தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jun 5, 2017

நன்றி தமிழ்மணமே, நன்றி...நன்றி!!!

*அண்மைக் காலங்களில், ‘தமிழ்மணம்’ திரட்டியில் ‘இடுகை’யை இணைப்பதற்குப் பகீரத  முயற்சி தேவைப்பட்டது. ‘இடுகை திரட்டப்பட்டது’ என்று அறிவிப்பு வரும். ஆனால், இணைப்பதற்குத் தமிழ்மணம் ரொம்பவே அவகாசம் எடுத்துக்கொள்ளும்.

*முகப்புப் பக்க இடுகைப் பட்டியல், பல மணி நேரங்கள்... ஏன், ஒரு நாள் முழுதும்கூட அசைவின்றி ஆணி அடித்தாற் போல நகராமல் நிற்கும்.

*இணைக்கப்பட்ட இடுகை, பக்கம் 1[2,3,4,5,.....]இன் பட்டியலில் இடம்பெறும்; முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறாது. 

*சூடான இடுகைகள் பட்டியலும் இதற்கு விதிவிலக்கல்ல. பட்டியலில், முந்திக்கொண்ட பத்து இடுகைகள் முதல் பத்து இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டு நகராமல் அடம்பிடிக்கும். பின் தங்கிய இடுகைகளை ஈன்றெடுத்தவர்கள்  சூடாகிப்போவார்கள்.

*தமிழ்மணம் ‘வாக்குப் பட்டை’யைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பட்டையைக் ‘கிளிக் ’ செய்துவிட்டுப் பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பப் புறப்பப்படுவோர், ஓட்டு ‘போல்’ ஆகாமல் நிமிடங்கள் கரைந்துகொண்டே இருக்க,   மண்டை காய்ந்து வாக்களிப்பதையே கை கழுவுவார்கள்!

*இன்னும், இப்படிச் சில குறைகள்.

இன்று அத்தனை குறைகளையும் ‘மிச்சம் சொச்சம்’ வைக்காமல் களைந்து, திரட்டிக்குப் புதுமெருகூட்டி, நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகை செய்கிறது தமிழ்மணம்!

மனம் பூரித்த நாம்..........

நம் மனம் நிறைந்த நன்றியினைத் தமிழ்மணம் நிர்வாகிகளுக்குத் தெரிவிப்போம்.

“நன்றி நிர்வாகிகளே! நன்றி...நன்றி...நன்றி!!!”

19 comments :

 1. சரியாகிட்டுதா?! நான் கவனிக்கலைப்பா.

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே சரிசெய்யப்பட்டதா நான் நம்புறேன். சற்று முன்னர்தான் உங்களுக்கு ஓட்டுப் போட்டேன். ‘கிளிக்’ செய்த மறு வினாடியே வாக்குப் பதிவாகிவிட்டது.

   Delete
 2. இங்க தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்க

  ReplyDelete
  Replies
  1. நான் அதை எப்பவோ நீக்கிட்டேன். ஏனோ எனக்குப் பிடிக்கல.

   நன்றிம்மா.

   Delete
 3. உண்மை நண்பரே நன்றி சொல்வோம்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜிக்கும் என் நன்றி.

   Delete
 4. தங்கள் பதிவு உண்மைதான் நண்பரே! நானும் நன்றில தெரிவிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இது நம் கடமையும்கூட.

   மிக்க நன்றிங்க.

   Delete
 5. தமிழ் மணம் திரட்டி கைமாறி விட்டதா ?ங் இருந்த இடத்தில் ழ காட்சியளிக்குதே !நன்றி நன்றி :)

  ReplyDelete
  Replies
  1. கை மாறியதோ இல்லையோ, தமிழ் வளர்ச்சியில் அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் அர்ப்பணிப்பை ‘ழ’ விவரிக்கிறது; நம்மை மகிழ வைக்கிறது. உள் நுழைந்து பாருங்கள் பகவான்ஜி.

   நன்றி.

   Delete
 6. காத்திருக்கும் பலரையும் இணைத்துக் கொண்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்...

  ReplyDelete
  Replies
  1. இணைக்கும் என்று நம்புவோம்.

   நன்றி DD.

   Delete
 7. ஆகா மிகவும்மகிழ்ச்சியான செய்தி ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. இனியும் நம் மகிழ்ச்சி கூடும்!

   நன்றி ஜெயக்குமார்.

   Delete
 8. அப்படியா!!?? தமிழ்மணம் சரியாகிவிட்டதா??!!! ஓ அதுதான் இப்போதெல்லாம் ஓட்டு சட்டென்று விழுந்து விடுகிறதோ?!! ஆனால் பல தளங்களில், அவர்கள் நீக்கவில்லை என்றாலும் கூட ஓட்டுப்பெட்டி தெரிவதில்லை. ஏனென்று தெரியவில்லை. எனவே அவர்கள் தனியாக லிங்க் கொடுக்கிறார்கள்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகான தங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.

   இடுகைக்கு உடனடி இணைப்பு கிடைக்கிறது. பட்டையைக் கிளிக் செய்தால் மறுகணமே ஓட்டு பதிவாகிறது. தாங்கள் குறிப்பிடும் பிரச்சினை குறித்து எனக்குத் தெரியவில்லை. காரணம், நான் எப்போதோ ஓட்டுப் பெட்டியை நீக்கிவிட்டேன்.

   நன்றி துளசிதரன்.

   Delete
  2. கீதா அவர்களுக்கும் என் நன்றி.

   Delete
 9. எங்களை நினைவிருக்கிறதா? இருக்கும் என்று நம்புகிறோம். வெகுநாட்களாக இருந்த ஐயம் இன்று தெளிவாகியது. காகி!!! உந!! கில்லர்ஜிக்கு நன்றி உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சி மீண்டும் தங்களின் தளம் வர இயன்றதற்கு.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி...மகிழ்ச்சி துளசிதரன், கீதா.

   Delete