தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jan 1, 2017

ஒரு கதை சொல்லி வாழ்த்துகிறேன்!

“ஏங்க, உங்களைத்தானே?”

“சொல்லு.”

“என்ன செய்துட்டிருக்கீங்க?”

“புத்தாண்டும் பொங்கலும் வரப்போகுதில்லையா, வாழ்த்து அனுப்பிட்டிருக்கேன்.”

“நீங்க வாழ்த்தலேன்னா புத்தாண்டும் பொங்கலும் கோவிச்சுக்காது. கட்டடக் காண்ட்ராக்டர் நம்ம பையனுக்கு வேலை போட்டுத் தர்றதா சென்னை போய்ட்டு வந்து சொன்னீங்களே, அவருக்கு அதை நினைவுபடுத்தி ஒரு ஃபோன் பண்ணுங்க. இல்லேன்னா மெஸேஜ் அனுப்புங்க.”

“பெரிய மனுஷங்க சொன்ன சொல்லைக் காப்பாத்துவாங்க. ஃபோனு கீனுன்னு நச்சரிச்சா கடுப்பாயிடுவாங்க. காரியம் கெட்டுடும். நீ சும்மா இரு.”

“ஏங்க, உங்களைத்தானே?”

“சொல்லு.”

“என்ன செய்துட்டிருக்கீங்க?”

“பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிட்டிருக்கேன்.”

“நீங்க வாழ்த்தலேன்னா யாரும் அற்பாயுசில் போயிடமாட்டாங்க. பொழப்புக் கெட்ட மனுஷன் நீங்க. நம் செந்தில் விசயமா காண்ட்ராக்டருக்கு ஒரு தகவல் அனுப்பத் துப்பில்ல. வாழ்த்து அனுப்பறாராம் வாழ்த்து. எதிர்த்த வீட்டுக்காரர் பட்டணம் போறாராம். காண்ட்ராக்டரைச் சந்திச்சி நினைவுபடுத்திட்டு வரச் சொல்லுங்க.”

“வர்றவன் போறவன்கிட்டே எல்லாம் சொல்லி அனுப்பறானேன்னு அவர் கோவிச்சுக்குவார். தொணதொணக்காதே. வாயை மூடிட்டிரு.”

“ஏங்க, உங்களைத்தானே?”

“வெளிநாடு போறவருக்குப் பயணம் சிறக்கணும்னு வாழ்த்து எழுதிட்டிருக்கேன்.”

“இதோ பாருங்க, இனியும் இப்படிக் கிறுக்குத்தனமா ஏதாச்சும் பண்ணிட்டிருந்தீங்கன்னா என்கிட்ட ரொம்பவே வாங்கிக் கட்டிக்குவீங்க. உடனே புறப்பட்டுப் போயி, அவரைச் சந்திச்சிப் பேசிட்டு வாங்க.”

“அவர் என் பால்ய நண்பர். வாக்குத் தவறாதவர். கண்டிப்பா உதவுவார். இனியும் இதப்பத்தி நீ பேசினா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்.”

“ஏம்மா, உன்னைத்தானே?”

“உங்க முதுகுப் பக்கம்தான் காய் நறுக்கிட்டிருக்கேன். சொல்லுங்க.”

“நம்ம காண்ட்ராக்டர் ஃபோன் மெஸேஜ் அனுப்பியிருக்கார். படிக்கிறியா?”

“நீங்களே படிங்க.”

“அன்புள்ள வேலாயுதத்துக்கு, நலம்; நலமறிய அவா. நீங்கள் அனுப்பிய வாழ்த்துகள் எல்லாம், நான் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தன. உங்கள் மகனின் வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அவனை அழைத்துக்கொண்டு உடனே நேரில் வாருங்கள்.”

“வாழ்த்துச் செய்தி அனுப்பறது வீணான வேலைன்னு இத்தனை நாளும் நினைச்சிட்டிருந்தேன். அது ரொம்பப் பெரிய தப்பு. என்னை மன்னிச்சுடுங்க.”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல[?] வார இதழில் வெளியான, இந்தக் கத்துக்குட்டி எழுத்தாளனின் கதை இது !

அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்!

20 comments :

 1. அருமை புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி. கில்லர்ஜிக்கும் என் வாழ்த்துகள்.

   Delete
 2. அருமை ! புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா !

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரசாத். உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   Delete
 3. for every action there is equal and opposite reaction

  ReplyDelete
  Replies
  1. எந்தவொரு நிகழ்வுக்கும் நிகரானதும் எதிரானதுமான நிகழ்வுகள்[வினைகள்] உண்டுதான்.

   நன்றி s m swamy.

   Delete
 4. Replies
  1. நண்டு@நொரண்டு அவர்களுக்கு என் வாழ்த்துகள். நன்றி.

   Delete
 5. வாழ்த்து சொல்வதில் இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா :)

  ReplyDelete
  Replies
  1. இருக்கிறது பகவான்ஜி. நன்றி.

   Delete
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் நண்பரே. நன்றி.

   Delete
 7. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் தனபாலன். நன்றி.

   Delete
 8. புது வருட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வேகநரி அவர்களுக்கு என் வாழ்த்துகள். நன்றி.

   Delete
 9. புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா! வாழ்த்து செய்தியை வைத்து அருமையான பொருத்தமான கதை.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

   தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

   Delete
 10. Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ஏலியன்.

   தங்களுக்கு என் வாழ்த்துகள்.

   Delete