எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 13 செப்டம்பர், 2025

மனிதர்களுக்கு இதயங்கள் இரண்டு!?

“குதிகால்[கன்றுத் தசை] நம்முடைய இரண்டாவது இதயமாம், இது நம் உடல் முழுவதும் இரத்தத்தை மேல்நோக்கிச் செலுத்துவதால்.” -சொல்கிறவர் ஒரு  மருத்துவ அறிஞர்.

நிலத்தின் ஈர்ப்புவிசையானது கால்களில் இருந்து ரத்தம் மேல்நோக்கிப் பாய்வதைக் குறைக்கிறது. குதிகால் தசைகளைப் பராமரிப்பதன் மூலம் இந்தக் குறையைப் போக்கலாம்” என்கிறார் அவர்.

பராமரிப்பு என்பது குதிகாலுக்குப் பயிற்சி கொடுப்பதுதான்.

நடக்கும்போதும் ஓடும்போதும் குதிக்கும்போதும் கால்களை நீட்டி மடக்கும்போதும் குதிகால் ரத்தக் குழாய்கள்[+நரம்புகள்] இறுக்கி அழுத்தப்படுகின்றன. இதனால் ரத்தம் மேல்நோக்கிப் பாய்கிறது; பரவுகிறது.

மேலும், இப்பயிற்சி, உடம்பின் கீழ்ப்பகுதியில் உள்ள உறுப்புகள் தளர்ச்சியடைவதைத் தடுக்கிறது; பாதங்களில்[காலின் கீழ்ப் பகுதிகளில்] ரத்தம் உறைவதையும், அது வீங்குவதையும்கூட இது தடுத்துநிறுத்துகிறது; ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைக்கிறது.

மேற்கண்ட பயிற்சிகளுடன்[நடப்பது, ஓடுவது...] முன்னங்கால்களில் நிற்பதையும், சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் தினசரிப் பயிற்சிகளாகச் செய்யலாம்.

மும்பை சென்ட்ரலில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனைகளின் ஆலோசகர் & இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர் பாரின் சாங்கோய் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இவை[https://www.hindustantimes.com/lifestyle/health/cardiologist-explains-you-have-2-hearts-when-1-heart-weakens-the-other-pays-the-price-second-heart-is-in-your-calf-101756350330855.html].

சில பயிற்சிகள்:

துணை ராணுவம் போதாது, மோடிக்குப் ‘பக்கா’ ராணுவப் பாதுகாப்பு அவசியம்!

இன்று மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடிக்கு அங்குக் குவிக்கப்பட்டுள்ள ‘துணை ராணுவம்’['துணை ராணுவம் என்பது ஒரு நாட்டின் முறைப்படுத்தப்பட்ட இராணுவ அமைப்பிற்கு வெளியே செயல்படும் ஒரு படை அல்லது அமைப்பு ஆகும். இந்தப் படைகள் இராணுவ அமைப்புகளைப் பின்பற்றி, இராணுவத்தைப் போன்ற பயிற்சி & உபகரணங்களைக் கொண்டிருக்கலாம்’] பாதுகாப்பு அளிக்கும் என்பது ஊடகங்களில் வெளியான செய்தி.

இந்தியாவை 2047இல் ‘நம்பர் 3’[‘1’ நமக்கு ராசியான நம்பர் அல்ல] உயர் பொருளாதார நாடாக ஆக்குவதற்கு ஊனுறக்கம் இல்லாமல்[ஒரு நாளில் 3 அல்லது 4 மணி நேரமே உறங்குவதாக அவரே கூறியிருக்கிறார்] பாடுபடும் மோடியை நம் மக்கள் தம் உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்.

எனவே, மணிப்பூர் சென்று திரும்பும்வரை அவருக்குப் பாதுகாப்பு வழங்கிடத் துணை ராணுவம் போதாது; ராணுவமே அந்தக் கடமையைச் செய்திடல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.

மோடி வாழ்க! மணிப்பூர் வாழ்க; வளர்க!!