வெள்ளி, 17 மார்ச், 2017

எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் கலாச்சாரப் புரட்சி! களம் அமைத்த குமுதம்!!

கதையே இல்லாமல், கதைமாந்தர்களை உரையாடவிட்டே பக்கம் பக்கமாகக் கதை எழுதுவதில் கில்லாடியான பாலகுமாரன், ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே!’ என்னும் தலைப்பில் உலகின் நம்பர் 1 வார இதழான குமுதத்தில் ஒரு காதல் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.
குமுதத்தில்[‘லைஃப்’] தொடராக வந்துகொண்டிருக்கும் இந்தக் கதையை விமர்சிப்பது இப்பதிவின் நோக்கம் அல்ல[அதற்கு விரிவானதொரு தனிப்பதிவு தேவை]. 22.03.2017 இதழில்[லைஃப்] இடம்பெற்றுள்ள கதைத் தொடர்ச்சியின் ஒரு சிறு நிகழ்வைக் காட்சிப்படுத்தி உங்களின் சிந்தனையைக் கிளறுவது மட்டுமே இதன் நோக்கமாகும்.

கதையின் முக்கியப் பாத்திரமான கார்த்தியின் நினைவோட்டமாக[பின்னோக்கு] அமைந்த அந்த நிகழ்ச்சி..........

#.....நான்கு வாரம் முன்பு ஒரு திருமணத்திற்குப் போனேன். சொந்தக்காரர் திருமணம். ‘கார்த்தி நீ ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவன்[மணமகன்] என்னை அழைத்துக்கொண்டு போனான். ஒரு அறைக்குள் நுழைந்து, ‘வாசலில் யார் வந்தாலும் உள்ளே நான் உடை மாற்றிக்கொண்டிருக்கிறேன் என்று சொல். வன்முறையாக எவரும் திறந்தாலும் உள்ளே விடாதே’ என்றான். என்ன செய்கிறான் என்று புரியவில்லை. அவன் கதவு திறந்தபோது உள்ளே மணமகள் நின்றுகொண்டிருந்தாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எதற்கடா?’ என்று கேட்டேன். ‘சும்மா கிஸ் அடிக்கப்போறேன்’ என்றான்.

கதவு சாத்திக்கொண்டான். உள்ளே முத்தமிடும் சப்தம் கேட்டது. இரண்டு பேர் வந்து அவனை விசாரித்தார்கள். ‘அவன் உள்ளே முக்கிய வேலையாக இருக்கிறான்’ என்று சொல்லி அனுப்பினேன். பத்து நிமிடம் கழித்து, கலைந்துபோய் இரண்டு பேரும் வெளியே வந்து ஆளுக்கொரு திசையாய்ப் பிரிந்தார்கள்.

‘இன்னும் அரை மணி நேரத்தில் தாலி கட்டப் போறே. இப்போ என்ன அவசரம்? என்று தலையில் அடித்துக்கொண்டேன்.

‘இன்னிக்கி ராத்திரி சாந்தி முகூர்த்தம் கிடையாதாம். அடுத்த வாரம்தானாம். அதான் இப்பவே முடிச்சிட்டேன்’ என்று சொன்னான்.

‘ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியாதா?’ என்று கேட்டேன். ‘செம கட்டைடா. வெறி ஏத்திடிச்சி எனக்கு’ என்றான்#

மேற்கண்டது கதையின் ஓர் உள் கதை. 

நீங்கள் இதைப் படித்துச் சிலிர்த்திருப்பீர்கள்; சிந்திக்கவும் செய்தீர்கள்தானே?

சில கேள்விகள்.

மணமகனுக்கும் மணமகளுக்கும் தனித்தனி அறை இருக்கும்.  தாலி கட்ட அரை மணி நேரமே இருக்கும்போது அவர்களுடன் உறவினர்கள் எவருமே இல்லாமல் போனது எப்படி? 

சொந்தபந்தங்கள் அலைமோதும் மண மண்டபத்தில், திணவெடுத்த இந்தத் தடியனுக்கும் அந்தத் தடிச்சிக்கும்[‘நல்லா கோவாப்ரேட் பண்ணினாள்’ என்கிறான்] காம வெறி தணிக்கத் தனி அறை கிடைத்தது எப்படி? எப்படி?

ஒரு வாரம் தாக்குப்பிடிக்க முடியவில்லையாம். இதற்கு முன்னால் செம கட்டைகளை அவன் கண்ணால் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாமும் வெறி ஏறியிருக்குமே. என்ன செய்தானாம்? எவளை அல்லது எதைத் தேடிப் போனானாம்?

இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததோ இல்லையோ நடந்ததாக வர்ணித்து, இந்தக் கதையைப் படிக்கும் இளசுகளின் நாடி நரம்புகளில் காம வெறியை ஏற்றுகிறார் கதைச் சித்தர்.

