தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jun 18, 2017

பெரியார் சொன்ன ‘குள்ளநரி’க் கதை!

‘பெரியார் இந்தக் கதையை ஏன் சொன்னார்?’ என்ற கேள்வி இப்போது வேண்டாம். கதை, வெகு சுவையானது! படித்து இன்புறுங்கள்!!
ற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு குள்ளநரி வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதர்களைப் பார்த்து, “ஐயோ...ஐயோ...என்னைக் காப்பாத்துங்களேன்” என்று அபயக்குரல் கொடுத்தது.

மனிதர்களில் எவரும் கண்டுகொள்ளவில்லை.

வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டே சிறிது நேரம் யோசித்த குள்ளநரி, “ஐயோ...உலகம் அழியப்போவுது! ஒட்டுமொத்த உலகமும் அழியப்போவுது”ன்னு கூக்குரல் எழுப்பியது; எழுப்பிக்கொண்டே இருந்தது.

மனிதர்களில் ஒருவர், “குள்ளநரி, உலகம் அழியப்போவுதுன்னு சொல்லுதே” என்றார் பதற்றத்துடன்.

“அது ஏதோ உளறுது” என்றார் மற்றொருவர்.

“அப்படியில்ல. ஒருவேளை உண்மையா இருந்துட்டா[“கிழவன் கடவுள் இல்லேன்னு சொல்றான். ஒருவேளை கடவுள் இருந்துட்டா நம்மையெல்லாம் தண்டிப்பார். எதுக்கும் கும்பிட்டு வைப்போம்”னு நம்மவர்கள் சொல்ற மாதிரி!] நாம் எல்லாரும் அழிஞ்சிடுவோமே. எதுக்கும் நரியைக் காப்பாத்தி விசாரிப்போம்” என்றார் வேறொருவர்.

“அப்படியே செய்வோம்” என்றார்கள் மற்றவர்கள்.

எல்லாருமா நீந்திப்போய் குள்ளநரியைப் பத்திரமா கரை சேர்த்தார்கள்.

எல்லோரும் ஒருமித்த குரலில் கேட்டார்கள்: “உலகம் அழியப்போகுதுன்னு சொன்னியே, நிஜமா?”

நீண்ட பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட குள்ளநரி, “உண்மையைச் சொல்லி என்னைக் காப்பாத்துங்கன்னு கெஞ்சினேன். ஒருத்தனும் கண்டுக்கல. உலகம் அழியப்போகுதுன்னு ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டதும், அதை நம்பி அலறியடிச்சிட்டு வந்து என்னைக் காப்பாத்துனீங்க. இனியாவது உண்மையை மதிக்கக் கத்துக்கோங்கடா முட்டாள்களா”ன்னு சொல்லிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. 
===============================================================================
பெரியார் சொன்ன ஆறுவரிக் கதையை அரைப்பக்கக் கதையாக்கியிருக்கிறேன். பெரியார் ஆவி[!!!!!] என்னை மன்னிக்கட்டும்!


8 comments :

 1. ஸூப்பர் கதை
  சிறிய கதையில் பெரிய தத்துவம்
  இதுதான் "பெரியார்"

  ReplyDelete
  Replies
  1. பேதைகளையும் மதிக்கத் தெரிந்த பெரியார்.

   நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. பெரியார் சொன்னதில் தப்பு ஏதுமில்லை :)

  ReplyDelete
  Replies
  1. தவறு செய்பவர்களைத் திருத்துவதற்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர் பெரியார்.

   நன்றி பகவான்ஜி.

   Delete
 3. ஹா ஹா ஹா சூப்பர் ஸ்டோரி... நரி நரிதான்ன்ன்... பெரியார் பெரியார்தான்ன் ... அறிவுப்பசி ஜி ... அறிவுப்பசி ஜி தேஏஏஏன்ன்ன்:)

  ReplyDelete
  Replies
  1. மனம் குளிரக் குளிரப் பாராட்டி மகிழ்விப்பதில் அதிராவை மிஞ்ச யாருமில்லை.

   அதிரா அதிராதான். நன்றிம்மா.
   Delete
 4. பெரியாரின் கதைக்கருவும் அதை நாலு பக்கத்துக்கு விரித்த பசி ஐயாவின் எழுத்தும் அட அட...!!

  உண்மைக்கு காலமே இல்லை ஐயா :) :)

  ReplyDelete
  Replies
  1. இது அரைப்பக்கப் பதிவுதான் றஜீவன்.

   வியந்து பாராட்டும் உங்களின் நல்ல மனதுக்கு என் நன்றி.

   Delete