எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 31 அக்டோபர், 2025

பொய்யர் மோடியா இந்தப் புண்ணியப் பூமியின் பிரதமர்!?!?!

//பீகார் மாநிலம் சாப்ராவில் நேற்று(அக். 30) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்[தேர்தல் பரப்புரை] பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தனது 44 நிமிட உரையின் ஒருபகுதியில், "தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் துன்புறுத்துகின்றனர்"* என்று கூறினார்//என்பது செய்தி.

பீகாரில் ஆட்சி நடத்துவது மோடியின் கழிசடைக் கட்சிதான்[நிதீஷ் வெறும் டம்மி].

உலகம் சுற்றுவதிலும், கோயில்கள் கட்டி முட்டாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் மோடிக்கு உள்ள அக்கறையில், ஒரு சிறு பங்குகூட பீகார் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இல்லை.

அதன் விளைவுதான், வயிற்றுப்பாட்டுக்காகத் திருட்டு ரயில் ஏற்றிக் கூட்டம் கூட்டமாகத் தமிழ்நாடு வருகிறார்கள் பீகாரிகள்[வருங்காலத்தில் பல இன்னல்களைத் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ளது]. அவர்களின் பசியைத் தணிக்கிறது தி.மு.க. ஆளும் தமிழ்நாடு.

மோடி தமிழ்நாட்டுக்கு[+ஸ்டாலின்] நன்றி சொல்லியிருக்க வேண்டும். மாறாக, பீகார் மக்களிடம் வாக்குப் பெறுவதற்காகக் குரோதத்துடன் நடந்துகொண்டிருக்கிறார்.

இவர் இந்தியாவின் பிரதமர். ஒட்டுமொத்த அதிகாரமும் இவரின் ஒரு சுட்டு விரல் அசைவில்[எப்போதும் சுட்டுவிரல் அசைத்துப் பேசுவதன் உள்ளர்த்தம் இதுதான்]. உண்மையிலேயே தி.மு.கட்சியினர் பிழைக்கவந்த பீகாரிகளைத் துன்புறுத்தியிருந்தால், அதன் தலைவரான மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்[ஆட்சியையே கலைக்கலாம்]. அதைத் தவிர்த்து வஞ்சினத்துடன் பொய்ப் பழி சுமத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்க இழிசெயல்.

இதைச் செய்யத் தூண்டுவது பதவி வெறி. உயிருள்ளவரை பிரதமராக நீடிக்க வேண்டும் என்னும் பேராசை.

எந்த ஒன்றுக்கும் ஆசைப்படுவதில் தவறில்லை. பேராசைப்படுவது.....

பெருங்கேட்டுக்கு வழிவகுக்கும்.

                                         *   *   *   *   *

*https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-condemns-pm-narendra-modi-speech-on-dmk-harassing-bihar-workers-in-tamil-nadu-618884

வியாழன், 30 அக்டோபர், 2025

இதயத் துடிப்பு அதிகரிப்பது[சராசரிக்கும் மேல்] ஆபத்தானதா?

இதயத் துடிப்பானது,  பெரியவர்களுக்கு ஓய்வாக இருக்கும்போது, நிமிடத்திற்கு 60 முதல் 100 துடிப்புகள்(bpm)வரை இருக்கும். 

வயது, உடற்பயிற்சி, நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் துடிப்பில் மாற்றங்கள் நிகழும். விளையாட்டு வீரர்களுக்கு இருதயச் செயல்திறன் காரணமாக, இதயத் துடிப்பு 60 bpmக்கும் குறைவாக[ஓய்வில்] இருக்கலாம்.

பரபரத்தல் இல்லாமல் அமைதியாக இருக்கும் தருணத்தில்கூட திடீரென இதயத் துடிப்பு சிலருக்கு அதிகரிப்பதுண்டு. அதாவது, இதயத் துடிப்பு 100 bpmஐக் கடந்திருக்கும். இதை ‘டாக்ரிக்கார்டியா’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதற்கான காரணங்கள்:

1.பதட்டம் அல்லது மன அழுத்தம்> பதற்றப்படும்போது அட்ரினலின் சுரக்கிறது. இதனால் உடல் ரீதியான ஆபத்து இல்லாவிட்டாலும் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. 

2.நீரிழப்பு> நீரிழப்பு[லேசான நீரிழப்பு உட்பட] காரணமாக இரத்த அழுத்த அளவு குறையும். அதைச் சரிசெய்ய இதயம் வேகமாகத் துடிக்கும். 

