அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 13 ஜூலை, 2017

கடவுள் தேவைப்படுகிறார்.....சில நேரங்களில்!!!

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, சில நேரங்களில்  சில/பல முட்டாள்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளக் ‘கடவுள் தேவைப்படுகிறார்’ என்பதென்னவோ உண்மை!
“டாக்டர் கூப்பிடுறாருங்க.” -செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன். 

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் மதன்.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுள் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் மதன். வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“டாக்டர், நீங்க நாத்திகர்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னீங்க?” -கேட்டார் அவருக்கு எதிரே அமர்ந்திருந்த நோயாளி.

“அதுவா.....?” -சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் மதன்.

“சில நேரங்களில் நோயாளி செத்துடுவார்னு டாக்டர் சொன்னா, அவர் கணிப்பையும் மீறிப் பிழைச்சுடறது உண்டு. பிழைச்சுடுவார்னு சொல்லிச் செத்துடுறதும் உண்டு. இந்த மாதிரி நேரங்கள்ல நோயாளியைச் சார்ந்தவன் கும்பல் சேர்த்துட்டு வந்து, “டாக்டர் ஒழிக”ன்னு கோஷம் போடுறான். நஷ்ட ஈடு கேட்குறான். கொடுக்க மறுத்தா கண்ணுல பட்டதையெல்லாம் அடிச்சி நொறுக்குறான். அதனால, நோயாளி பிழைச்சுடுவாரா செத்துடுவாரான்னு தீர்மானமா ஒரு முடிவைச் சொல்லாம கடவுளைக் கைகாட்டி விட்டுடுறோம். இதுல, டாக்டர் ஆத்திகரா, நாத்திகரா என்ற கேள்விக்கே இடமில்லை.”

“மக்கள் மனசை ரொம்ப நல்லாப் படிச்சிருக்கீங்க” என்றார் நோயாளி..

“டாக்டர்கள் நோய்களைப் படிச்சா மட்டும் போதாது. மக்கள் மனசையும் படிச்சாத்தான் இன்னிக்கெல்லாம் தொழில் நடத்த முடியும். இது காலத்தின் கட்டாயம்” என்றார் மதன்.

‘பிழைக்கத் தெரிந்த டாக்டர்’ என்று மனதுக்குள் முணுமுணுத்தார் நோயாளி.
****************************************************************************************************************************************

11 கருத்துகள்:

  1. டாக். திரு. மதன் நல்ல உளவியல் நிபுணரோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிபுணர் மட்டுமல்ல..... இறுதியில் ஒரு வரி சேர்த்திருக்கிறேன். மீண்டும் வருகை புரிந்தால் படியுங்கள்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    2. ஆம் நோயாளி முணுமுணுத்தார் என்பதுதானே.... நண்பரே.

      நீக்கு
  2. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் ,பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பதைத் தெளிவாய் தெரிந்து வைத்திருக்கிறார் டாக்டர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ எழுதினேன். வெளியிட்டுவிட்டேன். கதை ஆக்கத்தில் முழு நிறைவு இல்லை.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  3. இன்னும் நிறைய யோசிக்க வேண்டும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்க யோசிக்கப் புரியாததெல்லாம் புரியுது!

      நன்றி DD.

      நீக்கு
  4. பிழைக்கத் தெரிந்த மருத்துவர்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் வாழும் வழிகளை நன்றாகக் கற்றவர்கள்!

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  5. பிழைக்க தெரிந்த டாக்டர்

    பதிலளிநீக்கு