சனி, 10 மார்ச், 2018

'தாய்ப்பால் நகைகள்!'...[இது நகைச்சுவைப் பதிவல்ல!]

தாய்ப்பாலில் நகைகள் செய்து அணியும் புதுமைக் கலாச்சாரம் வளர்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள், ப்ரீத்தி விஜய் என்னும் பெண்மணி[தேனாம்பேட்டை, சென்னை]தாய்ப்பாலில் நகைகள் செய்து விற்பனை செய்துவருவதாக, 'ராணி' வார இதழ்[11.03.2018] செய்தி வெளியிட்டுள்ளது.
ப்ரீத்தி விஜய் சொல்கிறார்:
''முகநூலில், 'ஸ்மார்ட் மம்மீஸ்'னு ஒரு குழு இருக்கு. இளம் தாய்மார்கள் தங்களுக்கான சந்தேகங்களைத் தெரிவிப்பாங்க. 'பிறந்த குழந்தை தாய்ப்பாலை உறிஞ்சி குடிக்க மாட்டேங்குது. என்ன செய்யமலாம்னு சொல்லுங்க' என்பது போல.

இதுல ஒரு அம்மா கேட்டிருந்தாங்க...'அமெரிக்காவில் தாய்ப்பாலில் நகைகள் செய்யுறாங்க. இந்தியாவில் இப்படிச் செய்யுறவங்க இருக்காங்களா?'னு. யாருமே பதில் சொல்லல. நான் 'கிளே' மற்றும் காகித நகைகளும் அது சார்ந்த பல்வேறு கைத்தொழில்களும் செய்துட்டு இருந்ததால, இதுக்கு முயற்சி பண்ணினா என்னன்னு தோணிச்சி. நான் படிச்சது பி.காம்., பி.ஜி.ஹெச்.ஆர்.

துணிஞ்சி இறங்கினேன்.

ஒரு தாய்கிட்ட மூனு டீஸ்பூன் பால் வாங்கி தேவையான அளவு எடுத்துகிட்டு மீதியை அவர் பேர் எழுதி ஃபீரிஸரில் வைச்சிடுவேன். செயல்முறையில் தவறு நேர்ந்தா சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

தாய்ப்பாலில் கெமிக்கல் கலந்து, திடப்பொருளாக்கி, விரும்பும் வடிவில் 'மோல்ட்' செஞ்சி, தேவையான, 'மெட்டல்' போன்ற பொருட்கள் உபயோகிச்சி நகைகள் செய்யுறேன்.'' 

'பிளைன் ஹார்ட் பென்டட்'னு சொல்ற இதய வடிவ டாலர்தான் முதன்முதலில் செய்தாராம் ப்ரீத்தி விஜய்.

இந்தத் தாய்ப்பால் நகை உடம்புக்கு நன்மை தருமோ இல்லையோ கெடுதல் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.

இந்தியாவின் மேல்தட்டு, கீழ்த்தட்டு என்று அனைத்துத் தரப்புப் பெண்களிடமிருந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலிருந்துகூட ஆர்டர்கள் வருகின்றனவாம்.

தாய்ப்பாலில் நகை செய்யும் அதிசயத்தை நிகழ்த்துபவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் என்பதில் நாமெல்லாம் பெருமைப்படலாம்.
=================================================================================
நன்றி: 'ராணி' வார இதழ்.

https://www.ietamil.com/, www.dinakaran.com போன்ற தளங்கள் இது குறித்துச் செய்திகள் 
வெளியிட்டுள்ளன.