3.காஃபின் அல்லது தூண்டுதல்கள்> காஃபின், நிக்கோடின், சில குளிர் மருந்துகள், ஆற்றல் பானங்கள் போன்றவை அட்ரினலின் செயல்பாட்டை அதிகரிப்பதால் இதயம் வேகமாகத் துடிக்கும்.

4.ஹார்மோன் மாற்றங்கள்> தைராய்டு செயல்பாட்டில் ஏற்ற இறக்கங்கள் இடம்பெறும்போது[குறிப்பாக மாதவிடாய்க் காலம்]  இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

5.அரித்மியா> இதயத்தின்  மின் பாதையில் உருவாகும் ஒழுங்கற்ற நிலையும் இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும். 

6.போஸ்டரல் ஆர்த்தோஸ்டேடிக் டாக்கிகார்டியா சிண்ட்ரோம்(POTS)> இது, பெரும்பாலும் இளைய வயதினரிடையே காணப்படுவது. இதனாலும் இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும்.

ஓய்வாக இருக்கும்போது மேற்கண்ட வகையில் இதயத் துடிப்பு 100bpm> 120 bpmஐக் கடந்து அதிகரிப்பது ஆபத்தானது அல்ல[தானாகவே சரியாகிவிடுவதும் உண்டு] எனினும், மருத்துவமனைக்குச் செல்வது நல்லது  என்கிறார்கள் மருத்துவர்கள்.

எச்சரிக்கை!

சீரற்ற இதயத் துடிப்பு(அரித்மியா> மிக அதிகரிப்பதும் மிகக் குறைவதுமான தாறுமாறான துடிப்பு) சில சமயங்களில் ஆபத்தானதாக இருக்கலாம், இது அடிப்படைக் காரணத்தைப் பொருத்துப் பாதிப்பில்லாததாகவோ, உயிருக்கு ஆபத்தானதாகவோ இருக்கலாம். இது இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் கோளாறினால் உண்டாகிறது. சில சந்தர்ப்பங்களில், இது பக்கவாதம் போன்ற தீவிரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும், எனவே, தொடர்ந்து அசாதாரண இதயத் துடிப்பை உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

                                  *   *   *   *   *https://www.hindustantimes.com/lifestyle/health/cardiologist-reveals-6-reasons-why-your-heart-may-beat-faster-than-usual-and-when-you-should-worry-101758170221221.html

புதன், 29 அக்டோபர், 2025

‘அதிமுக’வைக் காப்பாற்றியவர்/காப்பாற்றுபவர் கடவுளா, கடவுளால் அனுப்பப்பட்டவரா?!

“மீண்டும் ‘தி.மு.க.’ ஆட்சிக்கு வந்தால் ‘த.வெ.க.’வை ஆண்டவனால்கூடக் காப்பாற்ற முடியாது” என்று ஒரு வாரத்திற்கு முன்பே, ‘அருள்வாக்கு’ச் சொன்னவர் ‘பாஜக’வின் உயர்மட்ட அடிமைகளில் ஒருவரான உதயகுமார்[அதிமுக]. 

“த.வெ.க. ‘அதிமுக’ கூட்டணியில் சேராது[ஒருபோதும் ‘பாஜக’வின் அடிமை ஆகாது] என்று ‘தவெக’ தலைவர் விஜய் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

அடிமை உதயகுமாரிடம் நாம் கேட்பது.....

தன்மானத்துடன் அரசியல் நடத்த நினைக்கும் தலைவனை, திமுக. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்றால், கடந்த பல ஆண்டுகளாக ‘திமுக’விடமிருந்து உங்களைக் காப்பாற்றியவர் கடவுள் அல்ல; ‘கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்[பகவான் மோடி]’ என்கிறீரா?

‘இந்தி’யர் அல்லாத மக்களின் இன&மொழி அடையாளங்களை அழித்து, அனைவரையும் ஆடக்கி ஆளத் துடிக்கும் ஆதிக்க வெறிக் கூட்டத்திற்கு, மானம் சூடு சொரணை எல்லாம் இழந்து அடிமைச் சேவகம் செய்கிற நீங்கள்[அதிமுக] தவெக. தலைவனையும் அடிமை ஆக்க அயராது பாடுபடுகிறீர்களே, இதனால் நீங்கள் பெறும் ஆதாயம்தான் என்ன?

