தேடல்!

நம் சம்மதம் இல்லாமலே நம்மைப் பிறப்பித்த கருணைக் கடவுள், நம் சம்மதம் இல்லாமலே சாகடிக்கவும் செய்கிறார். இது அநியாயம்!

Jun 7, 2017

நடமாடும் வெறும் சுமைதாங்கிகளா நாம்!?!?

ஓர் அறிவுஜீவி வழங்கும் அறிவுஜீவிகளுக்கான பதிவு இது!

‘ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் பல கோடி ஆண்டுகளாக நடந்துவரும் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படை என்பது பல்லாண்டுகளாக நம்பப்படும் சித்தாந்தம்.

இந்தச் சித்தாந்தத்தைத் தகர்த்தெறிந்திருக்கிறாராம் ‘ரிச்சர்ட் டாக்கின்ஸ்’ என்பவர்.
‘தாம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக ஜீன்கள் நடத்தும் தொடர் போராட்டங்களின் விளைவுதான் பரிணாம வளர்ச்சி’ என்பது, இவர் முன்வைக்கும் புதிய சித்தாந்தம் ஆகும்.

இவருடைய சித்தாந்தத்தின்படி.....

‘நமக்காக ஜீன்கள் இல்லை; ஜீன்களுக்காகத்தான் நாம்.  ஜீன்கள் சுயநலம் மிக்கவை. அவை தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்கின்றன. தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவை நம்மை வாகனங்களாகப் பயன்படுத்துகின்றன. நாமெல்லாம் ஜீன்களைச் சுமந்து திரியும் வெறும் சுமைதாங்கிகளே!’

நம் நாடிநரம்புகளில் காம இச்சையைத் தூண்டி, ஆணும் பெண்ணுமாய்க் கலவியில் ஈடுபடத் தூண்டுவதே இந்தப் பொல்லாத ஜீன்கள்தானாம்!

நாளும் நம்மை விரகதாபத்துடன் அலையவிட்டுப் புணர்ச்சியில் ஈடுபடுத்தி நம் இனத்தை விருத்தி செய்வதன் மூலம் தம்மை அழியாமல் காத்துக்கொள்கின்றனவாம் அனைத்திற்கும் மூலமான ஜீன்கள் என்னும் இந்த அணுக்கள்.

நாம் நம் தாத்தா பாட்டி, தாய் தந்தை, சகோதர சகோதரிகள், ரத்த பந்தங்கள் என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தைப் பொழிந்து தள்ளுகிறோமே அந்தப் பாசப்பொழிவுக்கு மூல காரணமே இந்த ஜீன்கள்தானாம்.

ஆக, நாம் அன்பு, பாசம், நேசம், காதல், கத்தரிக்காய், பணம், பதவி என்று எதுஎதற்கெல்லாமோ போராடி, அல்லலுற்று அரற்றித் திரிவதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கும் ‘அந்தத் திருடன் யார்?’ என்று நேற்றைய பதிவில்[கலியுகக் கவிஞனும் ஒரு திருடனும்! http://kadavulinkadavul.blogspot.com/2017/06/blog-post_6.html] கேட்டிருந்தேனல்லவா, அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது. அந்தத் திருடன்...அல்ல, திருடர்கள்.....

ஜீன்கள்...ஜீன்களே!

[நான் ‘அறிவுஜீவி’ன்றது வெறும் ‘பந்தா’தாங்க. கோடானுகோடி ஜீவன்களில் நானும் ஒருத்தனுங்க!]
=============================================================================== 
தொடர்புடைய பதிவு: ‘ஜீன்கள் நிகழ்த்தும் சித்து விளையாட்டு!’  http://kadavulinkadavul.blogspot.com/2015/11/genes.html
================================================================================
நன்றி: ‘ஜீன் ஆச்சரியம்’, விகடன் பிரசுரம்; முதல் பதிப்பு: மே, 2016.

19 comments :

 1. அப்படினாக்கா நாமெல்லாம் பொம்மை மாதிரித்தான் ரிமோட் வேற இடத்தில் இருக்கு.

  அரசியல்வாதிகள் ஸ்விஸில் பணம் போட்டு வைக்கிறாங்களே... இதுவும் ஜீன் வேலைதானோ... ?

  ஜின் அடிச்சது போல் இருக்கு பதிவு படித்ததும்
  இணைப்புக்கு சென்றேன் கருத்துரை இட இயலவில்லை நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. //இணைப்புக்கு சென்றேன் கருத்துரை இட இயலவில்லை நண்பரே//

   இந்தப் பாரட்டுரை போதுமே.

   நன்றி நண்பரே.

   Delete
 2. எல்லாமே ஜீன் படுத்தும்பாடு...

  ReplyDelete
  Replies
  1. ஜீன்கள் படும்பாட்டையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்களோ?

   நன்றி ராஜி.

   Delete
 3. ஆவ்வ்வ்வ் நல்ல நாள் பார்த்து வரத் தாமதமாகிட்டுது:)..
  //நான் ‘அறிவுஜீவி’ன்றது வெறும் ‘பந்தா’தாங்க.///
  அப்பூடியா சொல்றீங்க? இருக்காதே:)..

  ஏதோ ஜீன்ஸ் பட ரிவியூ ஆக இருக்குமோ என நினைச்சுட்டேன்ன்:).

