அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 3 ஏப்ரல், 2017

‘கோமாதாவைக் கொன்றால் தூக்கு’.....சட்டம் வருகிறது!

“ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? பசுவைக் கோமாதா என்பவர்கள் முட்டாள்கள்” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ  கேள்வி எழுப்பியுள்ளார்.
http://tamil.oneindia.com/news/india/how-can-be-animal-be-mother-human-markandeya-katju-278562.html
நாம் கட்ஜுவைப் போல ஆறறிவு மனிதர்கள். தொடர்ந்து படியுங்கள்.

ந்தியத் திருநாட்டில் ‘சதீஸ்கர்’னு ஒரு மாநிலம் இருக்கில்லையா? அதன் முதல்வர் ‘ரமன்சிங்’காம். “கோமாதாவைக் கொலை செய்பவர்களைத் தூக்கிலிடச் சட்டம் இயற்றப் போகிறேன்” அப்பிடீன்னு அறிவிச்சிருக்காராம். இந்தச் செய்தியை நேற்று[02.04.2017] ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது[இன்றைய செய்தித்தாள்களில்?]. ‘http://tamil.oneindia.com’ செய்தி வெளியிட்டுள்ளது.

மாட்டுக்கறி தின்பவர்கள் இருப்பதால்தானே அதைக் கொல்பவர்கள் இருக்கிறார்கள். எனவே, கொல்பவர்களோடு சேர்த்துத் தின்பவர்களையும் தூக்கிலிடுவதற்கான சட்டத்தையும் ரமன்சிங் நிறைவேற்றுவார் என நம்பலாம்.

மாடு கோமாதான்னா, நமக்குப் பால் தருகிற ஆடு, ஒட்டகம், கழுதையெல்லாமும்கூட நமக்கு மாதாக்கள்தானே?[பதிவின் தொடக்கமாக அமைந்திருப்பது நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜுவின் கண்டனம்]. அவற்றைக் கொன்றாலும் அது தூக்குத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படலாம்.

ரமன்சிங் கொண்டுவர இருக்கும் இந்தச் சட்டம் ஒரு முன்னோட்டம் என்று நம்பலாம். அடுத்து, காவிகளால் ஆளப்படும் பல மாநில அரசுகள் இதைப் பின்பற்றக்கூடும்.

அப்புறம்.....

அப்புறமென்ன, ஆட்டுக்கறி/மாட்டுக்கறி தின்னுகிற நம் போன்ற படுபாவிகள் எல்லோரும் தூக்கிலிடப்படுவது சர்வ நிச்சயம்.

ஆடுமாடுகள் போன்ற விலங்கினங்களைக் கொன்று தின்னாமல் மனித இனம் வாழ முடியுமா[வழிவகைகளைத் தேடுவது அறிவுடைமை] என்ற சிந்தனையே இல்லாமல், பசுவை மட்டும் தெய்வமாக்கி, அசைவம் உண்ணுகிற அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த ரமன்சிங் சுயபுத்தியுள்ள ஆள்தானா?

இந்த ஆளை உடனடியாக நாடு கடத்த வேண்டும் அல்லது மனநல மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். 

சுயபுத்தியுடன் செயல்படுபவர் என்று  நம்பப்படுகிற பிரதமர் மோடி இதைச் செய்வாரா?
===============================================================================

4 கருத்துகள்:

  1. மாடுகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை என்றால் நாம் இதை வரவேற்க வேண்டும் நண்பரே...

    ஏனென்றால் இனி எவனும் மனிதனை கொல்லமாட்டான் காரணம் மாடுகளை கொன்றவனுக்கே இந்த தண்டனை என்றபோது.... நிச்சயமாக சட்டீஸ்கரில் இனி மனிதர்கள் நிம்மதியாக வாழலாம் நாமும் அங்கே போகலாம்.....

    பதிலளிநீக்கு
  2. //சுயபுத்தியுடன் செயல்படுபவர் என்று நம்பப்படுகிற பிரதமர் மோடி //

    என்னது சுயபுத்தியுடன் செயல்படுகிறாரா ஹாஹாஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது.

      பதிவின் கடைசி வரி நகைப்புக்கு இடமானதுதான். தெரிந்துதான் பொய் சொன்னேன்.

      நன்றி நண்பரே.

      நீக்கு