அவர்களின் ஆயுட்கால அடிமைகளாகவே நீங்கள் இருங்கள். கேட்பாரில்லை.

இனியும் விஜய் என்னும் தன்மானக் கட்சித் தலைவனைச் சீண்டாதீர். சீண்டினால், தமிழ்நாட்டில் உங்கள் கட்சி காணாமல்போகும் என்பதை மறவாதீர்!

செவ்வாய், 28 அக்டோபர், 2025

தேடிப்போவதும் தேடாமலே வருவதும்!!

ந்தரங்கச் சுகங்களைத் தேடி மனம் அலைவதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான முயற்சிகளால் சாத்தியப்படலாம். ஆனால்.....

அந்தச் சுகங்களுக்கான வாய்ப்புகள் தாமாகத் தேடிவந்தால், மனதைக் கட்டுப்படுத்துவது மிக மிக மிகக் கடினம்! பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் குப்புறக் கவிழ்ந்தது இம்மாதிரியான சூழல்களில் முழுக் கட்டுப்பாட்டையும் இழந்தததால்தான்!!

எடுத்துக்காட்டு: 'விசுவாமித்திரன் - மேனகா' புராணக் கதை.

திங்கள், 27 அக்டோபர், 2025

‘மோடி’யே இந்தப் பிரபஞ்சத்தின் குரு! பிரார்த்தித்துப் பயன் பெறுங்கள்!!

‘விஸ்வகுரு’ என்னும் சொல்லுக்கு.....

விஸ்வகுரு[சமஸ்கிருதம் विश्व गुरु] என்பது இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது: /விஸ்வ>[எல்லை கண்டறியாத அளவுக்கு விரிந்து பரந்து கிடத்தல்] 'பிரபஞ்சம்'> ); குரு> 'ஆசிரியர்'/ என்று விளக்கமளிக்கிறது விக்கிப்பீடியா[https://en.wikipedia.org/wiki/Vishvaguru].

அதாவது, பிரபஞ்சத்திலுள்ள ஒட்டுமொத்த உயிர்களுக்கு, குறிப்பாக, ஆறறிவு மனிதர்களுக்குக் குருவாக இருப்பவர்தான் ‘விஸ்வகுரு’ ஆவார்.

அந்தவொரு குருதான் நம் மோடிஜி. சொல்பவர்[“மோடியே என் விஸ்வகுரு”* ஏ.சி.சண்முகம் என்னும் பிரபலக் கல்வி நிறுவன முதலாளி.

இவர் ஆகச் சிறந்த அறிவாளியும்கூட என்பதால். இவர் சொல்வதை முழுமையாக நம்புவதோடு, பிரபஞ்சக் குருவான நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள்[வாய்ப்பை நழுவவிடாதீர்].

தரிசிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை எனின், அவ்வப்போது மானசீகமாக அவரை வழிபட்டுப் பயனடையுங்கள்.

‘ஏ.சி.ச.’வுக்கு நம் நன்றி.

*https://www.hindutamil.in/news/tamilnadu/1380973-ac-shanmugan-interview.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwwrHZBA&utm_content=rundown

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

சடலத்தை எரித்தால் சாம்பல்! புதைத்தால் புழு!! சடங்குகள் ஒரு கேடா?!

ரசன் என்ன ஆண்டி என்ன, செத்த பிறகு புழுத்து நாறும் ஊத்தை உடம்புதான் மனிதராகப் பிறந்த எல்லோருக்கும்.

விரைவில் அதை எரித்துச் சாம்பலாக்குவதோ, குழி தோண்டிப் புதைப்பதோ புத்திசாலித்தனம்.

ஆனால், சடலத்திலிருந்து ஆவியோ ஆன்மாவோ வெளியேறுவதாக நம்பிச் சடங்குகள் செய்யும் வழக்கம் எல்லா மதத்தவரிடமும் உண்டு.

அவரவர் வாழ்க்கை வசதிகளுக்கேற்ப இந்த மூடப்பழக்கத்தின் எண்ணிக்கை கூடும், அல்லது குறையும். 

இங்கிலாந்து நாட்டு மன்னர் பரம்பரையினர் நோய்வாய்ப்பட்டுச் சாவைத் தழுவுவது உறுதியானால், அவர்களுக்குச் செய்யும் சடங்குகள் குறித்து அவர்களிடமே அங்கீகாரம் பெறுவது இன்றளவும் நீடிக்கும் விசித்திரமான மூடப்பழக்கம்.

