சனி, 1 ஏப்ரல், 2017

“தலாக்...தலாக்...தலாக்” - மூன்று முறை..........

* ‘ஏசுநாதர், சிலுவையில் அறையப்பட்டு, மூன்று நாட்கள் கழித்து உயிர்தெழுந்தார்’ என்கிறது கிறித்தவ மதம்//ஆதிகால கிறிஸ்தவர்கள் "இயேசு  சிலுவை மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்குள் உயிர்த்தெழுந்தார்" என்று எழுதினர். அவர்கள் அவரை கண்டதாக மட்டும் எழுதவில்லை, அவருடன் உண்டதாகவும், அவரை தொட்டதாகவும் அவருடன் 40 நாட்கள் செலவிட்டதாகவும் எழுதினர்.
 - ivaryaar.blogspot.com/2013/02/blog-post_16.html //

விவாகரத்துக்கு, மூன்று முறை “தலாக்” சொல்ல வேண்டும்என்கிறது இஸ்லாம் மதம்.

* யுகங்கள் ‘நான்கு’ என்கிறது இந்துமதம்.

* கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டி ருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]

* ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது இஸ்லாம். ‘ஆறு’ எனபது வெறும் கணக்குத்தான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் தேவைப்பட்டன 
என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches that God created "the heavens and the earth" in six days.]

மூன்று, நான்கு, ஆறு, ஏழு என்றிவ்வாறெல்லாம் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது எப்படி...எப்படி?

எதையெதையோ தேடிப் படித்தும் என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை!

உங்களுக்கு?
===============================================================================


8 கருத்துகள்:

  1. இதில் சூரியன் நான்காம் நாளில் படைக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்

    அதேநேரம் முந்தைய மூன்றுநாள் கணக்கு சூரியன் இல்லாமல் எப்படி கணக்கில் வந்தது எல்லாம் பகவான்(ஜி)செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிச்சி விடுறாங்க. கேள்வி கேட்க மக்கள் பயப்படுறாங்க.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. எல்லாம் வல்ல கடவுள்களுக்கு ஏன் இத்தனை நாட்களானது எனக்கு புரியவில்லை ,இதையெல்லாம் நொடியில் ,இல்லை இல்லை ,நொடியின் ஆயிரம் ஒரு பாகத்தில் செய்து இருக்க வேண்டாமா :)

    பதிலளிநீக்கு
  3. புரியாத புதிர்தான்...
    மதங்கள் பேசும் மொழி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் புரிந்துகொள்ளும் காலம் விரைவில் வரவேண்டும்.

      நன்றி குமார்.

      நீக்கு
  4. மத கடவுள்மார்களின் அட்டகாச கதைகளை பார்க்கும் போது, Science fiction பட கற்பனை கதைகள் எல்லாம் அருகில் வர முடியுமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட்டகாசகளைத்தான் நம் பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு வெளியிடுகின்றன.

      நன்றி வேகநரி.

      நீக்கு