புதன், 28 டிசம்பர், 2016

அ.தி.மு.க. தொண்டர்களுக்கு என் அன்புமிகு வேண்டுகோள்!

ஒரு நடிகையின் மகளாகப் பிறந்து, ஒரு நடிகையாகப் புகழ் பெற்று, உங்களின் புரட்சித் தலைவருக்குப் பின் புரட்சித் தலைவியாகி, தமிழகத்தின் முதல்வராகி, அம்மாவாகி, இதய தெய்வமாகவும் தெய்வத்தின் தெய்வமாகவும்  உங்களால் வழிபடப்பட்டவர் செல்வி ஜெயலலிதா.
கடவுள் என்றொருவர் இருக்கிறாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். மனிதப் பிறவியான ஜெயலலிதாவைத் தெய்வம் ஆக்கினீர்களே அது பகுத்தறிவுக்கு முரணான செயல் என்பதை நீங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.

அவரின் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதாவது, ‘தெய்வத்தை நோய் தாக்குமா?’ என்று கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால் அவர் கடவுளல்ல என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் சிந்திக்கவில்லை.

அவர் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில்[74 நாட்கள்], உங்களின் அவரைக் காப்பாற்றுவதற்காகக் கண்ட கண்ட குட்டித் தெய்வங்களிடமெல்லாம் நேர்ந்துகொண்டீர்கள்.

ஆயிரக்கணக்கானவர் ஒன்றுகூடிப் புனித நீர் சுமந்தீர்கள்; அக்கினிச்சட்டி ஏந்தி ஊர்வலம் வந்தீர்கள்; மண்சோறு சாப்பிட்டீர்கள்; சாமியார்களை வரவழைத்து, அக்கினிக் குண்டம் வளர்த்து விடிய விடியப் பூஜைகள் செய்தீர்கள். பலன் மட்டும் பூஜ்யம்.

உலகில் எந்தவொரு தலைவருக்காகவும் தொண்டர்கள் இந்த அளவுக்குத் தங்களை வருத்திக்கொண்டதில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் பட்ட பாட்டுக்குப் பலன் ஏதும் விளையவில்லை என்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

கடவுள் என்றொருவர் இருக்கிறாரோ இல்லையோ, அவரைப் பிரார்த்திப்பதால் எந்தவொரு பயனும் விளைவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இனியேனும் நீங்கள் கொண்டாடுகிற உங்களின் தலைவர் அல்லது தலைவி மனிதப் பிறவியே என்பதை நம்புங்கள்; தலைமைப் பண்புகள் அவருக்கு இருக்குமாயின், மனதாரப் போற்றுங்கள்; பின்பற்றுங்கள். மறந்தும்.....

இதய தெய்வம்...மனித தெய்வம் என்றெல்லாம் ஊரறியப் பறை சாற்ற வேண்டாம்.

இது என் அன்பான வேண்டுகோள்!
===============================================================================

11 கருத்துகள்:

  1. இதை அறிந்து பல பேர் இறந்து விட்டார்கள் என்பதை அறியும் போது, ஜீரணிக்கவே முடியவில்லை... மிகவும் வருத்தமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி உங்களது வருத்தம் அர்த்தமற்றது அவர்கள் வாழ தகுதியற்றவர்களே...

      நீக்கு
    2. கில்லர்ஜி சொன்னது சரி.

      நீக்கு
  2. நம் போன்றவர்களின் வருத்தத்தை இப்போதுள்ள தொண்டர்களாவது உணர்வார்களா?

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  3. சிந்தித்து பார்த்து செய்கையை மாற்றிக் கொள்வார்களா தொண்டர்கள்?

    தங்களின் தலைவி இயற்கையாக இறந்தாரா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ள விரும்பாத தொண்டர்களை என்னவென்று சொல்வது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்தது அவர்கள் பெற்ற பேறு?!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  4. நண்பரே வணக்கம் நான் இதனைக் குறித்து நிறைய எழுத நினைக்கிறேன் தற்பொழுது இணையம் இல்லை ஆகவே எழுத முடியவில்லை

    தாங்களாவது நாகரீகமாக எழுதுகின்றீர்கள் நான் தொடங்கினால் கீழ்த்தரமாக இருக்கும் தற்பொழுது செல்லில் இருந்து...

    ஆகவே தங்களை விரிவாக பாராட்ட முடியவில்லை வருந்துகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் சுருக்கமான இந்தப் பாராட்டே எனக்குப் போதும்.

      நன்றி நண்பரே.

      நீக்கு