அதை உறுதி செய்கிறது, மரணத்தைத் தழுவவுள்ள மூன்றாம் சார்லஸ் குறித்த செய்தி*

//புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் 77 வயதாகும் மூன்றாம் சார்லஸ் மன்னர்[இங்கிலாந்து], தன்னுடைய இறுதிச் சடங்கிற்கான[செத்த பிறகு] திட்டத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே அங்கீகரித்துள்ளார்.

இறுதிச் சடங்குகள் சுமார் 10 அல்லது 11 நாட்கள் நீடிக்கும். குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவரது உடலைப் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரகசியமாக[?]க் கொண்டுசெல்வார்கள்[இவை குறிப்பிடத்தக்கவை. கூடுதல் சடங்குகள் குறித்து அறியக் கீழுள்ள முகவரி*க்குச் செல்க]//. 

“இருக்கும்வரைதான் ஏற்றத்தாழ்வுகள்! செத்தொழிந்த பிறகு அரசனென்ன ஆண்டியென்ன?” என்று கேட்கத்தோன்றுகிறது.

                                    *   *   *   *   *

*https://www.msn.com/en-in/health/health-news/the-funeral-is-already-planned-king-charles-is-ready-for-death/ar-AA1P9WW4?ocid=winp2fptaskbar&cvid=0eaae0277b3347d0d9be5d1e6d913d5b&ei=41 -

[Story by Kathrine Frich
 • 1d • 
3 min read]

சனி, 25 அக்டோபர், 2025

100% துறவியாக வாழ விழைவோருக்கு.....

சுகபோக வாழ்க்கைக்கான வசதிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசை, பாசம், அந்தரங்கச் சுகங்கள் என்று அனைத்துப் பற்றுகளையும் துறந்து வாழ்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

ஏற்புடைய வாழ்விடம் அமைந்தால், தமக்கிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் பற்றுகளுடன் வாழ்பவர்களால், அவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியம் ஆகுமா என்னும் கேள்வி என்னுள் எழுந்தது.

இக்கேள்வியைக் கூகிள் தேடுபொறியில் பதிவு செய்ததில் அதன் செயற்கை நுண்ணறிவு[AI] அளித்த பதில் கீழே[முற்றும் துறந்து வாழ்வதற்கான இடங்கள்]:

*இமயமலையில், மடாலயங்கள், தியானக் குகைகள், லடாக்கில் உள்ள ‘தங்க்யுட் கோம்பா’, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குகைகள் என்று பனி சூழ்ந்த இடங்களில் துறவிகள் தங்கியிருக்கிறார்கள்.

*மலைகள் நிறைந்த திபெத், பூட்டான், லடாக், நேபாளம் ஆகியவற்றின் சில பகுதிகளிலும் துறவிகள் வாழ்கிறார்கள்.

*குளிர்காலத்துக்கு ஏற்ற இமயமலையின் தொலைதூரக் கிராமங்களிலும் துறவிகளுக்கான வாழ்விடங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் கோமிக் கிராமம் குறிப்பிடத்தக்கது[‘கோமிக்’இமயமலையில், ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்இது வாகனம் செல்லக்கூடிய உலகின் மிக உயரமான கிராமங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,050 அடி(4,587 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இங்குதான் பண்டைய ‘டாங்யுட் மடாலயம்’ இருக்கிறது. மலைக் காட்சிகள் காண்போரைப் பிரமிக்கச் செய்யும்].
*   *   *   *   *

***இங்குள்ள பொல்லாத மனிதர்களையும், மனம் பதறச் செய்யும் கொடூர நிகழ்வுகளையும் கண்டு கண்டு நொந்து நூலாகிப்போனவர்கள், விரும்பினால் மேற்கண்ட இடங்களில் ஒன்றிலோ பலவற்றிலுமோ ஒரு துறவியாகத் தங்கியிருந்து, மன நிம்மதியுடன் வாழ்நாளைக் கழிக்கலாம்.

செல்பவர்கள் மறவாமல் மானசீகமாக அடியேனுக்கு நன்றி சொல்லுங்கள். ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 24 அக்டோபர், 2025

செ.நு.அறிவை[AI]ப் பயன்படுத்திப் பகுத்தறிவைச் சிதைக்கும் சங்கிப் பதர்கள்!!!

