தேடல்!

நடுவணரசில் இந்தி & இந்துமத வெறியர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியும், இறந்த மொழி சமஸ்கிருதமும் போற்றப்படுவதும் நீடிக்கும்!

Jul 4, 2017

மரணத்தின் அழைப்பும் பெரியார் ஆற்றிய உரையும்!

பெரியாரின் இறந்த நாள் 24.12.1973. அதற்கு 4 நாட்கள் முன்பு[19.12.1973] அவரால் மேடை ஏறிப்[சென்னை தியாகராயநகர் பொதுக்கூட்டம்] பேச முடிந்தது. மரண பயம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
தியாகராயநகர் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை பதிவு செய்யப்பட்டதா தெரியவில்லை.

அதே ஆண்டில் 04.11.1973ஆம் நாள் திருச்சிராப்பள்ளி தேவர் மன்றத்தில், அவரின் 95ஆவது பிறந்த நாள் விழாவில் அவருடைய சொற்பொழிவின் ஒரு பகுதி.....

#எனக்கு இன்று புத்தி சுவாதீனம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். எல்லாம் மறந்துபோயிற்று. என்ன பேசவேண்டும் என்று இருந்தேனோ ஒன்றும் ஞாபகத்துக்கு வரவில்லை. ஏனென்றால், இரண்டு நாளாய்ப் பட்டினி கிடந்தேன். நேற்றுக் காலையில்தான் ஒரு கப் கஞ்சி. ராத்திரி 9 மணிக்கு ஒரு தடவை கஞ்சி.  

முந்தா நாள் இரவு ஒன்றும் இல்லை. தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. இன்றைக்குக் காலையில் ஒரு இட்லி மட்டும் கொடுத்தார்கள். இன்னொரு இட்லி கொடு என்றேன். முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாசமாய்ப் போகட்டும்னு வந்துட்டேன்.

இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்கிறபோது மறுபடியும் இன்னும் எட்டு நாள்களுக்குப் பேசுவதற்கு இல்லையே என்று மனதில் இருக்கிறதைச் சொல்லுகிறேன்[தகவல் உதவி: திருமழபாடி நண்பர் டாக்டர் அ. ஆறுமுகம் அவர்கள்]#

மரணத்தை தழுவவிருந்த அந்த இறுதி நாட்களில், மக்களுக்காகப் பேசினார் பெரியார்; அவர்களுக்காகக் கவலைப்பட்டார். 

நாம் யாருக்காகக் கவலைப்படப் போகிறோம்? நமக்காகவா? நம் ரத்தபந்தங்களுக்காகவா? மக்களுக்காகவா?

யாருக்காக?!
============================================================================================