}

Jun 20, 2011

கடவுளின் ஓர வஞ்சனை

                                          கடவுளின் ஓர வஞ்சனை


மனிதர்களால் நம்பப்படும் விதியில் ’இரண்டு வகை’ உள்ளது.

ஒன்று ’தீய விதி’. இன்னொன்று ’நல்ல விதி’

உயிர்களுக்குத் தீமை பயப்பது தீய விதி; நன்மை பயப்பது நல்ல விதி.

உயிருள்ள.....உயிரற்ற அனைத்தையும் இயக்குவது இந்த விதி[கள்]தான். அதாவது , கடவுளே நல்ல விதி மூலம் உயிர்களுக்கு நன்மையையும், தீய விதி மூலம் தீமையும் செய்கிறார். [பக்தர்கள் முகம் சுழிக்க வேண்டாம்]

இதோடு நில்லாமல் உயிர்களுக்குச் ‘சுய அறிவும்’ கொடுத்திருக்கிறார்.

சுய அறிவு என்பது, உயிர்கள் ‘தன்னிச்சையாய்’ச் செயல்பட உதவுவது.


உயிர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடவுள், உயிர்கள் சுயமாகச் செயல்படுவதற்கான அறிவை ஏன் கொடுத்தார்?

தம் விதியையும் உயிர்களின் மதியையும் மோத விடுவதற்குத்தானே?


அந்த மோதலில், உயிர்கள் படும் பாட்டை.....துன்பங்களை.....துயரங்களை.........
அடையும் வேதனைகளைக் கண்டு ரசிக்கத்தானே?

வேறென்ன காரணம்.....காரணங்கள்? சொல்லுங்களேன்.

“இதெல்லாம் கடவுளின் விளையாட்டு. இந்த விளையாட்டில் உயிர்கள் இன்பம் துன்பம் இரண்டுமே அனுபவிக்க நேரிடும். முழு நம்பிக்கையோடு அவனை வழிபட்டால் வீடு பேறு எய்தலாம்”.

இப்படிச் சொல்பவர்கள் யார்?

ஆன்மிக வாதிகள்; மதவாதிகள்.

இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களின் ஆறாவது அறிவை மழுங்கடித்து
விட்டார்கள்.

இந்த “ஆறாவது அறிவு’ மனிதர்களுக்கு எப்படி வாய்த்ததோ யாருக்கும்
தெரியாது. [இது கடவுளால் அருளப்பட்டது என்று கதை விடாமல், ‘தெரியவில்லை’ என்று மனப்பூர்வமாய் உண்மையை ஒப்புக் கொள்ள
வலியுறுத்துவது இந்த ஆய்வுரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

எதையும் ஏன், எப்படி, எப்போது, எங்கே என்றெல்லாம் மனிதனைக் கேள்விகள் எழுப்பத் தூண்டியது இந்த அறிவுதான்.

அயராது சிந்தித்து, விடைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அரிய பல
சாதனைகளை நிகழ்த்த அடிப்படையாய் அமைந்தது இந்த அறிவுதான்.

இந்த அறிவில், சராசரி மனிதன் பயன்படுத்துவது மிக மிகக் குறைந்த
அளவுதான் [ஐந்து அல்லது ஆறு சதவீதம்தான். விஞ்ஞானிகள்
பயன்படுத்துவதே13% தான்(?) என்கிறார்கள் அறிஞர்கள்.]

மனிதன், தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு ஆளாகி, கடும்
துன்பங்களுக்கு உள்ளாகக் காரணம் அவன் தன் அறிவை முழுமையாகப் பயன்படுத்தாததே.

படிப்படியாக, தன் அறிவை அதிக அளவில் பயன்படுத்துவதற்கான பயிற்சி.......
அயராத முயற்சி.....கட்டுக்கடங்காத ஆர்வம் எல்லா மனிதர்களுக்கும் தேவை.


பகுத்தறிவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் சந்திக்க நேரும் தோல்விகளின் எண்ணிக்கை கண்டிப்பாகக் குறையும்.

துன்பங்களைத் தாங்கும் சக்தி நாளும் வளரும்.

மனிதன் தன் அறிவை முழுமையாக [100%] பயன்படுத்தும் காலம் வந்தால், அப்போது மனித சமுதாயம் எய்தும் இன்ப நிலையை எண்ணிப் பாருங்கள்.

