செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நடுவணமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பொன்மொழி!!!

“இந்தி மட்டுமே தெரிந்த ஓட்டுநர்களுக்காக, தமிழகத்தின் மைல்கற்களில் ஊர்ப் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் எழுதலாம்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன்னர் அவர்கள். 
[முதன்மை பெற்ற இந்தி!]

தமிழ் மட்டுமே தெரிந்த லாரி ஓட்டுநர்களுக்காக இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலையெங்கும் தமிழிலும் ஊர்ப்பெயர்களை எழுதப் பரிந்துரைப்பாரா இந்த இந்தி தேசியவாதி?

உயர உயரமான மைல்கற்களை நட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதலாமே?!  செய்வார்களா? இந்தி வெறியர்கள் செய்ய அனுமதிப்பார்களா?!

‘இந்தி மட்டுமே தெரிந்த ஓட்டுநர்கள்’ என்கிறாரே, வடபுலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு, ஊர்ப் பெயர்களைப் படிக்கிற அளவுக்கு அடிப்படை ஆங்கிலம்கூடத் தெரியாதா?[கற்களில் ஆங்கிலம் இடம்பெறுவதை அனுமதிக்கிறார் அமைச்சர்] குறைந்த பட்சம் அவர்கள் 8 ஆம் வகுப்புத் தேறியிருக்க வேண்டும்தானே? 8 ஆம் வகுப்புப் படித்தவரால் ஆங்கிலத்திலுள்ள பெயர்களைப் படித்திட இயலாதா? வடபுலப் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாகக்கூட இல்லையா?

இந்தியனாக இருப்பவன் இந்தி படிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் இந்தத் தேசியத் தலைவர், தென் மாநிலம் வருகின்ற வடபுல லாரி ஓட்டுநர்கள், ஊர்ப் பெயர்களைப் படித்தறிவதற்கேனும் தென் மாநில மொழிகளை கற்றிருத்தல் அவசியம் என்று சொல்லத் தவறியது ஏன்?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அமைச்சருக்கு, மொழிகுறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல்போனது வருந்தத் தக்கது; கண்டிக்கத்தக்கதும்கூட.
===============================================================================



2 கருத்துகள்:

  1. எல்லாம் பதவி ஆசை அவரும் என்ன செய்வார் பாவம்.

    சரி மைல் கல்லை இப்படி ரோட்டின் மையத்தில் நட்டு வைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டபடி ரோட்டின் மையத்தில்தான் இருக்கிறது.

      நன்றி நண்பா.

      நீக்கு