தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

May 23, 2017

காவிகளின் கனவு! ஓர் எச்சரிக்கை!!

‘பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ http://viduthalaidaily.blogspot.in/2012/06/blog-post_7046.html என்கிறது கீதை.   மேலே வாசியுங்கள்.
கீழே, கீதையின் போதனைகளும்[விக்கிப்பீடியா], அவற்றிற்கான சில கேள்விகளும்.....

*பற்றுகளை அறு. அதற்காகப் புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.

கேள்வி: பற்றுகள் இல்லாமல் வாழ்க்கை என்பது இல்லை. பற்றுகளை  ஏன் அறுக்க/துறக்க வேண்டும்?[பற்றுகளை  வரையறைப்படுத்தலாம்; முற்றிலும் துறக்கச் சொல்வது முட்டாள்தனம்]


*பலனை எதிர்பாராமல் சுயதருமத்தை[?] ஒழுகு.

கேள்வி: நம் செயல்களால் நமக்கோ, நம்மைச் சார்ந்தவர்களுக்கோ, சமுதாயத்திற்கோ  பலன் விளையவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் அறிவுடைமை. எதிர்பார்க்க வேண்டாம் என்று கடவுள் கண்ணன் சொல்வதன் நோக்கம் என்ன? தான் விருப்பப்பட்டவர்களுக்கு அந்தப் பலன்களைப் பிரித்தளிப்பதா?


*ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.

கேள்வி: நம்மைப் படைத்தவரே அவரென்றால் நம்மை மறவால் காப்பது அவர் கடமை. அப்புறம் எதற்கு பக்தி  குயுக்தி எல்லாம்?


*எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்ததது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

கேள்வி: கடவுளுக்கா, நமக்கா?


*உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?

கேள்வி: எத்தனையோ!!


*எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

கேள்வி: எதையும் கொண்டுவரலேங்கிறது அவர்[கண்ணன்] சொல்லித்தான் தெரிஞ்சிக்கணுமாக்கும்?


*எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?

கேள்வி: நான் எதையும் படைக்கல. அவர்தான் படைச்சாருங்கிறதுக்கு என்ன ஆதாரம்?


*எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

கேள்வி: எதுக்குக் கொடுத்தார்? அப்புறம் ஏன் பிடுங்குகிறார்?


ஆறறிவு வாய்க்கப்பெற்ற மனிதர்களைச் சிந்திக்கவே விடாமல் காட்டுமிராண்டியாக வாழத் தூண்டுவதுதான் கீதை. அதுமட்டுமல்ல.....

‘பெண்கள் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்கிறது.

‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம். நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன்’ என்று பகவான் கண்ணன் சொல்லுகிறான். ‘நானே நினைத்தாலும் மாற்ற முடியாது’ என்றும் சொல்லுகிறான். எனவே, சமுதாயத்தில் சாதிமத வேறுபாடுகள் உருவாக மூலகாரணமாக அமைந்ததே இந்தக் கீதைதான்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இதை[கீதை] வாசிப்பதைக் கட்டாயமாக்க வலியுறுத்தி பா.ஜ.க.எம்.பி. ரமேஷ் பிதுரி என்பவர் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டுவந்திருக்கிறாராம். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறதாம்[இன்றைய{23.05.2017} நாளிதழ்ச் செய்தி].

சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு இது பொருந்தாதாம்.

இதன்மூலம், சிறுபான்மை மதங்ளைச் சேர்ந்த மாணவர்கள் நீங்கலாக மற்ற அத்தனை மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து அவர்களுக்குக் காவி வர்ணம் பூசிட முடிவெடுத்துவிட்டார்கள் ஆளும் காவி வர்க்கத்தினர். ['நாங்கள் சிறுபான்மை மதத்தவரல்ல; ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாததால் நாங்களும் சிறுபான்மையினரே, எங்கள் பள்ளிகளுக்கும் விதிவிலக்கு அளியுங்கள்’ என்று இவர்களின் அடாவடித்தனத்தை எதிர்ப்பவர்கள் கோரிக்கை வைத்தால் ஏற்பார்களா?] 

ஆக, இம்மாதிரி தொடர் நடவடிக்கைகளின் மூலம் மக்களின் ஆறாவது அறிவை முடக்கிப்போட்டு இந்த மண்ணைக் காட்டுமிராண்டிகளின் தேசம் ஆக்க முயல்கிறது ஆளும் பாஜக அரசு.

நாட்டு நலனில் அக்கறையுள்ள அறிஞர்கள் சிந்திப்பார்களா?

===============================================================================

10 comments :

 1. ஜோதிடத்தைப் பாடமாக்கினார்கள் ,வாஸ்துவை பாடமாக்கினார்கள் ,இப்போ கீதையையா ?இவங்க அலும்புக்கு ஒரு எல்லையே இல்லையா :)

  ReplyDelete
  Replies
  1. நம்மவர்கள் உறக்கத்திலிருந்து விழிப்பார்களா?

   நன்றி பகவான்ஜி.

   Delete
 2. நாட்டை பிரச்சனைக்குள் திளைக்க வைத்தே மக்களை வழி நடத்தும் திட்டம்தான் இது.

  ReplyDelete
  Replies
  1. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?

   நன்றி நண்பரே.

   Delete
 3. Replies
  1. இவர்கள் செய்யும் அடாவடித்தனத்தால் மனம் சலித்துவிட்டதா தனபாலன்!

   நன்றி.

   Delete
 4. கேள்வியும் பதிலும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுரைக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.

   Delete
 5. உங்க தலைப்பிலிருந்த்தான் ஒரு பதிவு என் ட்ராஃப்ட்ல இருக்கு. சீக்கிரம் எழுதத்தூண்டியது உங்க பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் பதிவு எழுத என் தலைப்பு தூண்டுதலாக இருந்ததா? என்னுள் பெருகிப் பரவும் பெருமித உணர்ச்சி!

   மிக்க நன்றிம்மா.

   Delete