திங்கள், 10 ஜூலை, 2017

உலகமகா கிறுக்கன்[ர்]!!!

நாமெல்லாம் உள்ளூர்க் கிறுக்கர்கள். உலகமகா கிறுக்கர்களும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவரைக் கீழே சந்தியுங்கள்.
#‘நட்டநடுச் சாலையில் கடவுளானவர் சிவலிங்க வடிவில் காட்சிதர அனுமதிக்கலாமா கூடாதா?’ -தெலங்கானா மாநிலத்துக் காவல்துறையினர்தான் இப்படியொரு குழப்பத்தில் சிக்கினார்கள். காரணம்..... 

ஹைதராபாத்திலிருந்து வாராங்கல் செல்லும் நெடுஞ்சாலையில் ஒருவர் போக்குவரத்தைத் தடை செய்து நடுரோட்டில் குழிதோண்டிக் கொண்டிருக்கிறார்’ என்று காவல்துறையினருக்குத் திடீர் தகவல் வந்தது. 

உடனே அந்த இடத்துக்கு மின்னலாக அவர்கள் சென்றபோது, வெயிலையும் பொருட்படுத்தாமல் 15 அடி ஆழம் தோண்டியதோடு, இன்னும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மனிதரை அரும்பாடுபட்டுத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் பக்குவ விசாரணையில், “ரோட்டில் தன்னுடைய லிங்கம் இருக்கிறது என தோண்டச் சொன்னதே சிவன்தான்!” என்றாராம் அவர்! 

“...ஆனால், இன்னும் லிங்கம் கிடைக்கவில்லை...” என பயபக்தியோடு விளக்கம் கொடுத்து மிரள வைத்திருக்கிறார் அந்த ஆள். அவர், தெலுங்கானாவின் ஜன்காவோன் மாவட்டத்தைச் சேர்ந்த லக்கான் மனோஜ் என்பவர்[அவரும் அவரால் மூளைச்சலவை செய்யப்பட்ட அவரின் ஊர்க்காரர்களும் காவல் கைதிகளாகிக் கம்பி எண்ணுவதாகத் தகவல்!].#

நம் கேள்வி 1:
“சிவலிங்கம் உன் நெஞ்சக்கூட்டுக்குள்தான் இருக்கு”ன்னு அந்தப் பித்தன்[‘பித்தா பிறை சூடி.....’] சொல்லியிருந்தால் இந்தப் பித்தன்ர்[கிறுக்கன்ர்] என்ன செய்திருப்பான்ர்?!

கேள்வி 2:
பிறை சூடிய பித்தன் தன் பக்தனை இம்சைப்படுத்தாமல், சிவலிங்க வடிவில் மண்ணைத் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டு நெடுஞ்சாலையில் பிரசன்னமாகியிருந்தால், அதற்குத் ‘தான்தோன்றி சிவலிங்கேஸ்வரர்’ என்று நாமகரணம் சூட்டி, அங்கேயே கோயில் கட்டி, வேத விற்பன்னர்களை வைத்து மகாகும்பாபிஷேகமும் நடத்தியிருப்பார்களே நம் மகா ஜனங்கள், ஏன் செய்யவில்லை?!
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசி
நன்றி: குங்குமம் வார இதழ்[14.07.2017].



20 கருத்துகள்:

  1. இதனால் என்ன ஆகி விடப்போகிறது நெடுஞ்சாலையை 10 கி.மீ. தள்ளிப்போட வேண்டியதுதானே...

    உலகைப்படைத்த சிவ(னு)ருக்கு அந்த இடம்தான் பிடித்து இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவேளை ஏதாவது மசூதியை தோண்டவில்லை.

      நீக்கு
    2. சிவனை, ‘சிவர்’ ஆகிவிட்டீர்களெ! ஹ...ஹ...ஹ!!

      நீக்கு
    3. //நல்லவேளை ஏதாவது மசூதியை தோண்டவில்லை//

      தோண்டவில்லை. இனியும் தோண்டிவிடக்கூடாது நல்ல எச்சரிக்கை!

      நன்றி நண்பரே.

      நீக்கு
    4. ஏதோ "சுவர்" என்று சொன்னதைப்போல கோபப்படுகின்றீர்களே நண்பரே

      மரியாதை தெரிந்தவன் நான் ஆகவே இப்படி அழைத்தேன்.

      நீக்கு
    5. ஆகவே கில்லர்ஜிக்கு நன்றி!

      நீக்கு
  2. பல டன் தங்கம் இருப்பதாக கனா கண்ட சாமியார் நினைவுக்கு வந்தார் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ரகசியமாக அல்லவா தோண்டுவார்!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
    2. நமீதா உடம்புக்குள் தங்கம் இருப்பதுபோல் கனவு கண்டால் என்னாவது ?

      நீக்கு
    3. கடவுள் என்ன, காவல்துறை என்ன யாராலும் நமீதாவைக் காப்பாற்ற முடியாது!

      நீக்கு
  3. பதில்கள்
    1. இன்னும் எப்படியெல்லாம் நம்மை முட்டாள்கள் ஆக்குவார்களோ!

      நன்றி DD.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நானாகவே நீக்கிட்டேங்க. ஏனோ அதில் விருப்பம் இல்லாமல்போனது.

      நீக்கு
  5. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்தே செய்கிறார்களா, அறியாமையாலா?

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு