எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நடிகர் ‘விஜய்’க்குக் ‘குஞ்சி’யில் காயம்!!!

//ரஷ்யாவில் நடக்கும் ‘கோட்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த நடிகர் 'விஜய்', தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காகச் சென்னை வந்து நீலாங்கரையிலுள்ள ஓட்டுச் சாவடியில் வாக்களித்தாராம்.

ரசிகர்களின் அன்புத் தொல்லைக்கு அவர் ஆளாகிவிடாமல் காவல் துறையினர் அவரைப் பாதுகாத்து அனுப்பி வைத்தார்களாம்.

இருப்பினும், அவர் கையிலிருந்த காயத்தை[சின்னஞ் சிறுசு]ப் பார்த்துவிட்டு அவரின் ரசிகக் குஞ்சுகளும், தொண்டரடிப்பொடிகளும் கண்ணீர் சிந்திக் கதறி அழுதார்களாம்.

தமிழ் மக்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் இப்படியானதொரு செய்தியை, அதி முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது தினமலர்[இன்னும் பல ஊடகங்களிலும் இது குறித்த செய்தி வெளியாகியிருக்கலாம்]. 

தினமலரோ பிற ஊடகங்களோ வெளியிடாத ஒரு செய்தி{ரஷ்யாவிலிருந்து விஜய்யுடன் திரும்பிய ஓர் உதவி இயக்குநர்[நமக்கு மிக மிக மிக நெருங்கிய உயிர் நண்பர்] சொன்ன தகவல் இது}.....

'விஜய்'க்குக் அந்தரங்க உறுப்பான ‘குஞ்சி’யிலும் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாம்.

இதை அறிந்தால், விஜய்யின் ரசிகர்களில் சிலரோ பலரோ தீக்குளித்து உயிர் துறப்பார்கள் என்பதால் ரகசியம் காத்ததாக உ.இயக்குநர் நம்மிடம் சொன்னார்.

விஜய்யின் காயங்கள் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்!

https://cinema.dinamalar.com/tamil-news/120770/cinema/Kollywood/Vijay-injured-his-hand-when-he-came-to-drive.htm

சாமிகளுக்குக் கல்யாணம்! கருமாதி?!

ர் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வாழ அனுமதி வழங்கும் ‘சடங்கு’தான் திருமணம். இதை முன்னின்று நடத்துபவர்கள் சாட்சிகளான உற்றார் உறவினர்கள்.

விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு, மனிதர்களிடையே குடும்ப வாழ்க்கை முறை உருவானதன் பின்னர் இந்தச் சடங்கு பெரியோர்களால் நடைமுறை ஆக்கப்பட்டது.

காரணத்தைத் தொல்காப்பியர் சொல்கிறார், “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்[சான்றோர்கள்] யாத்தனர் கரணம்[திருமணச் சடங்கு >தொல். பொ. 145 ]” என்று.

ஆணும் பெண்ணும் ஒரு குடும்பமாக வாழ்ந்த அந்தக் காலக்கட்டத்தில், அவர்களில் ஆணோ பெண்ணோ, இணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாமை போன்ற காரணங்களால், பொய் சொல்லுதல்[“இவளுடன்/இவனுடன் நான் இணைந்திருந்து உடலுறவு கொள்ளவில்லை என்பது போல] முதலான குற்றங்களை இழைக்கலானார்கள்.

இவ்வகைக் குற்றங்கள் அதிகரித்தபோது, இவற்றைத் தடுப்பதற்காக, சான்றோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்துத் திருமணச் சடங்குகளை உருவாக்கினார்கள் என்பது அறியத்தக்கது.

எனவே, மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்காக நடைமுறை ஆக்கப்பட்டவையே திருமணச் சடங்குகள் ஆகும்.

இந்தச் சடங்குகளால் மனித சமுதாயம் பெற்ற நன்மைகள் முன்பு எப்படியோ, இன்றளவில், சடங்குகளை அர்த்தமற்றவை ஆக்கி, குடும்ப நல்லுறவைச் சீர்குலைப்பது என்பது அவ்வப்போதைய நிகழ்வாகிவிட்டது.

சீர்குலைப்பவர்கள் கணிசமானவர்கள்தான் என்பதாலோ என்னவோ, பெரும்பான்மை மக்களுக்கு இச்சடங்கு இன்றளவும் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.

ஆக, திருமணம்[கல்யாணம்] என்பது மனிதர்களுக்காக மனிதர்களால் செய்யப்படும் சடங்கு என்பது உறுதியாகிறது.

இவ்வாறானதொரு புரிதலுக்கிடையே நமக்கு எழும் பிரமாண்டமானதொரு ஐயம்[சந்தேகம்] என்னவென்றால்.....

சாமி[கள்] உண்டோ இல்லையோ, இருப்பதாகக் கொண்டாலும், 

சாமிகளில் ஆண், பெண் பாகுபாடு உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும், 

அவர்கள் தங்களுக்குள் உடலுறவு என்னும் அந்தரங்கச் சுகத்தை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மையாயினும்.....

பொய்யுரைத்தல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் போன்ற இழிசெயல்களை[குற்றங்களை] அவர்கள் செய்திட வாய்ப்பே இல்லாத[அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர்கள்> கடவுள்கள்< அல்லவா?] நிலையில்.....

