாகியுள்ளன. இவற்றில் விற்பனையானவை 70 லட்சம் பிரதிகள். ரஷ்யா, இவர்தம் நூல்களை உலகின் பல்வேறு அந்நிய மொழிகளில் மொழியாக்கம் செய்து 66 பதிப்புகளை வெளியிட்டுள்ளது. விற்பனையானவை 4 லட்சம் பிரதிகள்.

அவரின் 47 நூல்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
1968 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி அவரின் நூற்றாண்டு விழா கிறேம்ளின் மாளிகையில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகளில் 68 ஆம் ஆண்டு முழுவதும் அவரின் நூற்றாண்டையொட்டி இலக்கிய வி்ழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

மக்கள் அழுதபோதெல்லாம் அவரும் அழுதாராம்: அவர்கள் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடியபோதெல்லாம் அவரும் ஆடினாராம்.

அந்த அதி்சய எழுத்தாளர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் அறிந்தே இருப்பீர்கள். அவர்..........

மார்க்சிம் கார்க்கி! 

ரஷ்யாவின் இலக்கிய ஞானி டால்ஸ் டாய், சிறுகதை மன்னன் செக்கோவ், ராட்சத எழுத்தாளர் றொமெயின் றோலன்ட், பிரிட்டனின் விஞ்ஞான எழுத்தாளர் ஏச்.ஜி.வெல்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவராம் இவர்.

இவருடைய ‘தாய்’ என்னும் உன்னத நவீனம் இன்றளவும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிப் பிரகடனமாகத் திகழ்கிறது. இவர் இதைத் தம் தாய்நாட்டில் எழுதவில்லை; ஜார் ஆட்சியின் கொலைக்கரங்களின் பிடியிலிருந்து தப்பித்து, அமெரிக்காவின் அட்றியன் என்னும் இடத்தில் தங்கியிருந்து எழுதினாராம்.

தாய் நாவலைப்போல மற்றுமொரு நவீனத்தை படைத்துத் தரும்படி லெனின் கார்க்கியிடம் சொன்னாராம். அதற்கு அவர் தந்த பதில்.....

“அக்டோபர் புரட்சி மீண்டும் ஒருமுறை நடந்து நான் மீண்டும் ஒருமுறை பிறந்தால்தான் இது சாத்தியப்படும்.”

கார்க்கி எழுதிய நூல்களின் விற்பனை மட்டும் 5 கோடியே 77 லட்சத்தைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது. 

நம் தாய் மொழியாம் தமிழில் எழுதப்பட்ட அனைத்து நூல்களின் விற்பனை இந்த எண்ணிக்கையைக் கடக்குமா?!

எண்ணிப் பார்க்கையில் மனம் கலங்குகிறது.
=============================================================================================

நீர்வை பொன்னையன் அவர்கள் எழுதிய , ‘முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்’[குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை. 2002 பதிப்பு] என்னும் நூலிலிருந்து திரட்டிய தகவல்களின் தொகுப்பு.





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக