சனி, 4 ஜூன், 2022

'மகாத்மா' காந்திக்கா இப்படி ஒரு மகன்!?!?

[ஹரிலால் காந்தி]
க்களால் 'மகா ஆத்மா' என்று போற்றப்பட்டவர் காந்தியடிகள்.

வாய்மை, நேர்மை, புலனடக்கம், தியாகம், மது அருந்தாமை, பிரமச்சரிய விரதம் என்றிப்படி மிக உயர்ந்த நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தவர் காந்தி. அவரின் மூத்த மகனான ஹரிலால் காந்தியோ, காந்தியடிகளால் வெறுத்தொதுக்கப்பட்ட நெறிகளைப் பின்பற்றிச் சீரழிந்தவர் என்பது நம்மைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்துவதாகும்.

ஹரிலால்.....

ஒரு முழுநேரக் குடிகாரர்.

குறையாத போதையுடன் ஒரு ஒரு பிச்சைக்காரனைப் போல் ஊர் சுற்றித் திரிந்தவர்.

குடிப்பதற்குப் பணம் கேட்டுச் சொந்தபந்தங்களைத் துயரம்கொள்ளச் செய்தவர்.

விபச்சார விடுதிகளிலிருந்து காவல் துறையினரால் ஊரறிய இழுத்துச் செல்லப்படுவதும் நடந்தது.

வாங்கிய கடனைத் திருப்பித் தராததோடு பிறர் பணத்தைக் கையாடல் செய்து, அது பத்திரிகைச் எய்தியாக வந்து நாடறிய அவமானப்பட்டவர்.

மிதமிஞ்சிய போதையுடன் தெருவோரங்களில் விழுந்துகிடந்ததும் உண்டு.

காந்தியடிகள் பற்றி மிக இழிவாக இவர் நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகள் காந்தியின் எதிரிகளுக்குப் பேசு பொருள் ஆனது.

தன் தந்தையின் மனதைப் புண்படுத்துவதற்கென்றே இஸ்லாமுக்கு மாறித் தன் பெயரை 'அப்துல்லா காந்தி' என்று மாற்றிக்கொண்டவர்.

இவற்றையும், இவை போன்ற ஹரிலாலின் இழிசெயல்களையும் காந்தியடிகள் அறிந்தே இருந்தார். இருந்தும், அவரால் இவரைத் திருத்த இயலவில்லை.

இவரைத் திருத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்ட காந்தி, சபர்மதி ஆசிரமத்துக்கு அழைத்துவந்து, புகை பிடிக்க மட்டும் அனூமதி தந்து திருந்தி வாழுமாறு வேண்டினார். அவரோ திருந்துவதற்கு மாறாக, ஆசிரமத்திலிருந்த ஒரு பெண்ணிடமே தவறாக நடந்துகொள்ள அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஹரிலால் சாகும்வரை திருந்தவே இல்லை.

'மகா ஆத்மா' என்று போற்றப்பட்டவருக்கு இப்படியொரு மகன் எப்படிப் பிறந்தான் என்று பலராலும் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை கண்டறிந்து உலகறியச் சொன்னவர் எவருமில்லை என்றாலும், காந்தியே, "நான் கெட்ட குணங்கள் கொண்ட  தீயவனாக இருந்தபோது இவன் பிறந்ததால் இப்படித் தீய பழக்கங்கள் உள்ளவனாக இருக்கிறான்"[தன் தந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிந்த சோகம் சூழ்ந்திருந்த நேரத்தில் தன் மனைவியுடன் உறவாடிக்கொண்டிருந்ததாக காந்தி தன் 'சத்திய சோதனை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்] என்று சொல்லியிருக்கிறார்.

குணங்கள் அமைவதற்கு, பரம்பரை, வளர்ந்து வாழும் சூழ்நிலை போன்றவையும் காரணங்களாக உள்ளன என்பது அவருக்குத் தெரியாதது அல்ல. இருந்தும் முழுப்பழியையும் தானே சுமக்க வேண்டும் என்றே இப்படிச் சொன்னார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆயினும், பிள்ளைகளுக்கு நல்ல குணங்கள் அமைவதற்கு, புணர்ச்சி மேற்கொள்ளும் காலக்கட்டத்திலான பெற்றோரின் மனநிலையும் ஒரு காரணம் ஆதல்கூடும் என்பது மறுக்க இயலாதது.

இக்கருத்தை தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் தம் நூல்களில் வலியுறுத்தியிருக்கிறார் என்பது அறியத்தக்கது.

                                          *     *     *     *     *

#பெத்த மகளையே பலாத்காரம் செய்திருக்கிறாய்: ஏலத்திற்கு வரும், 'காந்தி மகனுக்கு எழுதிய கடிதம்'

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலால் அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி எழுதிய கடிதம் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது.#

கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்க.

https://tamil.oneindia.com/news/international/mahatma-gandhi-s-letter-accusing-son-rape-go-on-sale-london-200989.html

======================================================================================

***ஹரிலால் காந்தி குறித்த தகவல்களைப் பெற உதவிய நூல்: 'பிரேம்' அவர்களின், 'அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும்', 'புலம்' வெளியீடு, மதுரவாயல்.