தேடல்!


Jun 5, 2017

நன்றி தமிழ்மணமே, நன்றி...நன்றி!!!

*அண்மைக் காலங்களில், ‘தமிழ்மணம்’ திரட்டியில் ‘இடுகை’யை இணைப்பதற்குப் பகீரத  முயற்சி தேவைப்பட்டது. ‘இடுகை திரட்டப்பட்டது’ என்று அறிவிப்பு வரும். ஆனால், இணைப்பதற்குத் தமிழ்மணம் ரொம்பவே அவகாசம் எடுத்துக்கொள்ளும்.

*முகப்புப் பக்க இடுகைப் பட்டியல், பல மணி நேரங்கள்... ஏன், ஒரு நாள் முழுதும்கூட அசைவின்றி ஆணி அடித்தாற் போல நகராமல் நிற்கும்.

*இணைக்கப்பட்ட இடுகை, பக்கம் 1[2,3,4,5,.....]இன் பட்டியலில் இடம்பெறும்; முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறாது. 

*சூடான இடுகைகள் பட்டியலும் இதற்கு விதிவிலக்கல்ல. பட்டியலில், முந்திக்கொண்ட பத்து இடுகைகள் முதல் பத்து இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டு நகராமல் அடம்பிடிக்கும். பின் தங்கிய இடுகைகளை ஈன்றெடுத்தவர்கள்  சூடாகிப்போவார்கள்.

*தமிழ்மணம் ‘வாக்குப் பட்டை’யைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பட்டையைக் ‘கிளிக் ’ செய்துவிட்டுப் பின்னூட்டங்களில் பட்டையைக் கிளப்பப் புறப்பப்படுவோர், ஓட்டு ‘போல்’ ஆகாமல் நிமிடங்கள் கரைந்துகொண்டே இருக்க,   மண்டை காய்ந்து வாக்களிப்பதையே கை கழுவுவார்கள்!

*இன்னும், இப்படிச் சில குறைகள்.

இன்று அத்தனை குறைகளையும் ‘மிச்சம் சொச்சம்’ வைக்காமல் களைந்து, திரட்டிக்குப் புதுமெருகூட்டி, நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகை செய்கிறது தமிழ்மணம்!

மனம் பூரித்த நாம்..........

நம் மனம் நிறைந்த நன்றியினைத் தமிழ்மணம் நிர்வாகிகளுக்குத் தெரிவிப்போம்.

“நன்றி நிர்வாகிகளே! நன்றி...நன்றி...நன்றி!!!”