கிருஷ்ணனைக் கற்பனைக் கதைகள் மூலம் கதாநாயகன் ஆக்கியவை புராணங்கள். அந்தக் கதாநாயகனைப் பிரபலக் கடவுளாக ஆக்கியவர்கள் சங்கிப் புளுகர்கள்.

புராணக் கதைகளைப் பரப்புரை செய்து மக்களின் சிந்திக்கும் அறிவை முடமாக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் இவர்கள்.

இவர்கள் அறிவியலின் நிரந்தர எதிரிகளும்கூட.

இதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு இடையறாது ஒருங்கிணைந்து பாடுபவர்கள் இந்தப் பாதகர்கள்.

செயற்கை நுண்ணறிவு[Artificial intelligence> AI] இவர்களின் மூடநம்பிக்கை வளர்ப்பிற்கு வலுவான தடையாக அமையுமோ என்று அஞ்சியதன் விளைவு, பொய்த் தகவல்களைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களில் ஒருவன் ராஜஸ்தான்காரனான 25 வயதான ‘விஜய் மீல்’ என்னும் களிமண் மண்டையன். 

'கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்பது போன்ற[எ-டு: மனித அனுபவத்தின் ஒவ்வொரு பகுதியையும் செயற்கை நுண்ணறிவு(AI) தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த இயந்திரங்கள் வழியாகத் தெய்வத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய ஒரு முன்னோட்டத்தை இந்தியா வழங்கக்கூடும்] நம்பிக்கை வார்த்தைகளைக் கீதா-ஜிபிடி சொல்ல, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறானாம் இந்த மீல்.

இவன் அளந்துவிட்டுள்ள கதையை முழுமையாக அறிந்திடக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குங்கள்.

https://www.bbc.com/tamil/articles/cj3z0kj4xyzo   - 20 அக்டோபர் 2025

வியாழன், 23 அக்டோபர், 2025

டெல்லிக்கு அருகே சபரிமலைக் கோயில்... மோடிஜியால் முடியும்!


நம் குடியரசுத் தலைவர் ‘முர்மு’ அவர்கள் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.

நம் பிரதமர் மோடி அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அயோத்தியில் பாலராமருக்குக் கோடானுகோடி செலவில் கோயில் கட்டியது போல, கோடியோ கோடி செலவில்[பக்தி வளர்ப்பில் பணம் ஒரு பொருட்டல்ல] டெல்லிக்கு அருகில்  ஒரு மலையைத் தேர்வு செய்து, அற்புதமான அழகிய ஐயப்பன் சாமி கோயிலையும் கட்டியிருப்பார். ஐயப்பன் வழிபாடு குடியரசுத் தலைவருக்கு மிக எளிதானதாக அமைந்திருக்கும்.

‘முர்மு’ அவர்களின் அடுத்த, கேரளாவில் உள்ள சபரிமலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக, இப்போதே நம் பிரதமர் அவர்கள் ஐயப்பன் சாமிக்குக் கோயில் கட்டும் பணியை[டெல்லிக்கு அருகில் உள்ள மலையில்] மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

டெல்லிக்கு மிக அருகில் மலை ஏதும் இல்லை. சுமார் 270 கி.மீ தொலைவில் அவை உள்ளன.

*டேராடூன்[டெல்லியிலிருந்து 270 கி.மீ]:

*பர்வானூ (டெல்லியிலிருந்து 295 கிமீ)

டெல்லியிலிருந்து கேரளாவில் உள்ள சபரிமலைக் கோயிலுக்கான தூரம்[2,750.7 கிமீ> NH 52 வழியாக], இவற்றோடு ஒப்பிடும்போது மிக மிக அதிகம்

என்வே, மேற்கண்டவை போன்ற மலைகளில் ஏற்றதொரு இடத்தைத் தேர்வு செய்து, அங்கு கேரளாவின் சபரிமலைக் கோயிலைப் போன்றதொரு கோயிலை, கடவுளால் அனுப்பப்பட்ட நம் பிரதமர் மோடிஜி அவர்கள் உருவாக்கிட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

இதனால், மோடிஜி, முர்மு, அமித்ஸு போன்ற மேலிடத்தார் மட்டுமல்லாமல், டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரங்களில் வாழும் ஏழைபாழைகளும் மேற்கண்ட கோயிலுக்குச் சென்று ஐயப்பனின் அருளைப் பெறுவது எளிதில் சாத்தியமாகும்.

