தேடல்!

புதுப்புதுக் கடவுள்களை மானாவாரியாய் உற்பத்தி செய்து, மனிதர்களை அக்கடவுள்களின் ‘கொத்தடிமைகள்’ ஆக்கினார்கள் மதவாதிகள்!

Nov 23, 2016

வெங்காயப் பதிவு!

 1. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீர்த் தொற்றால் அவதிப்பட்டேன். மருத்துவரைச் சந்தித்து, 'complete urine test', 'urine culture test'  ஆகிய பரிசோதனைகள் செய்து, மருந்து மாத்திரை சாப்பிட்டும் நோயிலிருந்து விடுதலை பெற ஒரு மாதத்திற்கும் மேல் ஆயிற்று. இதே நோய் கடந்த ஆண்டும் என்னைத் தாக்கித் துன்புறுத்தியது. கூகுளாரின் உதவியால் சிறுநீர்த் தொற்று தொடர்பான பதிவுகளைப் படித்தேன். அவற்றுள் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். இப்போதெல்லாம் என் தினசரி உணவுப் பட்டியலில் வெங்காயம் இடம்பெறத் தவறுவதே இல்லை. பதிவர் மோகன் குமாருக்கு நன்றி.
 2. வெங்காயம்:
 3. வெங்காயம் காரத்தன்மை மிக்கது. அதற்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,
 4. * முருங்கைக்காயைவிட அதிகப் பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.
 5. * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளையும் சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
 6. * சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்தப் பழக்கத்தைத் தொடர்பவர்களுக்குச் சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்துக் கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
 7. * யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
 8. * முதுமையில் வரும் மூட்டு அழற்சியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.
 9. * செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தைத் தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.
 10. * சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.
 11. * புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாகச் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.
 12. நாலைந்து வெங்காயத்தை, தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
 13. * வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
 14. * வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.
 15. * வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 16. * அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

  12 comments :

  1. நல்ல பலருக்கும் பயன் பெறும் தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே
   அரேபியர்கள் சுட்ட வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வார்கள் இங்கு வந்த பிறகு எனக்கும் அந்த ருசி பிடித்துதான் போனது.

   ReplyDelete
   Replies
   1. அரேபியர்கள் திடகாத்திரமாக இருப்பதற்கு இதுவும் காரணமோ!?

    நன்றி கில்லர்ஜி.

    Delete
  2. நான்கூட பெரியாரை இழுத்து வந்து விட்டீர்களோ என்று நினைத்து விட்டேன் ஹிஹிஹி

   ReplyDelete
   Replies
   1. பெரியாரை இழுத்துவரத்தான் இரண்டு நாட்களாக முயன்றேன். பதிவு முழுமை பெற மேலும் சில நாட்கள் தேவைப்பட்டதால் இந்தத் ‘திடீர்’ப் பதிவு.

    நன்றி நண்பரே.

    reply பட்டனில் profile படம் வெளிவரவில்லை. தொடர் முயற்சி பலனளிக்கவில்லை!

    Delete
  3. நல்ல பதிவு ஐயா இவ்வளவு குண நலங்கள் உண்டா வெங்காயத்திற்க்கு ஆச்சரியமளிக்கிறது. வேறு ஒரு பதிவில் படித்ததையும் இங்கு தருகிறேன்.

   ** சிறுநீர்த் தொற்று இருந்தால் (சிறுநீர் பரிசோதனையில் E-coli என்று வந்தால்) லவங்கப் பட்டையை பொடியாக்கி வைத்துக் கொண்டு காலையிலும் இரவிலும் ஒரு டீஸ்பூன் தயிரோடு சேர்த்து வந்தால் போதும். அலோபதி மருத்துவத்தின் ஆன்ட்டி-பயாடிக்கை எடுத்துக் கொண்டாலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளலாம்.

   ** சிறுநீர் தொற்று இல்லாமல் சிறுநீர் போகும்போது எரிச்சல் இருந்தால் உடற்சூடுதான் முக்கிய காரணமாக இருக்கும். இளநீரில் பனங்கற்கண்டைச் சேர்த்து குடித்தால் போதும். உடல் சூட்டை தணிக்க இது நல்ல வழி.

   ** கூடவே ஒரு கரண்டி நல்லெண்ணையில் உரிக்காத வெள்ளைப் பூண்டு ஒன்றிரண்டு பற்களுடன் குறுமிளகு 6 சேர்த்து கொதிக்க வைத்து ஆறியவுடன் இரண்டு கால் கட்டைவிரல்களிலும் மேலும் கீழுமாக பூசிக் கொண்டால் உடல் சூடு வெகு விரைவில் தணிந்துவிடும்.

   ReplyDelete
   Replies
   1. வெங்காயத்தின் பலன் குறித்துக் கூடுதல் தகவல்கள் தந்ததற்கும் தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்.

    Delete
  4. வெங்காயத்தின் அருமை அறிந்துதான்,பெரியார் தன் பேச்சில் அடிக்கடி குறிப்பிட்டாரோ?
   எனக்கு பெரியாரையும் பிடிக்கும் வெங்காயத்தையும் பிடிக்கும் :)

   ReplyDelete
   Replies
   1. எனக்கும்தான்.

    மிக்க நன்றி பகவான்ஜி.

    Delete
  5. இது ஒரு வெங்காயப் பதிவல்ல
   உண்மையில் மருத்துவப் பதிவு என்பேன்.

   ReplyDelete
   Replies
   1. வாசகரை ஈர்ப்பதற்காக இப்படித் தலைப்புக் கொடுத்தேன்.

    மிக்க நன்றிங்க.

    Delete
  6. அருமை.
   ஆனால், பெரிய வெங்காயமா அல்ல சின்ன வெங்காயமா?

   ReplyDelete
   Replies
   1. சின்ன வெங்காயம். நாள் தவறாமல் சாப்பிடுங்கள்.

    Delete