வெள்ளி, 18 நவம்பர், 2016

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமும் அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் பேட்டியும்!

“கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும் மருத்துவர்களின் சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்.....” என்று முதல்வருக்கு சிகிச்சை அளித்துவரும் அப்போலோ டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில்[பாலிமர் தொலைக்காட்சி; 17.11.2016, பிற்பகல் 02.15] கூறியிருக்கிறார்.

நம் முதல்வர் அவர்கள் முழுமையாகக் குணமடைந்ததில் மெத்த மகிழ்ச்சி.
நன்றி:Oneindia Tami
இப்பதிவின் நோக்கம், மருத்துவர் பிரதாப் சி. ரெட்டியின் பேட்டியில் இடம்பெற்றுள்ள தவற்றினைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே.

பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர், ஜாதி, மதம், இனம், மொழி, கடவுள் நம்பிக்கை, நாத்திகம் என எந்தவொரு வரையறைக்கும் கட்டுப்படாதவர் ஆவார்[தனிப்பட்ட வாழ்க்கையில் இது பொருந்தாமலிருக்கலாம்]. 

தம்மிடம் சிகிச்சை பெறும் நோயாளியின் நிலை குறித்து அறிவிப்புச் செய்யும்போது, முந்தைய பத்தியில் குறிப்பிட்டவாறு தாம்  சார்பும் அற்றவர் என்பதை மறத்தல் கூடாது. ஆனால் ரெட்டியோ.....

தாம் அப்படிப்பட்டவர் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையாலும்...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சொந்தபந்தம் என்று எந்தவொரு நாதியும் இல்லாத அனாதை நோயாளிகளுக்கு எவரும் பிரார்த்தனை செய்வதில்லை; செய்யப்போவதும் இல்லை. அத்தகையவர்களைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சை மட்டும் போதாது என்று நினைக்கிறாரா ரெட்டி?

பணம் படைத்தவர்கள் எப்படியோ, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அல்லாடுகிற ஏழை எளியவர்கள்,  நோயைக் குணப்படுத்த அல்லும் பகலும் ஆண்டவனைப் பிரார்த்தித்துப் பலன் கிடைக்காத நிலையில்தான் மருத்துவர்களை நாடுகிறார்கள் என்பதை பிரதாப் சி .ரெட்டி போன்ற மருத்துவர்கள் மறந்துவிடக் கூடாது.
===============================================================================











13 கருத்துகள்:

  1. நண்பரே அதீத பணம் இருப்பவர்கள் கடவுள்கள் என்பதுதான் சாமான்யனின் புரிதல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்றிலும் உண்மை.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  2. டாக்டர்தான் இப்படி என்றால் ,விஞ்ஞானிகள் செயற்கைக் கோளின் மாதிரிக்கு பூஜை செய்கிறார்கள் ,நல்லவேளை ,ராக்கெட்டுக்கு சந்தனம் தடவாமல் இருக்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருங்காலத்தில் தடவுவார்களோ என்னவோ!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  3. சரியான கேள்வி நண்பரே இதை எல்லா மக்களும் உணரவேண்டும்
    நண்பரே கருத்துப்பெட்டியை தொடர்ந்து திறந்து வைக்கவும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. i do not understand what is wrong in mr reddys statement ji
    rather the statement shows his humbleness ...
    BY GODS GRACE.... this phrase is universally popular....
    probably you do not believe in prayers... ok..

    பதிலளிநீக்கு
  5. உங்களை ரொம்ப நாள் கழித்து சந்தித்ததில் மிக மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. மிக மிக மகிழ்ந்தேன் Alien.
    profile image to blogger comment இல் பிரச்சினை. நீண்ட நேரம் முயன்றும் சரி செய்ய முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. சரி.
    அப்போலோ டாக்டர் சொன்னது தப்பே.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் ஆதரவான கருத்துக்கும் மிக்க நன்றி வேகநரி.

    பதிலளிநீக்கு