பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
புதன், 30 அக்டோபர், 2024
செருப்பால்[‘த.வெ.க.’ விஜய் அடிவாங்கியது] அடித்துக்கொள்ள ரூ1000 கட்டணம்!!!
செவ்வாய், 29 அக்டோபர், 2024
500 ஆண்டுகள் அலைந்து திரிந்த ராமரும் குடியமர்த்திய நம் பிரதமர் மோடியும்!!!
"500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி" என்று பெருமிதப்பட்டிருக்கிறார் மோடி.
இவர் அவரை அமரவைக்காமல் இருந்திருந்தால், ஐயாயிரம், ஐம்பதாயிரம், லட்சங்கள் என்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தன்னிச்சையாக அங்குவந்து அமரும் சக்தி ராமபிரானுக்கு இல்லை என்பதையும் யூகிக்கச் செய்திருக்கிறார்.
ஒரு முழுமுதல் கடவுள்[வைணவர் நம்பிக்கை] தனக்கான இருப்பிடம்[அயோத்தி கோயில்] இடிக்கப்பட்டபோது அதைத் தடுக்க இயலாததால் 500 ஆண்டுகள் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தார் என்பதையும் சூசகமாகச் சொல்லியிருக்கிறார் மோடி.
ஆக, சுய முயற்சியால் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டுள்ளார் மோடி என்று சொன்னால் அதில் உள்நோக்கம் ஏதுமில்லை.
மிக முக்கியக் குறிப்பு:
என்றோ[500 ஆண்டுகளுக்கு முன்பு] நடந்ததாகச் சொல்லப்படும் அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்பட்ட நிகழ்வை[500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள தனது அற்புதமான கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி. பல தலைமுறையினர் இந்தத் தீபாவளிக்காகக் காத்திருக்கின்றனர். பலர் அதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் அல்லது துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்-tamil.oneindia.com] நினைவுபடுத்தி மத வெறியைத் தூண்டும் மோடியின் கூற்றே இப்பதிவு உருவாகக் காரணமாக அமைந்தது.
* * * * *
திங்கள், 28 அக்டோபர், 2024
பெரியாரை இழிவுபடுத்தும் 'த.வெ.க.' விஜய்[நடிகர்]க்குக் கடும் கண்டனம்!!!
ஒரு கட்சித் தலைவனுக்கான முதல் தகுதி, அவனுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் தொண்டனின் நலம் காப்பதுதான். கட்சியை வளர்ப்பது, மக்கள் பணியாற்றுவதெல்லாம் அப்புறம்.
ஒரு நடிகனாக இருந்து, அல்லது இருந்துகொண்டு புதியதொரு கட்சியைத் தொடங்கியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கண்ட தகுதியைக் கிஞ்சித்தும் பெற்றிராதவர்.
ஏற்கனவே இவருடைய ரசிகர்களாக இருந்து இப்போது தொண்டர்களாகவும் ஆன 3 பேர், இவர் நடத்திய கட்சித் தொடக்க விழா மாநாட்டிற்கு வந்தபோது உயிரிழந்திருக்கிறார்கள்[இருவர் வாகன விபத்தில். ஒருவர் மாரடைப்பால். விரிவான செய்தி கீழே].
காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக இறந்த ஒருவரின் உறவினர் பேசியதாவது: “சின்னப் பிள்ளையாக இருந்ததில் இருந்து இவர்[கலைக்கோவன், இறந்தவர்களில் ஒருவர்] விஜய் ரசிகராகவே இருந்தார். விஜய்க்காக எவ்வளவோ செலவும் செய்துள்ளார். விஜய்யும் அரசியலுக்கும் வந்துவிட்டார். மாநாட்டுக்குச் செல்லும்போது விபத்து நிகழ்ந்துவிட்டது. மாநாட்டுத் திடலிலேயே விஜய் இரங்கல் தெரிவித்திருக்கலாம்.
தலைமைக் கழகத்தில் இருந்து ஒரு போன், ஒரு மெசேஜ் என எதுவும் வரவில்லை. இவ்வளவு நாள் அவர் உழைத்ததற்கு என்ன பலன் இருக்கிறது, சொல்லுங்கள்.....” https://www.puthiyathalaimurai.com/tamilnadu/anand-tributes-to-tvk-executives-who-died-in-the-accident
விழாவின் தொடக்க நாளிலேயே மாநாட்டைச் சிறப்பிக்க வந்த தொண்டர்களின் உயிரிழப்பு பற்றி அறிவித்து இரங்கல் தெரிவித்தால், அது அபசகுனமாக அமையும் என்று நம்பும்[ஊடகச் செய்தி] நடிகன் விஜய், பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
* * * * *
***த.வெ.க மாநாட்டில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். அதில் மாநாட்டிற்காகத் திருச்சியில் இருந்து வந்த கார் ஒன்று, சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 3 பேர் காயம் அடைந்தனர்.
இதே போல் சென்னை கீழ்பாக்கத்திலிருந்து சென்ற சார்லஸ் என்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.