அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 4 ஜூலை, 2017

மரணத்தின் அழைப்பும் பெரியார் ஆற்றிய உரையும்!

பெரியாரின் இறந்த நாள் 24.12.1973. அதற்கு 4 நாட்கள் முன்பு[19.12.1973] அவரால் மேடை ஏறிப்[சென்னை தியாகராயநகர் பொதுக்கூட்டம்] பேச முடிந்தது. மரண பயம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
தியாகராயநகர் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை பதிவு செய்யப்பட்டதா தெரியவில்லை.

அதே ஆண்டில் 04.11.1973ஆம் நாள் திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில், அவரின் 95ஆவது பிறந்த நாள் விழாவில் அவருடைய சொற்பொழிவின் ஒரு பகுதி.....

#எனக்கு இன்று புத்தி சுவாதீனம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். எல்லாம் மறந்துபோயிற்று. என்ன பேசவேண்டும் என்று இருந்தேனோ ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஏனென்றால், இரண்டு நாளாய்ப் பட்டினி கிடந்தேன். நேற்றுக் காலையில்தான் ஒரு கப் கஞ்சி. ராத்திரி 9 மணிக்கு ஒரு தடவை கஞ்சி.  

முந்தா நாள் இரவு ஒன்றும் இல்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. இன்றைக்குக் காலையில் ஒரு இட்லி மட்டும் கொடுத்தார்கள். இன்னொரு இட்லி கொடு என்றேன். முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாசமாய்ப் போகட்டும்னு வந்துட்டேன்.

இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்கிறபோது மறுபடியும் இன்னும் எட்டு நாள்களுக்குப் பேசுவதற்கு இல்லையே என்று மனதில் இருக்கிறதைச் சொல்லுகிறேன்[தகவல் உதவி: திருமழபாடி நண்பர் டாக்டர் அ. ஆறுமுகம் அவர்கள்]#

மரணத்தை தழுவவிருந்த அந்த இறுதி நாட்களில், மக்களுக்காகப் பேசினார் பெரியார்; அவர்களுக்காகக் கவலைப்பட்டார். 

நாம் யாருக்காகக் கவலைப்படப் போகிறோம்? நமக்காகவா? நம் ரத்தபந்தங்களுக்காகவா? மக்களுக்காகவா?

யாருக்காக?!
============================================================================================




16 கருத்துகள்:

  1. தொண்டு கிழம் என்று அய்யாவை சும்மாவா சொன்னார்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிழம் செய்த தியாகம்தான் நம்மையெல்லாம் கௌரவமாக வாழ வைக்கிறது.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. நமக்காகவும், ரத்தபந்தங்களுக்காகக்கூட யோசிக்காத ஆளுங்கதான் நாம

    பதிலளிநீக்கு
  3. தொண்டு செய்து பழுத்த பழம்
    தூயதாடி மார்பில் விழும்
    மண்டைச்சுரைப்பை உலகு தொழும்
    மனக்குகையில் சிறுத்தை எழும்
    அவர்தான் பெரியார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நெஞ்சில் நிறைந்தவர்.
      என்றும் நம்
      நினைவில் வாழ்பவர்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பெரியாரைப் போற்றுவது நமக்கெல்லாம் பெருமை.

      நன்றி டி டி.

      நீக்கு
  5. பெரியார் ஒரு பெரிய மனுஷன் நாம் சுயநலவாதிகள்!

    பதிலளிநீக்கு
  6. பெரியார் என்ற ஒருவர் இல்லாமல் போயிருந்தால், இன்று நம் நிலைமை,
    நினைத்துப் பார்க்கவே இயலவில்லை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிப் பதிவுகள் எல்லாம் எழுதப்போவதில்லை.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு

  7. கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டின் கிராமங்களில் ஒரு இளைஞன் “இன்று இரவு கூட்டத்தில் ஈ.வே.ராமசாமி பேசுவார்” என்று பறையடித்துக்கொண்டே போவான். பிறகு அன்று இரவு லாந்தர் விளக்கை கையில் பிடித்துக்கொண்டு அந்த இளைஞனே தெகிமாலா மக்கள் இழந்து போன சுயமரியாதை பற்றிப்பேசுவான். அந்த இளைஞன்தான் ஈ.வே.ராமசாமி. தொண்டு கிழமாகியும், மூத்திரம் கூடப்போக முடியாத நிலையிலும், அதற்கான குழாய்களை உடலில் பொருத்திக்கொண்டு , அந்த சாதனங்களோடு தான் சாகும் வரை பேசிப் பேசிப் பேசிப் பேசி செத்துப் போனாரே ஈ.வே.ரா – அது ஒரு சாதாரண மனநிலையிலுள்ள ஒரு மனிதரால் ஆகக்கூடியதா? ஒருவர் தன் வாழ்நாள் முழுக்கவும் பேசிக்கொண்டே இருந்தார் – அதிலும் தன் இறுதி நாட்களில் செயற்கை மூத்திரக்குழாய்களையும் தூக்கிக்கொண்டு போய் படுத்த நிலையிலேயே பேசிப் பேசி செத்துப்போனார் என்றால் அதை எப்படி விளக்குவது? பைத்தியக்காரத்தனமா? தியாகமா? இது ஒரு அசாதாரணமான விஷயம் இல்லையா? அவர் சாகும்வரை பேசியதெல்லாம் வெறும் வார்த்தைகளா?
    -----------எழுத்தாளர் சாரு நிவேதிதா, விகடன் தடம் இதழில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தடம் இதழில் பதிவான, மனதை நெகிழவைக்கும் சாருவின் எழுத்தை இங்கு பதிவு செய்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நண்பர் யாசிர் அசனப்பா.

      நீக்கு