தேடல்!


Jul 16, 2015

கன்னிப்பெண்[virgin]களுடன் ‘உடலுறவு’ AIDS நோயைக் குணப்படுத்துமா?


“படுத்தும்” என்று நம்புகிற ‘கெடுமதி’யர் உலகெங்கும் பரவியிருக்கிறார்கள்!['...some people through out the world still believe that sex with a virgin will cure many different types of sexual diseases...' - "superstitions" - yahoo Answer]

வாசிப்பு உலகின் மேதாவிகளிலும் இதை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்!
இந்த நம்பிக்கை, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, ஆசியா என உலகெங்கும் பரவிக்கிடக்கிறது. குறிப்பாக, ஆசியா, ஆஃப்ரிக்கா நாடுகளில் நீக்கமற[Still Prevalent] நிறைந்து காணப்படுகிறது. 

எயிட்ஸ் தவிர, பால்வினை நோய் போன்ற பல நோய்களையும் ‘கன்னி கழியாத’ குமரிகள்/சிறுமியருடனான உடலுறவு குணப்படுத்துமாம்.

இவ்வகைப் புணர்ச்சி, செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் என்று தெனாப்பிரிக்காவில் வாழும் அடிமடையர்கள் நம்புகிறார்களாம். இதைப் பெறுதற்கரிய ‘பேறு’ என்றும் மனம் கூசாமல் சொல்கிறார்களாம்.

இம்மாதிரி நம்பிக்கைகள் ‘வெற்று’ நம்பிக்கைகளாகவே இருந்திருந்தால் இதுபற்றி எவரும் கவலை கொள்ளப் போவதில்லை. இவை செயல் வடிவம் பெற்றதன் விளைவு, உலக அளவில் எண்ணிலடங்காத கன்னிப்பெண்களும் சிறுமியர்களும் பெண்சிசுக்களும் சித்ரவதை செய்து சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்; பிறந்ததன் பயனை அனுபவிக்க விடாமல், முளைவிடும்போதே வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு ஏராள உதாரணங்கள் காட்டலாம்.

*பிறந்து 9 மாதங்களே ஆன ஒரு பச்சிளம் சிசுவை 24-66 வயதுக்கு இடைப்பட்ட ஆறுபேர் கற்பழித்துக் கொலை செய்திருக்கிறார்கள். இச்செய்தியை வெளியிட்டது, ஆப்பிரிக்காவின் ஓர் இணைய இதழாகும்

*2002 ஆம் ஆண்டில், அதே நாட்டில் 8 மாதக் குழந்தையை நான்கு பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்து கொன்றிருக்கிறார்கள்.

*நைஜீரியாவில், 70-85 இடைப்பட்ட வயதினர் இம்மாதிரிக் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள்.

*சீனாவில், இரண்டு ஆசிரியர்கள் 23 கன்னிகளுடன் வெறிப் புணர்ச்சி செய்ததோடு அவர்களை விபச்சாரத் தொழிலிலும் ஈடுபடுத்தியதால் நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

*ஆறேழு மாதக் குழந்தையிலிருந்து பதினாறு பதினேழு வயது வரையிலான கன்னிகளுமே மூடநம்பிக்கையாளரால் பெருமளவில் சீரழிக்கப்படுகிறார்கள்.

*சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரக் கிழவன், இழந்த வாலிபத்தைத் திரும்பப் பெறுவதற்காக, ஒரு ஜோதிடனின் ஆலோசனைப்படி, 100 கைபடாத கன்னியரைப் வன்புணர்ச்சி செய்து பரவசப்பட்டிருக்கிறான்.

மேலும் பல கன்னியரை வேட்டையாடிப் புணர்ந்து, இழந்த வாலிபத்தை மீட்டுவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

இத்தகவல்கள், Yahoo, Google Search ஆகிய தேடுபொறிகள் மூலம் திரட்டியவை.

இவை போன்ற கொடூரச் சம்பவங்கள் உலகின் பல நாடுகளிலும் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

எகிப்தைச் சேர்ந்தவன் ஹஜாத்காடி (33). குவைத்தில் தங்கி இருந்தபோது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தான் என்று குற்றம்சாற்றப்பட்டது; மக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தேசியக் குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 48,338 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

2001 ஆம் ஆண்டில் 2,113 ஆக இருந்த குழந்தைக் கற்பழிப்பு எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு 7,112 ஆக அதிகரித்துள்ளது.

2001 - 2011 ஆம் ஆண்டு வரை குழந்தைகள் கற்பழிப்புச் சம்பவங்களால் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 9,465 வழக்குகளும், மகராஷ்டிராவில் 6,868 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 5,949 வழக்குகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. [--Logo


குழந்தைகளையும் பெண்களையும் தெய்வங்களாகப் போற்றி வாழ்ந்த நாடு இது என்கிறார்கள். இந்தப் ‘புண்ணிய பூமி’[???], ‘பாவ பூமி’யாக மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது.

கூகிளில் தேடினால், மனதை வாட்டிவதைக்கும் இம்மாதிரியான கொடூரச் சம்பவங்கள் பல்வேறு நாடுகளிலும் நடந்துவருவதை அறிய முடிகிறது. அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

ஏதுமறியாக் குழந்தைகளையும் பேதைப் பெண்களையும் கடவுள்[?]தான் காப்பாற்ற வேண்டும்.
=============================================================================================
நன்றி: http://muudarulakam.blogspot.com