  ReplyDelete
  Replies
  1. //அப்பூடியா சொல்றீங்க? இருக்காதே:)//

   இரவல் சரக்குல என் சொந்தச் சரக்கும் சேர்த்துக்குவேன். கடவுள் குறித்த பதிவுன்னா காரம் கொஞ்சம் தூக்கலா இருக்கும்.

   அறிவுஜீவின்னு சொல்லிக்க ஆசைதான். படைப்புகள் மூலமா அதை வெளிப்படுத்துறது அவ்வளவு சுலபமா என்ன!

   //ஏதோ ஜீன்ஸ் பட ரிவியூ ஆக இருக்குமோ என நினைச்சுட்டேன்ன்:)//

   படங்கள் பார்க்குறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சும்மா.

   வருகைக்கும் புகழுரைக்கும் என் அகம் நெகிழ்ந்த நன்றி அதிரா.

   Delete
 4. ஊருக்கெல்லாம் வோட் போடும் உங்களுக்கு வோட் போட இங்கு ஒரு பெட்டி இல்லயே:)

  ReplyDelete
  Replies
  1. அப்பப்போ பின்னூட்டப் பெட்டியைப் பூட்டிடுறது என் பழக்கம். மத்தவங்க தளத்துக்குப் போயி கருத்துச் சொல்வதும் குறைவு[கொஞ்சம் கொஞ்சமா திருந்திட்டு வர்றேன்] அதனால, என் பெட்டியில் அதிகம் ஓட்டு விழாது. ‘பெட்டி எதுக்கு வெட்டியா’ன்னு நினைச்சித் தூக்கிக் கடாசிட்டேன்[நீக்கிட்டேன்].

   பெட்டி இல்லேன்னாலும் எந்தவொரு அட்டியும் இல்லாம பாராட்டுக் கிடைச்சுடுது. இது போதும்னு நினைக்கிறேன்.

   நன்றி அதிரா.

   Delete
 5. வணக்கம் 'பசி' ஐயா..? உள்ளே வரலாமா..?? நான் பதிவுலகுக்குப் புதியவன். இப்போதுதான் கமெண்ட்ஸ் போட்டுப் பழகுகிறேன் :)


  அருமையான பதிவு இது. எல்லாமே ஜீன்ஸ் தானா?

  ஜீன்ஸ்களின் சித்துவிளையாட்டில் தான் இந்த உலகமே இயங்குது போலும்.

  - தொடர்ந்து இணைந்திருப்போம் -

  ReplyDelete
  Replies
  1. அனுமதி கேட்கலாமா? நான் மறுப்பேனா?

   பகவான்ஜி தளத்தில் உங்களின் பின்னூட்டங்களைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

   உங்கள் எண்ணங்களைத் தயங்காமல் பதிவு செய்யுங்கள். விரைவில், வலைப்பக்கமும் தொடங்கி எழுதுங்கள். நல்லதொரு எழுத்தாளர் ஆவதற்கு இப்பயிற்சி பெரிதும் உதவும்.

   வாழ்த்துகள் Rajeevan Ramalingam.

   Delete
  2. உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா..!!

   ஏற்கனவே தளம் ஒன்று திறந்து வைத்திருக்கிறேன். 'ஆகவே' எனும் பெயரில்..!!

   'மனம்தலீலையை' பாடலைப் பற்றிய ஒரு பதிவு புதிதாகப் போட்டிருக்கிறேன். நேரமிருந்தால் எட்டிப் பாருங்கள் ஐயா :)

   உங்களோடு பேசுவது மிகுந்த மகிழ்ச்சி

   Delete
 6. Replies
  1. பேராச்சரியம்.

   நன்றி ஜெயக்குமார்.

   Delete
 7. நீங்கள் அறிவுஜீவி மட்டுமல்ல... வித்தியாசமான சிந்தனை உள்ள மனிதர்...

  ReplyDelete
  Replies
  1. வாசிப்போரைக் கவர்வதற்காக, ‘ஓர் அறிவுஜீவி வழங்கும்...’என்று பதிவைத் தொடங்கினேன். அதிராவும் நீங்களும் என்னை அறிவுஜீவிதான் என்கிறீர்கள். இனியேனும் என் அறிவை வளர்த்துக்கொள்ள நிச்சயம் பாடுபடுவேன்.

   நான் மனிதன் என்பதில் ஓரளவு நம்பிக்கை உண்டு. இதற்கும் மேலான பாராட்டு என்னைச் சங்கடப்படுத்துகிறது. இருப்பினும் தங்களின் பெருந்தன்மையைப் போற்றி நன்றி சொல்கிறேன்.

   நன்றி DD.

   Delete
 8. உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும் சொல்கிறார்கள் .ஜீன் அதுக்கு உதவுற மாதிரி தெரியலியே :)

  ReplyDelete
  Replies
  1. ஜீன்களுக்கே வெளிச்சம்!!!

   நன்றி பகவான் .ஜி

   Delete
 9. எல்லாமே ஜீன்கள் என்று சொல்லுவதற்கில்லையே ஐயா! மருத்துவ உலகம் அப்படிச் சொல்லுகிறதா? ம்ம்ம்ம் பார்க்க வேண்டும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. விகடன் வெளியீடான ‘ஜீன் ஆச்சரியம்’ நூலை ஆதாரமாகக்கொண்டுதான் எழுதினேன். முடிந்தால் இருவரும் அதைப் படியுங்களேன்.

   நன்றி.

   Delete