மோடிஜி மேற்கொள்ளவுள்ள இந்த இறைப்பணிக்கு அம்பானி, அதானி போன்ற அருளாளர்கள் மட்டுமல்லாமல், பக்திமான்களில் பலரும் நிதியை வாரி வழங்குவார்கள் என்பது உறுதி. 

அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் புகலிடங்கள், அரசு மருத்துவமனைகள், போதுமான வசதியில்லாத தனியார் மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றிற்கு உதவுவதால் கிடைக்காத புண்ணியத்தை, பக்திப் பணிகளுக்கு உதவுவதன் மூலம் பெறலாம் என்பது அறியத்தக்கது[ஹி... ஹி... ஹி!!!]!

சாமியே சரணம் ஐயப்பா!

புதன், 22 அக்டோபர், 2025

அடித்த பாம்பை[பாகிஸ்தான்] அடிக்கும் பராக்கிரமர்கள் மோடியும் ராஜ்நாத்தும்!!!

ண்மையில் நான்கே நான்கு நாட்கள் நடைபெற்ற ‘இந்தியா-பாகிஸ்தான் போர், பாகிஸ்தான்காரன் மோடியின் பாதக்கமலங்களைக் கண்ணீரால் கழுவியதால் அல்ல, சட்டாம்பிள்ளை டிரம்ப் மிரட்டலால்தான் நிறுத்தப்பட்டது என்பது உலகம் அறிந்த ரகசியம் என்கிறார்கள் நடுநிலை நாட்டவர்கள்.

இந்த ரகசியத்தை அறிந்திருந்தும், தான் நடத்திய ‘ஆப்ரேசன் சிந்தூர்’தான் பாகிஸ்தானியனைப் பணிய வைத்ததாக அவ்வப்போது அறிவிப்புச் செய்து ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறார் மோடி.

அவர் அடித்த அடியில் நிலைகுலைந்து, மீண்டெழும் வகையறியாமல் தவித்துக்கிடப்பதாகச் சொல்லப்படும், நம் ‘பக்கா’ எதிரி பாகிஸ்தானியனைக் மிரட்டி[சுற்றிவளைத்து]க், குலைநடுங்கச் செய்திருக்கிறார் நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தபோதுதான், மேற்கண்டவாறு மிரட்டினார் அவர். அது.....

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் நமது பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது.” 

“ஒட்டுமொத்த உலகின்[அற்பப் பாகிஸ்தான் உள்ளடக்கம்] ஒவ்வொரு மில்லிமீட்டரும் பிரமோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது” -என்றிப்படி அவர் பேசியிருந்தால், அதைக் கேட்டு ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் உடம்பும் சிலிர்த்திருக்கும்!

வாழ்க மோடி! ராஜ்நாத்தும் வாழ்க!

https://www.hindutamil.in/news/india/1380198-every-inch-of-pakistan-within-brahmos-range-rajnath-singh.html

செவ்வாய், 21 அக்டோபர், 2025

அயல் கோள் குடியேற்றம்! ஆராய்கிறார்களாம்!! வெங்காயம்!!!

//சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பதும், சிவப்புக் கோள் என்றழைக்கப்படுவதுமான செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தொடர்ந்து மேற்கொண்டுள்ளது// என்பது அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகும் செய்தியாகும்*

எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவர்களை அனுப்பிப் பரிசோதனை செய்வது, எதிர்காலத்தில் மனிதர்களை அங்குக் குடியேற்றம் செய்வது ஆகியவை குறித்தத் திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளதாம்.

பூமியில் உணவு, உறைவிடம், போன்றவற்றிற்கான பற்றாக்குறை நிலவுவதாலும், சுற்றுச்சூழல் பெருமளைவில் மாசடைவதாலும், ஒரு காலக்கட்டத்தில் இங்கு மனிதர்கள் வாழ இயலாத இயற்கைச் சூழல் உருவாகும் என்பதாலும் ஏற்புடைய கோளிலோ கோள்களிலோ மனிதர்கள் குடியேறுவது பற்றி ஆராய்கிறார்கள்.

குடியேறினால் மத வெறி, இன வெறி, ஆதிக்க வெறி, வஞ்சகம், சூதுவாது போன்ற அத்தனைக் கெட்டக் குணங்களும் மனிதர்களிடமிருந்து காணாமல் போக்கக்கூடிய ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டால், அது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அது சாத்தியப்படாது என்றால்.....