ஆண் பெண் சாமிகளுக்குத் திருமணம் செய்தல் சடங்கு எதன்பொருட்டு?

மனிதர்களுக்கான திருமணச் சடங்குகளை உருவாக்கியவர்கள் மனிதர்கள்.

தெய்வங்களுக்கான திருமணச் சடங்குகளை உருவாக்கியவர்கள் யார்?

உருவாக்கத் தூண்டியவர்கள் யார்?

வேத விற்பன்னர் எனப்படுபவர்கள்[?].

இவ்வாறான மிக உயரிய அந்தஸ்தைத் தாங்களாகவே தங்களுக்கு வழங்கிக்கொண்டு, படிப்பறிவில்லாத மக்களை நேற்றுவரை ஏமாற்றித் தங்களை மேம்படுத்திக்கொண்டவர்கள் அவர்கள்.

படிப்பறிவில்லாததால் அன்று மக்கள் ஏமாளிகளாக இருந்தார்கள்.

இன்று கல்வியறிவு இல்லாதவர்களே இல்லை என்னும் நிலை.

இந்நிலையிலும், மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் கல்யாணம்[எத்தனை எத்தனை முறை நடத்தினார்கள்? இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு நடத்துவார்கள்? மனித இனம் உள்ளவரையா, கடவுள்கள் இருக்கும்வரையா?] செய்வதாகச் சொல்லி, தினம் தினம் கண்டதைத் தின்று மலம் கழித்து வாழும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், ‘புரோகிதர்’ என்னும் பெயரில் அன்னை மீனாட்சிக்கே தாலி கட்டுகிறார்களே.....

இந்த அயோக்கியத்தனத்தை மனித உருவில் அலையும் லட்சக்கணக்கான மூடர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்ப்பார்கள்?

                                         *   *   *   *   *

எச்சரிக்கை!

இந்து மதத்தைத் தாக்கி எழுதும் நீ, இஸ்லாம், கிறித்தவம் ஆகியவற்றைத் தாக்கி எழுதாதது ஏன் என்று சங்கிகள் கேள்வி எழுப்ப வேண்டாம்.

மூடநம்பிக்கைகளைச் சாடுவதில் எந்தவொரு மதத்திற்கும் நாம் விதிவிலக்குத் தந்ததில்லை[மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு இத்தளத்தில் தேடலாம்]. 

அவர்களும் நம்முடன் சண்டையிட்டதில்லை.

பெண்கள் ‘இது’ விசயத்தில் மகா மகா புத்திசாலிகள்!!![‘கோரா’ கேள்வி-பதில்]

“ஆண்கள் பெண்களை வெளிப்படையாகக் கவர முற்படுவது போல், பெண்கள் ஏன் செய்வது கிடையாது?” என்பது கேள்வி[Quora].

 வழங்கும் ‘சுவையோ சுவை’ பதில்:

உண்மையைச் சொன்னா, தன்னைச் சுத்திச் சுத்தி வந்து ஆணை அலையவிடுவது ஒரு பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும். அவன் மீது அடிக்கடிக் கடைக்கண் பார்வையை வீசிக் குழப்பிவிடுவது[”என்னைக் காதலிக்கிறாளா, இல்லையா?”], அவன் தன் பின்னால் சுத்துவதைப் பார்த்தும் பார்க்காதது போல் ரசிப்பது. அவன் தன்னைக் கடந்து போகும்போது, முகத்தில் மெல்லிய புன்னகையைப் படரவிடுவது, ஒரு கட்டத்தில், அவனைக் காணாமல் தவிப்பது, காணும்போதெல்லாம் வெட்கித் தலை குனிவது போன்ற செயல்களில் பெண் ஈடுபடுவாள். இது அனைத்துப் பெண்களுக்கும் பொதுவான குணம்[பலவீனம்?].

சுருங்கச் சொன்னால், பெண் எப்போதுமே தன் உள்ளத்து உணர்ச்சிகளைக் குறிப்பால் உணர்த்துவாள்; வார்த்தைகளால் அல்ல.

இது விசயத்தில் அவள் மகா புத்திசாலியும்கூட.

எப்படி?

தன் காதலை வாய் திறந்து சொல்லாமல், ‘அவன்’ வந்து சொல்லட்டும் என்று காத்திருப்பாள். 

காரணம்.....

சின்னச் சின்னச் சண்டைகள்[ஊடல்] வரும்போது, 

”நீதானே என்னைச் சுத்திச் சுத்தி வந்து, உன்னைக் காதலிக்கிறேன். நீ சம்மதிக்கலேன்னா உயிரை விட்டுடுவேன்னு சொன்னவன்” என்று கேட்டு அவன் வாயை அடைக்கலாம்.

நம் மக்கள் மத்தியில் காதல் என்பது ஒரு தவறான வார்த்தை; கவருவது அதைவிடத் தவறான வார்த்தை. ஆண்கள் இதைச் செய்தால் ரசிப்பாங்க. இதையே ஒரு பெண் செய்தால் நடத்தை கெட்டவள்னு பழி தூற்றுவாங்க. அதனால்தான், இது விசயத்தில் பெண்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்காங்க.