“கடவுள் இருக்கிறார்” என்று சொல்வது நம்பிக்கையால் அல்லது அனுமானத்தால்தான்[‘தொலைவில் புகை தென்பட்டால் அதை வெளியிடுவது கண்ணுக்குப் புலப்படாத நெருப்பு’ என்பது போல்> மேகம்கூடப் புகை போலக் காட்சியளிக்கக்கூடும்].
ஐம்புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அவரை உறுதிப்பட அறிந்தவர்களோ பிறருக்கு அறிவுறுத்தியவர்களோ, உணர்ந்தவர்களோ உணர்த்தியவர்களோ இல்லை[இயலாத நிலையில் கடவுள் உண்டு என்று பரப்புரை செய்தல் முறையல்ல].
ஆயினும், கடவுளைத் தாங்கள் அறிந்திருப்பதாகவும், உணர்ந்திருப்பதாகவும், பார்த்திருப்பதாகவும் சொல்லித் திரிபவர்களைத்தான் நம் மக்கள் அவதாரங்கள் என்றும், ஆன்மிக ஞானிகள் என்றும், மகான்கள் என்றும் நம்பி ஏமாறுகிறார்கள்.
“நேற்று நட்டநடுச் சாமத்தில் அண்டவெளியில்[முழுவதும்] கடவுள் காட்சியளித்தார்; உலகெங்கும் ஒலிக்கும் வகையில் “கடவுள் பேசுகிறேன், நான் இருப்பது 100% உண்மை. என்னை மனம்போனபடி ஏசும் நாத்திக நாசகாரக் கும்பலின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகுவதால் நான் காட்சியளிப்பதும் உரையாற்றுவதும் அவசியமாயிற்று” என்றார்” என்பதாக எவரேனும் வதந்தி பரப்பினால் நீங்கள் நம்புவீர்களா?
நீங்கள் எப்படியோ, கடவுள் மேல் சத்தியமாக நான் நம்பமாட்டேன். ஹி... ஹி... ஹி!!!