தெரிந்த அத்தனைத் தில்லுமுல்லுகளையும் அயோக்கியத்தனங்களையும் செய்துகொண்டிருக்கிற மனிதர்கள், இந்தப் பூமி வாழ்வதற்குத் தகுதியற்றதாக ஆகும்போது, கூண்டோடு கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ நரகமோ, வேறு எங்குமோ போய்த் தொலையட்டுமே[நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. ஹி... ஹி... ஹி!!!].

எப்போதோ பூமி வாழத்தகுதியற்றதாக ஆகுமாம்; மனித இனம் அழியுமாம். அதை வாழவைக்க ஆராய்ச்சி செய்கிறார்களாம் ஆராய்ச்சி! வெங்காயம்!!

* * * * *

https://www.kuriyeedu.com/?p=79515

திங்கள், 20 அக்டோபர், 2025

மோடியின் தீபாவளி வாழ்த்து... வரவேற்பும் வசவும்!

‘தீபாவளி என்பது, 100% கற்பனையான ஒரு புராணக் கதையிலிருந்து[அப்போது இருந்திராத நரகாசுரனை எப்போதும் இல்லாத கிருஷ்ணப் பரமாத்மா வதம் செய்தது]  உருவாக்கப்பட்ட ஒரு கொண்டாட்ட நாள்[பண்டிகை] ஆகும்.தீமையை எதிர்த்துப் போராடி வெல்வதற்கான ‘தில்’ இல்லாமல், கதைகளில் அது நிகழ்த்தப்படுவதை வரவேற்றுக் குதூளிகளிக்கும் நம் மக்கள் இதைக் கொண்டாடுவது வியக்கத்தக்கதல்ல.

அரசியல் தலைவர்கள் இந்தக் கூத்துக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும் வழக்கமாகிப்போன ஒன்று.

கீழ்க்காண்பது* மூடநம்பிக்கை வளர்ப்பில் அடுக்கடுக்காய்ச் சாதனைகள் நிகழ்த்திய நம் பிரதமர் மோடி தெரிவித்துள்ள தீபாவளி வாழ்த்து.

வாழ்த்தின் பிற்பகுதியில், /‘ஒளி தீபங்களை[அறிவொளி?] மலரச் செய்து உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்’/ என்று அவர் கூறியிருப்பதே போதுமானதாகும்.

/‘ராமர் அநீதியை எதிர்த்துப் போராடும் பலத்தைத் தருகிறார்’/ என்று முற்பகுதியில் கூறியிருப்பதுதான் நகைப்புக்கிடமானதும்[தன் இறுதி மூச்சுவரை இவரே இந்தியாவின் பிரதமராக நீடிக்க ராமன் அருள் புரிவானாக] தன்னம்பிக்கையைச் சிதைப்பதுமான செயலாகும்.

மோடியின் வாழ்த்துச் செய்தி:

//அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பிய பிறகு வரும் 2ஆவது தீபாவளி. ராமர் அநீதியை எதிர்த்துப் போராடும் பலத்தைத் தருகிறார். ஆபரேஷன் சிந்தூர் இதற்குத் தலைசிறந்த உதாரணம். நாடு முழுவதும் ஒளி தீபங்களை மலரச் செய்து உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்” என அவர் பெயரில் வெளியான வாழ்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது// -ஊடகச் செய்தி.

                                      *   *   *   *   *


ஞாயிறு, 19 அக்டோபர், 2025

ஆறறிவைச் சிதைக்க ஓர் ஆண்டவன் போதும்; ஆன்மா எதற்கு?

‘ஆவி அல்லது ஆன்மாவை அழிக்க முடியாது’ என்று கிறித்தவ வேதம்[bible] கூறுகிறது. உடல் இறந்தாலும், ஆவி தொடர்ந்து வாழும். -https://www.blueletterbible.org/faq/don_stewart/don_stewart_102.cfm

‘ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் படைக்கப்பட்டபோது, ​​அந்த நேரத்தில், அல்லாஹ் பிறக்கவிருக்கும் அனைத்து மனிதர்களின் ஆன்மாக்களையும் படைத்தான். ஆன்மா பிறப்பற்றது; அழிவற்றது’ என்கிறது இஸ்லாம் -https://iraiyillaislam.blogspot.com/p/blog-page_99.html

‘ஆன்மா அழியாது; அது அழிவற்றது’ என்று இந்து மதம் கூறுகிறது. உடலின் மரணத்திற்குப் பிறகு ஆன்மா உடலை விட்டு வெளியேறி, கர்மாக்களின் அடிப்படையில் மறுபிறவி எடுக்கிறது என்கிறது அது.

