திங்கள், 19 ஜூன், 2017

கல்லில் பலன் சொன்ன கில்லாடி ஜோதிடர்! [பொழுதுபோக்கு]

இது, என் சொந்தக் கதையல்ல; ‘சுட்ட’ கதைதான். எங்கிருந்து சுட்டேன் என்பது எனக்கே நினைவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இங்கு பதிவு செய்துவிடலாம். [ஜோதிடம் பொய் என்றாலும், தம் படிப்பறிவால் நேர்மையாகப் பலன் சொல்லும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்{வெகு அரிதாக}. அவர்களை வருத்துவது என் நோக்கமல்ல]].

ரு கிராமத்தில் ஒரு ஜோதிடர் இருந்தார்; மகா கெட்டிக்காரர்.

ஒரு நாள் ஒரு வீட்டிற்கு ஜோஸ்யம் சொல்லப் போனார். அந்த வீட்டுப் பையன் நோய்வாய்ப்பட்டிருந்தான். “கிரஹங்களின் சஞ்சாரப்படி பையனுக்கு நேரம் சரியில்லை” என்றார் ஜோதிடர்.

“பரிகாரம் பண்ணுங்க” என்றனர் பையனின் பெற்றோர்.

தம் கைப்பையில் சேகரித்துவைத்திருந்த  சிறிய கற்களில் ஒன்றை எடுத்து வைத்து அதற்கு ஏதேதோ சடங்குகள் எல்லாம் செய்து முடித்து, தமக்குரிய காணிக்கையைப் பெற்றுக்கொண்டு கல்லை மட்டும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார் ஜோதிடர்.
“பையனுக்கு நோய் குணமாகுமா?” என்றார்கள் பையன் வீட்டார்.

‘காத்திருங்கள்” என்று மட்டும் சொல்லி விடைபெற்றார் அவர்.

இன்னொரு வீட்டார் வந்து அவரை அழைத்துப் போனார்கள். அந்த வீட்டிலும் ஒரு சிறுவன் உடல்நலமின்றிப் படுத்திருந்தான். ஜாதகனுக்குத் தோஷம் இருப்பதாகச் சொன்ன ஜோதிடர், அங்கேயும் ஒரு கல்லுக்குச் சடங்குகள் செய்து முடித்து, அதைக் கொடுத்துவிட்டு, “காத்திருங்கள்” என்று சொல்லிக் காணிக்கையும் பெற்றுக்கொண்டு போனார்.

மாதம் ஒன்று கழிந்தது.

ஜோதிடர் முதலாவதாகக் கல் கொடுத்த வீட்டுக்காரர்கள் அவரைத் தேடிவந்து, “ஐயா, பையன் செத்துப் போய்ட்டானய்யா” என்று அழுது அரற்றினார்கள்.

“உங்க தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போவான் என்பதை உணர்த்தத்தான் ஒரு கல்லைக் கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார் ஜோதிடர்.

இரண்டாவது வீட்டுக்காரர்களும் அப்புறம் ஒரு நாள் தேடிவந்தார்கள்; “உங்க புண்ணியத்தில் பையன் பிழைச்சுட்டான்” என்றார்கள்.

ஜோதிடர் சொன்னார்: “பையனின் ஆயுள் கல்லைப் போலக் கெட்டியானதுன்னு உணர்த்தத்தான் கல்லைக் கொடுத்துட்டு வந்தேன்.”

‘பசி’பரமசிவம்: நாட்டில் ஜோதிடத்தின் பெயரால் ஏதேதோ நடக்குதுங்க. அறிவு ஜீவியான நானே ஏமாந்திருக்கேன்!

நீங்க? 
***********************************************************************************************************************

13 கருத்துகள்:

  1. "வாய்ச்சொல்லில் வீரரடி" என்று கில்ஜியானந்தா ஸுவாமிகள் அன்றே சொல்லி விட்டார் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்ஜியானந்தாவின் வாக்கு பொய்த்ததே இல்லை!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு சாட்டு சொல்லி சமாளிப்பதில் வல்லவர்கள் இந்த ஜோதிடர்கள். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது இவர்கள் விசயத்தில் சரியே..!

    அருமையான குட்டிக் கதை..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலோர் நன்றாகவே பிழைக்கிறார்கள்.

      நன்றி றஜீவன்.

      நீக்கு
  3. இதுலாம் ஒருவித குறளி வித்தைப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி வித்தக்காரர்கள் இன்றும் இருக்கிறார்கள்...கிராமங்களில்!

      நன்றிம்மா.

      நீக்கு
  4. #தம் படிப்பறிவால் நேர்மையாகப் பலன் சொல்லும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்{வெகு அரிதாக}#
    நீங்களுமா ,இவர்களை நம்பி விட்டீர்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சரியோ தவறோ'ன்னு இரண்டு வார்த்தை சேர்த்திருக்கிறேன். அதை மறந்துட்டீங்களே பகவான்ஜி?

      நன்றி.

      நீக்கு
    2. ’சரியோ தவறோ’ என்பதற்குப் பதிலாக, “ஜோதிடம் பொய் என்றாலும்’ என்பதைச் சேர்த்துவிட்டேன்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  5. ஹா ஹா ஹா.... ஜோதிடர்களை விடுங்கள் அறிவுப்பசி ஜி... கதை சூப்பர்... இப்படி அறிவு பூர்வமாகக் கதை சொல்லும் திறமை அறிவுப்பசி ஜீ க்குத்தான் உண்டு:).. அதை ரசிக்கும் திறமை மீக்கு மட்டும் தேன் இங்கின உண்டாக்கும்:)[ ஹையோ படிச்சதும் கிழிச்சு.. அந்த வைகையில கரைச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்].

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதை ரசிக்கும் திறமை மீக்கு மட்டும் தேன் இங்கின உண்டாக்கும்//
      பாம்பறியும் பாம்பின் கால்! மிக மிக மிக்க மகிழ்ச்சி.

      // ஹையோ படிச்சதும் கிழிச்சு.. அந்த வைகையில கரைச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்//
      வைகையில் கரைப்பதா? ஊஹூம்! அதிராவின் பாராட்டுரைகளையெல்லாம் தனி ஃபோல்டரில் பத்திரப்படுத்தி வைக்கிறேனாக்கும்! நன்றி அதிரா.

      [முக்கிய குறிப்பு: நாமக்கல்லுக்குப் பக்கத்தில்{16 கி.மி} இருப்பது காவிரி].

      நீக்கு
  6. இப்படித்தானே காலம் காலமாய் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாளிகள் உள்ளவரை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள்.

      நன்றி நண்பர் ஜெயக்குமார்.

      நீக்கு