தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jun 13, 2017

மிருதங்கம், செண்டை உள்ளிட்ட தோல் கருவிகளுக்கு இனி மனிதத்தோல்!!!

மிருதங்கம், செண்டை உற்பத்திக்கு இனி மாட்டுத்தோல் கிடைக்காது’ -இது இன்றைய நாளிதழ்ச் செய்தி[‘தி இந்து’, 13.06.2017].
செய்திச் சுருக்கம்:
#செண்டை, மிருதங்கம், தபேலா, தாரை, தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுக்குப் பசுத்தோல், காளைத்தோல், எருமைத்தோல், ஆட்டுத்தோல் என்று பல்வேறு விதமான தோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாடுகளை இறைச்சிக்காகச் சந்தைக்குக் கொண்டுசென்று விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் தடைச்சட்டம் வந்ததும் நிலைமை மோசம் ஆகிவிட்டது.

இதனால் ஆடு, எருமை ஆகியவற்றின் தோல்கள் கிடத்தாலும் பசுமாடு & காளைமாட்டுத் தோல்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் ஆயிரக்கணக்கில் விலை கூடுதலாகத் தரவேண்டியுள்ளது.

இப்போது மார்க்கெட்டில் ஒன்றிரண்டு மாடுகள் வெட்டப்படுவதே அரிதாகிவிட்டது.

இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் மேற்குறிப்பிட்ட இசைக் கருவிகளின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும்#

இனி ஊடகங்களில் எதிர்பார்க்கப்படும் செய்தி:
#ஆளுங்கட்சியின் பேராதரவுடன் இந்துத்துவாக்கள் செய்துவரும் தொடர் மூடநம்பிக்கைப் பிரச்சாரங்களால், சூடு சொரணை இழந்ததன் விளைவாக மிகப்பெரும்பான்மையான பாரதக் குடிமகன்களின் தோல்கள் தடித்து  மறத்துவிட்டனவாம்.

‘விலங்குகளின் தோல்களைக் காட்டிலும், தடித்து மறத்துப்போன மனிதத் தோல்களைப் பயன்படுத்துவதன் மூலம் இசைக்கருவிகளில் அதிகப்படியான ஸ்ருதிகளைப் பெற்றிட முடியும்’ என்று உடற்கூற்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்!

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால்.....

ரூபாய் 2500 வரை விற்பனையான பசுத்தோல் இனி 25000க்கும் மேலே உயரக்கூடும். தரம் உயர்ந்த, மறத்துப்போன மனிதத் தோல்கள்  200000 ரூபாய்க்கும் குறையாமல் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது#
======================================================================
தமிழ்மணம் இடுகைப் பட்டியலில், ‘செண்டை’க்குப் பதிலாக, ‘கெண்டை’ [என் கவனக் குறைவால்] என்று பதிவாகிவிட்டது. வருந்துகிறேன்.

8 comments :

 1. மனுஷத்தோல் விலை ஏறுவது பெருமையான விடயம் அதிலும்கூட உயர்ந்த ஜாதிக்காரர்கள் தோல் இன்னும் கூடுமே...

  ReplyDelete
  Replies
  1. ஆமாமாம். விஞ்ஞானிகளுக்கு அது தெரிய வாய்ப்பில்லையே!

   Delete
 2. இந்த தகவலை பகிதமைக்கு நன்றி

  ReplyDelete
 3. படிக்கவே மனதை என்னமோ பண்ணுகிறது.. எந்தத்தோலும் வேண்டாமே.. எல்லாம் உயிர்தானே... ஏதும் புதிதாகக் கண்டு பிடிக்கலாம்.. ஒன்றை தடை செய்யும்போதுதான், புதிய சிந்தனைகள் உருவாகின்றன.. அப்படி இதற்கும் ஏதும் ஆலோசனைகள் உருவாகும்...

  ஏன் ..அறிவுப்பசி ஜி நீங்களே ஒரு யோசனையை வழங்கலாமே:)

  ReplyDelete
  Replies
  1. //ஏன் ..அறிவுப்பசி ஜி நீங்களே ஒரு யோசனையை வழங்கலாமே:)//

   பிராணிகளின் தோல்களைப் போலவே செயற்கையான தோல்களை உருவாக்கும்படி விஞ்ஞானிகளுக்கு அரசு அறிவுறுத்தலாம். பெரும் தொகையையும் பரிசாக அறிவிக்கலாம். நிச்சயம் பயன் கிடைக்கும்.

   சமாளிச்சிட்டேனாக்கும்!

   நன்றி அதிரா.

   Delete
 4. ஆஹா பதிவுக்கேத்தபடி மேலே படங்களையும் மாத்தி விடுகிறீங்க:).. நீங்க எங்கெயோ இருக்க வேண்டியவர்:)

  ReplyDelete
  Replies
  1. நிரந்தரமா பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தால் போதும்மா. பிரபலம் ஆகும் ஆசையெல்லாம்[எட்டாக் கனி] எனக்கு இல்லை. அதிராவைப் போல ஒரு சிலர் பாராட்டினாலே போதும்.

   Delete