நாம் அனுபவ ரீதியாக அறிந்து வைத்திருக்கும் இந்த ‘அறிவை’ப்
பயன்படுத்துவதைத் தவிர்த்து, நம்மால் கொஞ்சமும் அறியப்படாத, நம்பவே முடியாத விதியை நினைத்து..........................................

”விதி வலியது. அதை நம்மால் வெல்ல முடியாது. விதியால் விளையும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடவுளைச் சரணடைவதுதான் வழி’ என்று
புலம்புவதால் பயன் இல்லை.

இன்றுவரை பலன் விளைந்ததும் இல்லை. [தற்செயலாக நடந்ததையெல்லாம் கடவுளின் அருட்செயல் என்று சாதிக்க வேண்டாம்]

கடவுள் உருவாக்கிய விதி ’உண்மை’ எனக் கொண்டால்..............................

விதிப்படி எல்லாம் நடந்தே தீரவேண்டும்.

கடவுளை வழிபடுவதால் விதியின் பிடியிலிருந்து தப்பலாம் என்றால்..........

கடவுள், விதியை உருவாக்காமலே இருந்திருக்கலாமே?

ஏன் உருவாக்கினார்?

மனிதர்கள் தன்னை வழிபட வேண்டும் என்ற ஆசை காரணமா?

கோயில்கள் கட்டி, விழாக்கள் எடுத்து, காணிக்கைகள் செலுத்த வேண்டும் என்னும் பேராசை காரணமா?

என்னதான் காரணம்? சொல்லுங்களேன்.

கடவுள் பற்றிய மதவாதிகளின் கருத்துகளையும் அவர்களின் செயல்பாடு களையும் ஆராய்ந்தால் ஒன்று நன்றாகப் புரியும். அது?

கடவுள் ஓர் ஓரவஞ்சனையாளர்!

பகுத்தறிவால் இயற்கையின் நடைமுறைகளை வென்று புதிய 
கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியல் அறிஞர்கள் [விஞ்ஞானிகள்] பலர், மதவாதிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் 
இடம் பெற்றுள்ளன.


அந்தக் கொலைகாரர்களில் யாரையேனும் கடவுள் தண்டித்தது உண்டா?

எனவே, கடவுள் என்று ஒருவர் இருந்தால்........................................

அவர் வஞ்சக நெஞ்சம் கொண்டவர் என்கிறோம்.

உங்கள் பதில் என்ன?

********************************************************************************7 comments :

 1. அருமையான பதிவு சகோ.

  விதி - என்பதை ஏற்கனவே தலையில் எழுதப் பட்டுவிட்டதாகவே அனேக மதங்கள் கூறுகின்றன, அந்த விதியை மாற்ற வேண்டுமெனில் எஜமானருக்கு பிடித்த மாதிரி நடந்தால் மாற்றுவாராம். புரியவில்லை இவர்களின் கதை..

  அனைத்தும் விதிக்கப்பட்டது எனில், நான் செய்யும் ஒவ்வொரு செயலும் விதியால் நிர்ணயம் செய்யப்படுகின்றது எனில், அங்கே நான் செய்யும் தீச்செயல்களுக்கு நானா பொறுப்பு ? அதனால் விளையும் பாவங்களுக்கு நானா தண்டனை பெறுவது ? என்ன நியாயமுங்க..


  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது பழந்தமிழ் சமூகக் கருத்து, அதாவது நல்லதும் கெட்டதும் வேறு எங்கிருந்தும் வருவதில்லை, நமது செயல்களே அது.

  இது அப்பட்டமான சமண மதத் தத்துவ தழுவல்,

  இந்து மதம் சொல்லும் கர்ம வினைக்கும் சமணத்தின் கர்ம வினைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

  இந்து மதம் சொல்வது நாம் செய்யும் செயல்களில் இருந்து கர்மம் தோன்றி ஏழேழு ஜென்மங்களுக்கு விதிப் பலனாய் தொடரும் என,

  அதே போல ஆபிரகாமிய மதங்களான இஸ்லாம், கிறித்தவம், யூதம் என்பதில் விதிப் பலனும், கர்ம்பப் பலனும் கடவுளால் தீர்மானிக்கப்பட்டது என,

  ஆனால் சமணத்தின் படி கர்மவினை என்பது நம்மால் பாதியும், நமக்கு புறம்பே இருக்கும் சூழலால் மீதியும் நிர்ணயிக்கப் படுவது. அதனையே கர்மா - வினை என்கின்றனர்.

  நமக்கு புறம்பே நமது கட்டுப்பாட்டில் இல்லாத கர்ம வினை என்பது ஊழ் எனப்படுகின்றது.

