தேடல்!

கடவுளின் பெயராலும் புனித நூல்களின் பெயராலும் மூடநம்பிக்கைகளைத் திணிப்பவர்கள் புத்திசாலிககள். நம்புகிறவர்கள் படுமுட்டாள்கள்!!!

Dec 14, 2016

புரட்சித் தலைவி அம்மா ஆலயம்!

ஒரு புண்ணியவான், புரட்சித் தலைவிக்கு ஆலயம் கட்டியிருப்பதாக இன்று[14.12.2016] செய்தி [www.newsfast.in/news/temple-for-amma ]படித்தேன்; செய்தி: www.dinamani.com/.../தஞ்சாவூரில்-ஜெயலலிதாவுக்க...

#மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள கொங்கணேசுவரர் கோயில் அருகே ஆட்டோ நிறுத்துமிடம் உள்ளது. இதையொட்டி, புரட்சித் தலைவி அம்மா ஆலயம் என்ற பெயரில் இக்கோயில், மொத்தம் 130 சதுர அடியில் ரூ. 1.50 லட்சம் செலவில் கட்டப்படுகிறது.
கோயிலுக்கான சுவர் எழுப்பப்பட்டு, மேற்கூரை வேயப்பட்டு, பீடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இதில், ஒன்றரை அடி உயரத்தில் மார்பளவு வெண்கலச் சிலை வைக்கப்படவுள்ளது. பீடத்தின் மேல்புறம் மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயிலை அமைத்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த மாமன்ற முன்னாள் உறுப்பினரும், மாமன்ற முன்னாள் அதிமுக கொறடாவுமான எம். சுவாமிநாதன் தெரிவித்தது:
இக்கோயில் கட்டும் பணி டிச. 7-ம் தேதி இரவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணி நடைபெற்று கட்டுமானம் முடிந்துவிட்டது. அடுத்து சிலை வடிவமைப்பதற்கான ஆணை சுவாமிமலையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் சிலை வந்துவிடும். ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24-ம் தேதி சிலை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பீடத்தில் தாற்காலிகமாக 5 அடி உயரமும், 4 அடி அகலமும் உடைய புகைப்படம் வைக்கப்படவுள்ளது. தேக்கு வேலைப்பாட்டுடன் கூடிய இப்புகைப்படம் ரூ. 17,000 செலவில் தயார்செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் இருபுறமும் அண்ணா, எம்.ஜி.ஆர். புகைப்படங்களும் வைக்கப்படவுள்ளன. இக்கோயில் திறப்பது குறித்து தெற்கு மாவட்டச் செயலர் வைத்திலிங்கத்திடம் கூறியுள்ளேன். ஓரிரு நாளில் கோயில் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்#
செய்தி படித்துச் சிலிர்த்தேன்!

திருப்பதி ஏழுமலையானும் கேரளாவின் ஐயப்பனும் கோடி கோடியாய்ச் சம்பாதிப்பதை நினைத்து, இவர்களைப் போல ஒரு கொழுத்த பணக்காரச் சாமி தமிழகத்தில் இல்லையே என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கிக்கொண்டிருப்பவன் நான். அங்கெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் கொண்டுபோய்க் கொட்டுபவன் இளிச்சவாய்த்  தமிழன்தான்.

புரட்சித் தலைவிக்கென்று  தமிழ்நாட்டில் ஒரு  கோயில் எழுப்பப்பட்டதால், ஆந்திராவுக்கும் மலையாள தேசத்திற்கும் செல்லும் பக்தர் கூட்டம் இனி ஒட்டுமொத்தமாய்த் திசை மாறும்; அம்மா ஆலயத்தில் சங்கமம் ஆகும்;  இங்கே கட்டுக்கட்டாய் பணமும் கொத்துக் கொத்தாய்த் தங்க நகைகளும் குவியும். ஏழுமலையானும் ஐயப்பனும் பரம ஏழைகள் ஆவார்கள். புரட்சித் தலைவி அம்மா உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமி ஆவார். நம் போன்றவர் ஆத்மா சாந்தி அடையும். 

ஆகையினால் தமிழர்களே, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆலயப் பணிக்கும் அதன் வளர்ச்சிக்கும் இன்றே உங்களை அர்ப்பணித்திடுங்கள்.

வாழ்க தமிழன்! வெல்க தமிழினம்!!
===============================================================================9 comments:

 1. ஹா...ஹா....நம்மாளுங்க குஷ்புக்கு , நமீதாவுக்கு கோவில் கட்டினவங்க...! "குடி (!) கெ(கொ)டுத்த அம்மா ஆலயம்" என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்குமா....?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் நயமான கருத்துரைக்கும் மிக்க நன்றி இருதயம்.

   Delete
 2. சம்பாதித்த காசுக்கு நன்றாகவே கூவுகிறார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. கூவட்டும். தமிழனுக்கு எப்போது விடியுமோ, காத்திருப்போம்.

   மிக்க நன்றி பகவான்ஜி.

   Delete
 3. Replies
  1. ஆமாம்.

   நன்றி தனபாலன்.

   Delete
 4. :) புரட்சி தலைவியாக்கி,அம்மாவாக்கி கடவுளாகவும் உருவாக்கிவிட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இது மூடர்கள் செய்யும் புரட்சி.

   நன்றி வேகநரி.

   Delete
  2. இது மூடர்கள் செய்யும் புரட்சி.

   நன்றி வேகநரி.

   Delete