‘ஒவ்வொரு உயிருக்கும் நிரந்தரமான ஆன்மா உண்டு என்றும், கர்ம வினைகளால் அதன் விடுதலைக்கான பாதை அமையும்’ என்றும் நம்புகிறது சமண மதம்.

ஆன்மா அழியாதது என்றும், உடம்பு அழிந்த பிறகும் அது இருந்துகொண்டிருக்கிறது என்றும் பெரும்பாலான மதங்கள் நம்புகின்றன. சில மதங்கள் ஆன்மாவை இறைவனின் பகுதியாகவும், வேறு சில ஆன்மாவை உடலற்ற, நித்தியமான ஒன்றாகக் கருதுகின்றன. -https://www.google.com/search?q=

இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்மா கடவுளுடன் இணைய வேண்டிய அவசியமில்லை; ஏனென்றால், அதுவே கடவுள் என்றும் சொல்லப்படுகிறது[சொல்லுகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்களே]. -https://www.dadabhagwan.org/path-to-happiness/spiritual-science/what-is-a-soul/nature-of-soul/

இவ்வாறாக, ‘ஆன்மா’ என்று ஒன்று உணடு என்று மதங்கள் பலவற்றாலும் வலியுறுத்தப்படும் நிலையில், நம்மில் மிகப் பெரும்பாலோர் ‘ஆன்மா’வை நம்புவதில் வியப்பேதுமில்லை.
நம்பாத நாம் முன்வைக்கும் அதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்.

‘அனைத்தையும் படைத்த கடவுளே சர்வ வல்லமை படைத்தவர்[படைப்பது & காப்பது & அழிப்பது] என்கிறார்கள் பெரும்பாலான மதவாதிகள். அவரால் அழிக்க முடியாததாக ஆன்மா என்று ஒன்று இருப்பது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை’ என்பதே அது.

மேலும், மதவாதிகளிடம் நாம் வேண்டிக்கொள்வது.....

மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைக்க உங்களால் கற்பனை செய்யப்பட்ட கடவுளே போதும். ஆன்மா, கர்மா, மறுபிறப்பு எல்லாம் வேண்டாமே.

சனி, 18 அக்டோபர், 2025

ஆஸ்பிரின்... ஒரு முன்னெச்சரிக்கை!

 Conversation

Dr Sudhir Kumar MD DM

@hyderabaddoctor

//அவருக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அந்த ஆலோசனையை நம்பி, அவர் தினசரி மாத்திரையை எடுத்துக்கொண்டார்.

விளைவு?

சில மாதங்களுக்குப் பிறகு, அவரது வலது பக்கக் கண்களால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மூளை ஸ்கேன் செய்யப்பட்டதில், மூளையில் ரத்தக்கசிவு[இடது பாரிட்டல்-ஆக்ஸிபிடல்> left parieto-occipital region] இருப்பது தெரியவந்தது. மற்றப்படி, இரத்தப்போக்குக்கு வேறு எந்த காரணமும் கண்டறியப்படவில்லை.

பல தசாப்தங்களாக, ஆஸ்பிரின் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியற்றைத் தடுப்பதற்கான ஒரு மருந்து என்று நம்பப்படும் நிலையில், மூளையில் ஆபத்தான இரத்தப்போக்கை இது ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஆரோக்கியமான வயதானவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பின் எடுத்துக்கொள்ளுதல் கூடாது.

நன்கு பரிசோதிக்கப்பட்ட, அதிக இதய ஆபத்து உள்ள நடுத்தர வயதுடையவர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது.

எனவே, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் புகைபிடிப்பதை நிறுத்தலாம்; தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம்(பெரும்பாலான நாட்களில் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடை); நன்மைதரும் பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை உண்ணலாம்.

ஆகவே, 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு முதன்மைத் தடுப்புக்காக ஆஸ்பிரின் பரிந்துரைத்தல் கூடவே கூடாது.

  * * * * *

https://www.msn.com/en-in/health/other/cmc-vellore-doctor-cracks-the-case-of-65-year-old-who-suddenly-lost-vision-brain-bleed-found-but-no-heart-attack-or-stroke-what-happened/ar-AA1LSl49?ocid=winp2fptaskbarhover&cvid=23fd68f50fe2409f9519b5364b982eb6&ei=20 -5:23 pm · 4 Sep 2025·13.6K Views