திங்கள், 11 ஜூலை, 2016

'விந்து’வில் சில விந்தைகள்!

டவன், ஒருமுறை வெளியேற்றும் விந்துவில்[சுமார் 2 முதல் 6 மில்லி] ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். இரண்டு கோடிக்குக் குறைதல் கூடாதாம்; குறைந்தால் பிரச்சினைதானாம்.

என்ன பிரச்சினை?

பெண்ணைக்  கருத்தரிக்கச் செய்ய அந்த ஆடவனால் இயலாது.

விதிவிலக்கும் உண்டென்கிறார்கள் மருத்துவர்கள்.

விந்தணுக்கள்  ‘வீரியம்’ மிக்கவையாக இருந்தால், முப்பது லட்சம் அணுக்கள் மட்டுமே இருந்தாலும் போதும் என்கிறார்கள். இவை பெரும்பாலோர் அறிந்த தகவல்களே.

ஒரு சந்தேகம்.

பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தப்படும் முப்பது லட்சம்[குறைந்தபட்சம்] உயிரணுக்களுமே வீரியம் மிக்கவைதான் என்றாலும், அவற்றில் ஏதேனும் ஒன்றுதான்[சில நேரங்களில் அந்த எண்ணிக்கை இரண்டாக இருந்தால் இரட்டைக் குழந்தைகள்!?] முன்னிலை பெற்றுக் கரு முட்டையைத் துளைத்து உள்ளே செல்கிறது!

விந்தணுக்களின் வீரியமும், அவற்றின் ஓட்ட வேகமும் ஆணுக்கு ஆண் வேறுபடலாம். ஆனால், ஒத்தை ஆடவனுக்குள் உற்பத்தியாகி வெளியேற்றப்பட்டு, கருப்பாதையில், கருமுட்டையை நோக்கி நான் முந்தி நீ முந்தி என்று பாய்ந்து செல்லும் அத்தனை விந்தணுக்களின் வேகமும் ஒன்று போலத்தானே இருத்தல் வேண்டும்? மாறுபடுகிறதே, ஏன்? 

காரணம்.....

எண்ணிக்கை எதுவாயினும், மொத்த அணுக்களும் ஒரே சமயத்தில் உற்பத்தியாவதில்லை; அவை,  மைக்க்க்க்க்க்ரோ நொடி வித்தியாசத்தில் ஒன்றன் பின் ஒன்றாக உற்பத்தியாகின்றன[சரிதானே?]. அவ்வாறு உற்பத்தியாகும்போது, அதே மைக்ரோ நொடி வித்தியாசத்தில் ஆடவனின் மனநிலையும் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றமே விந்தணுக்களின் மாறுபட்ட சக்திக்கும்[வீரியத்திற்கும்] குணங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது[கருவில் குழந்தையாக வளரும்போது அவையும் வளர்ச்சியும் மாற்றமும்  பெறுகின்றன] என்று சொல்லலாமா?

இரட்டைக் குழந்தைகள், இருவேறு வகையான  குணங்களைப் பெற்றிருப்பது இக்கருத்துக்கு வலுச் சேர்க்கிறதுதானே?

அறிவியல் பதிவு எழுதும் பேராசையில் இதை எழுதியிருக்கிறேன்; மிக நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் வெளியிட்டிருகிறேன். பிழை காணின், அன்புகொண்டு திருத்துங்கள்.

நன்றி.
===============================================================================
வெளியூர்ப் பயணம் மேற்கொள்கிறேன்; பின்னூட்டங்கள் இருப்பின், ஊர் திரும்பிய பின்னர் ‘நன்றி’ சொல்வேன். 







3 கருத்துகள்:

  1. தகவல் நன்று நண்பரே கருத்துரை சொல்லும் அளவுக்கு பக்குவம் இல்லை என்றே நினைக்கிறேன் காரணம் விஞ்ஞான விடயமும் கலந்து இருக்கின்றது - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. நண்பரே கருத்துரைப் பெட்டியை மூடி விட்டீர்களே...?

    பதிலளிநீக்கு