தேடல்!


Apr 29, 2017

பெரியாரின் ‘பட்டுச்சேலையும் ஜமுக்காளமும்’ -‘சுருக்’ கதை!

#ஒருத்தியிடம் இன்னொருத்தி பட்டுச்சேலை இரவல் கேட்டாள்.

அந்த ஒருத்தியும் கொடுத்தாள்.

கட்டிக்கொண்டு போகிறவள், ‘இது அடுத்தவள் சேலைதானே’ என்று அலட்சியமாய்க் கண்ட கண்ட இடத்தில் உட்கார்ந்தால் சேலை அழுக்காகும்; எண்ணைக்கறை படும் என்றெல்லாம் இரவல் கொடுத்தவள் கவலைப்பட்டாளாம். அதனால்.....

அவள் போகும் இடங்களுக்கெல்லாம் இவளும் ஒரு ஜமுக்காளத்தைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னால் அலைந்தாளாம்; அவள் உட்காரும்போதெல்லாம் இவள் அவள் அமரும் இடங்களில் எல்லாம் அதை விரித்தாளாம்.

மக்களாகிய நம் கதையும் இதுதான். நம்மால் பதவி பெற்ற அமைச்சர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் கறைபடாமல் காக்கும் பொறுப்பு நம்முடையதாக இருக்கிறதே#
***********************************************************************************************************************

கதை உதவி: முனைவர் அ.ஆறுமுகம்; ‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’, பாவேந்தர் பதிப்பகம், திருமழபாடி, அரியலூர் மாவட்டம். முதல் பதிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2048[2017]