இந்தக் காணொலி 04.11.2025இல் வெளியானது. இது இன்று என் கண்ணில்பட்டது அடியேன் பெற்றப் பெரும் பேறு.
தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலைவர் நயினார் நாகேந்திரனாரின்[இப்போதெல்லாம் அவரின் பெயருக்கு அடைமொழியாகத் ‘தமிழன்’ இணைக்கப்படுகிறது] உரை, மோடிப் பெருமகனார்தான் உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்தத் தலைவர் என்பதை ஒட்டுமொத்த உலகமும் அறியச் செய்தது.
இதைச் செவிமடுத்தபோது மெய் சிலிர்த்தேன்; இன்னமும் சிலிர்ப்பு அடங்கவில்லை என்பதால், உலகத் தமிழர் தலைவர் மோடிக்கும், அவரை மிகச் சரியாக அடையாளப்படுத்திய உள்நாட்டுத் தமிழர் தலைவர் நயினாருக்கும் புகழாரம் சூட்டுவது இயலாமல்போனது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
வாழ்க உலகத் தமிழர் தலைவரும் உள்நாட்டுத் தமிழர் தலைவரும்!