  ஆனால் அந்த ஊழை நம்மால் கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்பதை சமணர்கள் ஊழையும் உட்பக்கம் காண்பர் எனக் கூறுகின்றார்கள்.

  நிச்சயம் சமண மத தத்துவங்கள் 100 சதவீதம் பூரணமானது அல்ல, இருப்பினும் இன்றைய பகுத்தறிவுக்கு கொஞ்சமேனும் பொருந்தும் தத்துவம் அதுதான்.

  விதி - எழுதப் படாத ஒன்று

  ஊழ்- நமக்கு புறம்பே இருக்கும் வினை

  புரிந்துக் கொண்டால் கடவுள் என்ற ஒன்றின் தேவை ஏற்படாது என்பேன் ...

  ReplyDelete
 2. ஒரு வேண்டுகோள் .. அண்மைய இடுகைகளை கேட்ஜட்டாக சைட்பாரில் இணைக்கவும்,, ஒரு 5 - 10 இடுகைகள் .. அதனால் படிக்க வசதியாக இருக்கும் ....

  தளத்தின் அழகு மிளிர்கின்றது. மிக்க நன்றிகள் சகோ.

  தமிழ்மண வாக்குப் பொத்தான் வைத்தால் சுபம்

  ReplyDelete
 3. என் பதிவின் மீதான தங்களின் அரிய விளக்கங்களும், ’சமண மத தத்துவங்கள் 100% முழுமையானவை அல்ல எனினும்,இன்றைய பகுத்தறிவுக்குக் கொஞ்சமேனும் பொருந்தும் தத்துவம் அதுதான்’ என்ற
  தங்கள் கருத்தும் முழுமையாக ஏற்கத்
  தக்கன.
  நன்றி சகோதரரே.

  என் வலைப் பதிவின் வடிவமைப்புக்
  கான தங்களின் ‘வழிகாட்டுதலுக்கும்’
  நன்றி.

  ReplyDelete
 4. உங்கள் சிறுகதையில் மனிதனை பண்படுத்தும் நேயம் அடி நாதமாக இருக்கிறது.

  அவன் இவன் இயக்கியது எவன்?...
  என்ற தலைப்பில்
  எனது கோபத்தை
  எனது வலைப்பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன்.
  வருகை புரிந்து கருத்துக்ளை கூறுமாறு அன்போடு அழைக்கிறேன்.  19 ஜூன், 2011 6:24 pm அன்று கடவுள்?!?!? kadavulinkadavul.blogspot.com இல் உலக சினிமா ரசிகன் ஆல் உள்ளிடப்பட்டது

  ReplyDelete
 5. பேராசிரியரே...ஆன்மீகவாதிக்கும் வலிக்காமல் நீங்கள் செய்யும் பரப்புரை நாகரீகத்தின் உச்சம்.

  ReplyDelete
 6. இது எனக்குக் கிடைத்த ‘உச்சக்கட்ட’ப்
  பாராட்டு.
  நன்றி நண்பரே.
  ‘உலக சினிமா ரசிகன்’புதுமையான புனை பெயர். தங்களின் எழுத்துப் பணி தொடர என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. முனைவர் ஐயா, உங்க கேள்வி அத்தனைக்கும் பதில் இருக்குது. ஆனா அதை உங்களால வெளியிட முடியாது, வெளியிட்டா படிக்கிறவன் திருந்திடுவான், கூடவே உங்க டவுசர் கிழிஞ்சிடும். அதனால மூடி வச்சிட்டு உட்கார்ந்திருக்கீங்க. இந்த ஈனப் பொழப்பு தேவையா? இதை விட்டுட்டு, நாமக்கல் லாரி டிரைவருங்க நாலு பேத்த புடிச்சி, வடநாட்டுப் பக்கம் போகும் போது கையையும் காலையும் வச்சிக்கிட்டு சும்மா இருங்கடா அப்படியே இருக்க முடியலைன்னாலும் ஆணுறை போட்டுக்கிட்டு பண்ணுங்கடான்னு எடுத்துச் சொன்னா அவனுங்க உயிர் கொல்லி நோயிலிருந்து தப்புவானுங்க, உங்க ஊர் சுத்தமாகும், உங்களுக்கும் நீங்க தேடிகிட்டு இருக்கும் மன நிம்மதி, சுத்தமெல்லாம் கிடைக்கும், செய்வீங்களா?

  ReplyDelete