அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 2 பிப்ரவரி, 2017

குலைகுலையாய் முந்திரிக்காய்! வகைவகையாய்த் திருமணம்!!

14.03.1950 ‘விடுதலை’ இதழில், ‘சித்திரபுத்திரன்’ என்னும் புனைபெயரில், ‘திருமண விழா; வினா - விடை’ என்னும் தலைப்பில் சுயமரியாதைத் திருமணம் குறித்துப் பெரியார் எழுதியிருக்கிறார். அவ் வினா - விடை யைப் படித்து மகிழுங்கள்!
சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாமலும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறியாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச்[சடங்குகள்] செய்யாமல் நடத்தும் திருமணம்.

தமிழர் திருமணம் என்பது என்ன?
கணவனுக்கு மனைவி அடிமை[தாழ்ந்தவள்] அல்ல;  அவனுக்கு உள்ள உரிமைகள் இவளுக்கும் உண்டு என்னும் கருத்தை ஏற்று, நடைமுறைப்படுத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு மணம் புரிதல்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜாதகம் பார்த்தல், சகுனம் பார்த்தல், சாமி கேட்டல் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமலும், மணமக்கள் நேரில் சந்தித்துத் தத்தம் உடன்பாட்டைத் தெரிவித்துக்கொண்டும், பேசிப் புரிந்துகொண்டும் செய்துகொள்ளும் திருமணம்.

புரட்சித் திருமணம் என்பது என்ன?
தாலி கட்டாமல் நடத்தும் திருமணம்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
மண்டபம், விருந்து, இன்னிசை, பாட்டுக் கச்சேரி முதலானவற்றைத் தவிர்த்து, ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் குறைந்த செலவில் ஒரே நாளில் நடத்தி முடிக்கும் திருமணம்.
===============================================================================

நன்றி: யுவகிருஷ்ணா, தினகரன் நாளிதழ் வசந்தம்[இணைப்பு],22.01.2017.


10 கருத்துகள்:

  1. அருமை நண்பரே பெரியார் ஒரு சகாப்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழனுக்காகத் தன்னலம் துறந்தவர்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. // ஒப்பந்தம் செய்துகொண்டு மணம் புரிதல் //

    இது தான் முக்கியம்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல கருத்துக்கள். இப்போது தமிழர்கள் திருமணம் என்றாலே தங்கள் சக்திக்கு மீறி எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடம்பரமாகச் செலவு செய்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு எளிதில் திருந்த மாட்டார்கள்.

      நன்றி வேகநரி.

      நீக்கு
  4. திருமணத்திலும் இத்தனை வகையா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியார் சொன்னவை இவை. இன்னும் இருக்கும்!

      நன்றி பகவான் ஜி.

      நீக்கு