இப்படியான காமாந்தகக் கதைகளை எழுதினால்தான் எழுத்துச் சித்தர் என்னும் பட்டம் நிலைக்கும் என்று நம்புகிறாரோ இந்த எழுபதைக் கடந்த இளவட்டம்!?
===============================================================================
எழுத்துச் சித்தரின் இந்தக் கதையைப் படித்ததும் எனக்குள்ளும் ஒரு புரட்சிப் படைப்பைத் தர வேண்டும் என்னும் ஆசை எழுந்தது. அதன் விளைவாக உருவான கதை கீழே.....[அன்புகொண்டு மன்னியுங்கள்]

ழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பிகுடித்து மணப்பெண் பல்லவியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

உள்ளறையிலிருந்து வெளிப்பட்ட அவள் அனைவரையும் கும்பிட்டு அமர்ந்தாள்.

பல்லவியின் அபார அழகு அவர்களை வெகுவாகக் கவர, “பெண்ணை எங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. திருமணத்திற்கு உடனே நல்ல நாள் பார்க்கலாம்” என்றார்கள்.

“உடனே பார்த்துடுவோம்” என்றார் பல்லவியின் தந்தை.

“பொண்ணோட தனியா பேசணும்” என்றான் மாப்பிள்ளை சந்திரன்.

பெண் வீட்டார் சம்மதிக்க, ஓர் உள்ளறைக்கு இடம்பெயர்ந்தாள் பல்லவி. சந்திரன் பின்தொடர்ந்தான்.

“உட்காருங்க.” -ஓர் இருக்கையைக் காட்டினாள் பல்லவி.

சந்திரன் உட்காரவில்லை. அதிரடியாக, மது ஊறிப் பளபளக்கும் பல்லவியின் அதரங்களில் இதழ் பதித்தான்; அவளை இறுக அணைத்தான்.

மூச்சித் திணறிய பல்லவி, “ஏதோ பேசணும்னு சொன்னீங்க...” -சிரமப்பட்டுச் சிதைந்த வார்த்தைகளை உதிர்த்தாள்.

“செம கட்டை நீ. ஏகத்துக்கு வெறி ஏத்திட்டே. முதலிரவு எப்ப வருமோ? அதுவரைக்கு என்னால் தாக்குப் பிடிக்க முடியாது” என்று முணுமுணுத்தான் சந்திரன். அவளுடன் இரண்டறக் கலந்துவிடுவதில் முனைப்புக் காட்டினான்.

நேரம் கரைந்துகொண்டிருந்தது. அறைக்கு வெளியே மற்றவர்கள் காத்திருந்தார்கள்.
=================================================================================

















8 கருத்துகள்:

  1. உங்களது கதையில் கிஸ் அடிப்பதற்கு நேரமும், இருவருக்கும் மனமும் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்

    அவரது கதையில் நடைமுறைக்கு சாத்தியப்படாத கதை நகர்வு

    ஒன்று மட்டும் உண்மை அவரிடம் தற்போது சரக்கு இல்லை அதுவே இவரது இழி பாதைக்கு காரணம்

    பழைய பாலகுமாரன் ஸுவாஹா

    பதிலளிநீக்கு
  2. மனம் திறந்த விமர்சனம்.

    நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  3. எழுத்துச் சித்தர் இப்போது காமச் சித்தர் ஆகிவிட்டார்!
    முதல் இரவிலே நடக்க வேண்டியதை ஏன் இவ்வளவு முந்திக் கொண்டு செய்கிறார்களோ :)

    பதிலளிநீக்கு
  4. ‘காமச் சித்தர்’...நல்லாச் சொன்னீங்க.

    நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  5. கதையின் ஒரு பகுதியே இப்படி என்றால்...

    கேவலம்...

    பதிலளிநீக்கு
  6. 26 வாரம் எழுதி முடித்திருக்கிறார். மொத்தத்தையும் அலசினால் ரொம்பவே நாறும்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  7. பிரபலம் என்றால் எதையும் எழுதலாம் என்ற எண்ணம்...
    அதற்கு காரணம் பத்திரிக்கைகள் ஐயா... புதியவர் எவ்வளவு நல்லா எழுதினாலும் திருப்பி அனுப்புபவர்கள் இவர்களிடம் கேட்டு வாங்குவதால் என்ன வேண்டுமானாலும் எழுதுகிறார்கள்...

    இவர் கொஞ்ச மாதம் முன்பு அப்பாவைப் பற்றி தப்பா எழுதியவர்தானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவர்களிடம் கேட்டு வாங்குவதால் என்ன வேண்டுமானாலும் எழுதுகிறார்கள்...//

      நூற்றுக்கு நூறு உண்மை. அப்பாவைப் பற்றி ரொம்ப நாள் முன்பு ஒரு கதையும் எழுதியிருக்கிறார்.

      நன்றி குமார்.

      நீக்கு