ஞாயிறு, 5 மார்ச், 2017

'அது’க்காக உயிரை விடும் சில அப்பாவி அப்‘பிராணிகள்’!!!

‘உயிர் வாழ்வதா, உடலுறவு கொள்வதா...இவை இரண்டில் எதற்கு முன்னுரிமை?’ என்னும் கேள்விக்கு ‘உயிர் வாழ்வதே’ என்பதுதான் மனிதர்களின்[விதிவிலக்குகளும் உண்டு!] பதிலாக இருக்கும். முதல் முறை உடலுறவுக்காக மட்டுமே உயிரைத் தியாகம் செய்யும் உயிரினங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதற்கான சிறு பட்டியல் கீழே.....  

பச்சோந்தி வகைகள் (Furcifer Labordi Chameleons)
இந்த வகையான பச்சோந்திகள்  இனச்சேர்க்கையின் போது, அவற்றின் உடலினுள் சுரக்கும் அதிகப்படியான ஹார்மோன்களால் இறந்துவிடுகின்றனவாம்!.


⦁ ஆண் ஆன்டிசினஸ் (The Male Antechinus)
இந்த விலங்கு இடைவேளை இல்லாமல் 14 மணிநேர உடலுறவு கொள்ளுமாம்!  இனப்பெருக்கக் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தினால், அதன் நோயெதிர்ப்பு மண்டலம் அழிக்கப்படுகிறதாம். இதனால் கல்லீரல், குருதி, குடல் ஆகியவற்றில் ஏற்படும் கிருமிகளின் பெருக்கத்தால் ஆண் ஆன்டிசினஸ் இனம் இறப்பை சந்திக்கிறதாம்..


ஆண் ஆஸ்திரேலிய ரெட்பேக் சிலந்திகள் (Male Australian Redback Spiders)
இந்த வகைச் சிலந்திகள் உறவு கொண்ட பின் தம் உயிரைவிட்டுவிடும். அதாவது, பாலியல் தற்கொலை!


ஆண் லிட்டில் ரெட் கலூட்டா
பழமையான புல்வெளியில் வாழும் பாலூட்டி வகையைச் சேர்ந்ததும், வயிற்றில் பையை உடையதுமான இந்த ஆண் லிட்டில் ரெட் கலூட்டாவும், உறவு கொள்ளும் போது உயிரைவிடும். 



ஆண் பிரேசிலிய ஸ்லெண்டர் ஆப்போசம்ஸ்
ஆராய்ச்சியின் படி, இந்த ஆண் பிரேசிலிய ஸ்லெண்டர் ஆப்போசம்ஸ் என்ற வகை விலங்கின் ஆண் இனம் உறவு கொண்ட பின்னும், பெண் இனம் பிரசவத்திற்குப் பின்னும் இறந்துவிடுமாம்.

நன்றி: MTS Mblaze

4 கருத்துகள்:

  1. மனிதனுக்கும் இது பொருந்தும் என்றால் ,பிள்ளைப் பெற விரும்பும் எல்லோரும் கைம்பெண்கள் தான் :)அப்படியொரு உலகத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை :)

    பதிலளிநீக்கு
  2. வேறு சில உயிரினங்களிலும் இந்த விபரீத மரணம் நிகழ்வதாகப் படித்திருக்கிறேன் பகவான்ஜி. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இன்னும் எதுவெல்லாம் அதிசயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ!!!

      நன்றி தனபாலன்.

      நீக்கு